மேலும் அறிய

Armstrong Death Rowdy Encounter : ஆம்ஸ்ட்ராங் கொலை ரவுடி.. அதிகாலை நடந்த ENCOUNTER! போலீஸ் அதிரடி!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி திருவெங்கடம் இன்று அதிகாலை காவல்துறையால் எண்கவுண்டர் முறையில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ரவுடி கும்பலால்  படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டு தற்போது பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
 
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 11 பேரிடமும் 5 நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, கடந்த இரண்டு தினங்களுக்கு முன் 11 பேரையும் காவலில் எடுத்த செம்பியம் போலீசார், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதில் ஒருவர் தான் ரவுடி திருவெங்கடம். இவருக்கு ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங்க் ஆதரவாளரான தென்னரசு கொலை வழக்கில் தொடர்புடையதாக சொல்லபடுகிறது. 

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையின் போது, நாட்டு வெடிக்குண்டு, பயங்கரமான ஆயுதங்களுடன் ஒரு பை கண்டறியப்பட்டது.

அது குறித்து விசாரனை செய்த போலீஸ், ஆயுதங்கள் எங்கே பதிக்கி வைக்கபட்டிருந்தது என்று விசாரித்த போது, மாதவரத்தில் தாங்கள் திட்டம் தீட்டியதையும், ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தையும் தெரிவித்துள்ளார் திருவெங்கடம்.

உடனடியாக அவரை அழைத்துக்கொண்டு மாதவரம் ஆட்டுசந்தைக்கு வந்த காவல்துறையினர், பதுக்கி வைத்திருக்கும் ஆயுதங்களை எடுத்து காட்டும் படி தெரிவித்துள்ளனர்.

அப்போது ஆயுதங்களை கையில் எடுத்த திருவெங்கடம், காவல்துறையினரை மிரட்டியுள்ளார். மேலும் ஒரு காவலரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றதாக தெரிகிறது. இந்நிலையில் தப்பி செல்ல முயன்ற திருவெங்கடத்தை எண்கவுண்டர் முறையில் காவல்துறையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

இன்று காலை 5:30 மணி அளவில் இந்த என்கவுண்டர் சம்பவம் மாதவரம் ஆட்டு சந்தையில் நடைப்பெற்றுள்ளது. இந்நிலையில் போலீஸ் காவலில் இருந்த ஒரு நபர் எண்கவுண்டர் முறையில் சுட்டு கொல்லபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?

பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?

Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?

Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!

Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு

Embed widget