Hokkah Bars Ban : மேற்கு வங்கத்தில் ஹூக்கா பார்களுக்கு தடை... அதிரடி உத்தரவு
மேற்கு வங்க மாநிலத்தில் ஹூக்கா பார்களுக்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் ஹூக்கா பார்களுக்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
சேவை என்ற பெயரில் பல்வேறு உணவகங்களின் புகைபிடிக்கும் பகுதிகளில் ஹூக்கா புகை பிடிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் ஹூக்கா பார்கள் விற்கப்படுவது அதிகரித்து வருவதால் பல்வேறு உடல் நல குறைபாடுகள் ஏற்படுவதாகவும் இளைஞர்கள் இதற்கு அடிமையாகி உள்ளதாகவும் புகார் எழுந்தது. கல்லூரி மாணவர்கள், இளைஞர்களின் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் ஹூக்கா பார்களுக்குகு தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்பேரில் மேற்கு வங்க மாநிலத்தில் ஹூக்கா பார்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Kolkata, WB | I request Hookah bars operating within closed spaces to close. I request the police to be strict about it. We'll not give new licenses & enlistment certificates & cancel licenses granted earlier: Firhad Hakim, Mayor & TMC Min on WB govt's decision to ban Hookah bars pic.twitter.com/QXQFHX7JMe
— ANI (@ANI) December 2, 2022
பின்பு இதுகுறித்து கொல்கத்தா மேயர் பிர்காட் ஹக்கீம் கூறியதாவது, ”இளைஞர்கள் ஹூக்காவுக்கு அடிமையாகும் வகையில் சில போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக நிர்வாகத்திற்கு புகார்கள் வந்துள்ளது. இதுபோன்ற ஹூக்காக்களில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் மோசமானவை. எனவே அவற்றை மூட முடிவு செய்துள்ளோம்," என்று அவர் மேலும் கூறினார்.
கொல்கத்தா நகரத்தில் இதுபோன்ற ஹூக்கா பார்களை நடத்தும் உணவகங்களுக்கு உரிமம் வழங்குவதை நிறுத்துவதாக கொல்கத்தா மேயர் தெரிவித்தார். புதிய பார்களுக்கு உரிமங்களை வழங்கப்படாது எனவும், ஏற்கனவே உள்ள பார்களுக்கான உரிமமும் ரத்து செய்யப்படும் என்றும் கொல்கத்தா மேயர் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இதற்கு காவல்துறை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
முன்னதாக தமிழகத்தில் ஹூக்கா பார்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தடையை மீறி ஹூக்கா பார்கள் நடத்தினால் ஓராண்டு முதல் மூன்று ஆண்டு சிறையும் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த பிப்ரவரியில் ஹூக்கா விடுதிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அங்கு கொண்டுவரப்பட் புதிய ஹூக்கா தடுப்பு சட்டத்தின்படி ஹூக்கா பிடிப்போருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஹூக்கா விடுதி நடத்துவோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
TN Rain Alert: தயாரா மக்களே... இன்று முதல் தமிழகத்தில் கனமழை இருக்கு - வானிலை ஆய்வு மையம்..!