மேலும் அறிய

Trump Vs Iran: “இங்கு ஒன்று வெடித்தால், அங்கு நான்கு வெடிக்கும்“; ட்ரம்ப்பை மிரளவிட்ட ஈரானின் பதிலடி

ஈரானின் எண்ணெய் உட்கட்டமைப்புகள் வெடித்துச் சிதறும் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அதற்கு சரியான பதிலடியை கொடுத்துள்ளது ஈரான். ட்ரம்ப்பின் மிரட்டல் என்ன.? ஈரானின் பதில் என்ன.? பார்க்கலாம்.

அடுத்த 3 நாட்களுக்குள் ஈரானின் எண்ணெய் உட்கட்டமைப்புகள் வெடித்துச் சிதறும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிய நிலையில், அதற்கு பதிலடி கொடுத்துள்ள ஈரான், தங்களுக்கு ஏற்படும் சேதத்தைப் போன்று நான்கு மடங்கு சேதத்தை திருப்பித் தருவோம் என கூறியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

“ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் 3 நாட்களில் வெடித்துச் சிதறும்“

யுரேனிய செறிவூட்டலை கைவிட்டு அணுசந்தி ஒப்பந்தம் மேற்கொள்வது, கையிருப்பில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைப்பது, ஹார்முஸ் முடக்கத்தை கைவிடுவது உள்ளிட்ட நிபந்தனைகளை அமெரிக்கா விடுத்து வருவதால், ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் இழுபறி நீடித்து வருகிறது. இதே நேரத்தில், ஈரானின் துறைமுகங்களை முற்றுகையிடும் அமெரிக்காவின் செயல்பாடும் தொடர்ந்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், ஈரான் ஒரு ஒப்பந்தத்திற்கு வராவிட்டால், அங்குள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடித்துச் சிதறும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டியுள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ட்ரம்ப், ஈரானில் எண்ணெய் குழாய்களில் இருந்து கொள்கலன்களிலோ அல்லது கப்பல்களிலோ எண்ணெயை நிரப்ப முடியாததால், ஏதேனும் ஒரு காரணத்தால் குழாய் மூடப்பட்டால், அந்த குழாய் வெடித்துவிடும் என்று கூறியுள்ளார். 

அது திடீரென வெடித்துச் சிதறும் ஒரு நிகழ்வு என்றும், அது நடப்பதற்கு இன்னும் 3 நாட்கள் தான் உள்ளது என்றும் அவர்கள் கூறுவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அது வெடித்துச் சிதறும் போது என்ன நடந்தாலும் சரி, அதை முன்பு இருந்ததைப் போல மீண்டும் ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது என்றம், இது மிகவும் சக்திவாய்ந்த விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு என்னை அணுகலாம்

தொடர்ந்து, பேர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஈரான் தலைமை தன்னை அணுகலாம் எனவும், அவர்கள் பேச விரும்பினால், தங்களை அழைக்கலாம் என்றும் ட்ரம்ப்  கூறியுள்ளார். “அதற்காக தொலைபேசி வசதி உள்ளது என்பது உங்களுக்கு தெரியும், எங்களிடம் நல்ல பாதுகாப்பான இணைப்பு வசதிகள் உள்ளன“ என்றும் ட்ரம்ப் பேசியுள்ளார்.

“இங்கு ஒன்று வெடித்தால், வளைகுடாவில் நான்கு வெடிக்கும்“

ட்ரம்ப்பின் இந்த அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுத்துள்ள ஈரான் எரிசக்தி மேம்படுத்துதல் மற்றும் மேலாண்மை அமைப்பின் தலைவர் இஸ்மாயில் சகப் எஸ்பஹானி, அமெரிக்காவின் இந்த முற்றுகையின் விளைவாக, எண்ணெய் கிணறுகள் உள்ளிட்ட எங்களது உள்கட்டமைப்பிற்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அவர்களுக்கு ஆதரவளிக்கும் வளைகுடா நாடுகளில் அதே போன்ற உள்கட்டமைப்புகளுக்கு, எங்களுக்கு ஏற்பட்ட சேதத்தை விட நான்கு மடங்கு அதிக சேதத்தை நாங்கள் ஏற்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், எங்களின் கணிதமே வேறு என்று கூறியுள்ள அவர், “1 எண்ணெய் கிணறு = 4 எண்ணெய் கிணறுகள்“ என்று கூறி பீதியை கிளப்பியுள்ளார்.

ரஷ்யா சென்ற அப்பாஸ் அரக்சி

இதனிடையே, தனது பாகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு சென்றுள்ளார் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி.

அங்க, ரஷ்ய அதிபர் புதினை அவர் சந்தித்து, போர் நிறுத்தம், எண்ணெய் வர்த்தக சூழ்நிலைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

தலைப்பு செய்திகள்

Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
Iran Announcement: ''அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
''அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
"எஸ்.ஐ மேலேயே கைய வச்சியா?" - பளார் விட்ட தஞ்சை இளைஞரின் கதி என்ன? என்னென்ன பிரிவுகளில் கேஸ்?
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
SUV தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
Embed widget