மேலும் அறிய

செத்த பாம்ப எத்தன தடவ அடிப்பீங்க..மீண்டும் தணிக்கையில் விஜயின் ஜனநாயகன்!

விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தை இன்று மறுதணிக்கை குழு மீண்டும் பார்வையிட இருக்கிறார்கள்.தணிக்கை குழு இப்படத்தை பார்வையிடுவது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது

சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிடுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. முன்னதாக தேர்தலுக்கு முன்பே படத்தை மறுதணிக்கை குழு பார்வையிட்ட நிலையில் ஏப்ரல் 24 ஆம் தேதி தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும் என்று படக்குழு எதிர்பார்த்து காத்திருந்தனர். இப்படியான நிலையில் ஜனநாயகன் படத்தை இன்னொரு முறை பார்த்து பரிசீலித்த பிறகே படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும் என தணிக்கை வாரியம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செத்த பாம்ப எத்தன முறை தான் அடிப்பீங்க என்பது போல் விஜயின் ஜனநாயகன் படத்தின் நிலையாகியுள்ளது. எச் வினோத் இயக்கத்தில் விஜயின் கடைசி படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி பொங்கலை ஓட்டி வெளியாக இருந்தது. ஆனால் இப்படத்திற்கு சென்சார் போர்ட் தணிக்கை சான்றிதழ் தர மறுத்தது இதனால் படதயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. படத்திற்கு நல்லது நடக்கும் என எதிர்பார்த்து நீதிமன்றம் சென்ற பட தயாரித்து நிறுவனத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது. படத்தை மறுதணிக்கை செய்யாமல் தணிக்கை சான்றிதழ வழங்கமுடியாது என தணிக்கை வாரியம் உறுதியாக வாதாடியது. இறுதியாக ஜனநாயகன் படத்தை மறுதணிக்கைக்கு அனுப்ப படக்குழு முடிவு செய்தது. கடந்த மார்ச் 17 ஆம் தேதி ஜனநாயகன் திரைப்படத்தை 8 பேர் கொண்ட மறுபரிசீலனைக் குழு பார்வையிட்டது. தேர்தல் முடிந்தபிறகு ஏப்ரல் 28 ஆம் தேதி  படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இணையத்தில் லீக் 

இப்படியான நிலையில் தான் ஜனநாயகன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் படத்தில் பணியாற்றிய சிலர் கசியவிட்டர். இணையத்தில் வெளியான ஜனநாயகன் திரைப்படத்தை பலர் பார்வையிட்டு விமர்சனங்களே பதிவிட்டுள்ளார். இதனால் இப்படத்தை திரையரங்கில் பார்க்கும் ரசிகர்களின் ஆர்வம் மொத்தமாக குறைந்து போனது. ஏற்கனவே படத்தின் ஓடிடி டீலை அமேசான் பிரைம் நிறுவனம் கேன்சல் செய்திருந்த நிலையில் படத்தை திரையரங்குகளில் குறைந்த விலைக்கு வெளியிட மட்டுமே விநியோகஸ்தர்கள் முன்வந்துள்ளார்கள். 

தணிக்கை சான்றிதழில் மீண்டும் தாமதம்

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. வரும் மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து தேர்தல் முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையில் ஜனநாயகன் படத்திற்கு எப்படியாவது தணிக்கை சான்றிதழ் பெற்று படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க படக்குழு திட்டமிட்டு வந்தது. ஆனால் ஜனநாயகன் படத்தை இன்னும் ஒரு முறை பார்வையிட்ட பின்னரே தணிக்கை சான்றிதழ் வழங்க முடியும் என சென்சார் போர்ட் தெரிவித்துள்ளதாம். அதன்படி மறுபரிசீலனை குழுவைச் சேர்ந்த  இரண்டு பேர் இன்று ஜனநாயகன் படத்தை பார்வையிட உள்ளன. 

தணிக்கைச் சான்றிதழ் மேலும் தாமதமானால் மற்றும் எதிர்ப்பு அதிகமாக இருந்தால், தளபதி விஜய் நடித்த இப்படத்தை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மே 27, 2026 அன்று வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Embed widget