(Source: ECI/ABP News/ABP Majha)
புது மாப்பிள்ளை ஆக இருந்தவர் உயிரிழப்பு! முடி மாற்று அறுவை சிகிச்சையால் நேர்ந்த சோகம்? - 4 பேர் கைது!
டெல்லியில் திருமணத்திற்காக முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் திருமணத்திற்காக முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் 30 வயதான அதர் ரசீத் என்ற நபர் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு தலைமுறை ஜீன் படி தலையில் வழுக்கை விழுந்துள்ளது. இதையடுத்து, கடந்த ஆண்டு திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்ட ரசீத், தன்னை அழகாக மாற்ற நினைத்தார். அதன்படி, கடந்த ஆண்டு தன் தலைமுடியை மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
இந்தநிலையில், மாற்று அறுவை சிகிச்சை பெற்ற சில நாட்களிலேயே ரசீத்துக்கு உடலளவில் பல மாற்றங்கள் ஏற்பட்டு, அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, அவரது தலை மற்றும் முகம் வீக்கமடைந்ததாகவும், சிறுநீரங்கள் செயல்படாமல் ஆகியும், மற்ற அனைத்து உறுப்புகளும் செயல் இழந்து உயிரிழந்தார்.
இதையடுத்து, தனது மகனுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் சிறுநீரங்கள் செயலிழந்து உயிரிழந்ததாக அவரது தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், 2 மருத்துவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ரஷீத்தின் தாயார் ஆசியா பேகம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ ரஷீத் தான் எங்கள் குடும்பத்திற்கு ஒரே ஆதரவு. அவரது உழைப்பில்தான் சொந்தமாக வீடு கட்டி, அவரது இரண்டு சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைத்தார்.
கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள தனியார் கிளினிக்கில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அந்த சிகிச்சைக்குபிறகு, அவரது தலையில் பயங்கரமான வீக்கம் ஏற்பட்டு வேதனையை அனுபவித்தார். என் மகன் மிகவும் வேதனையான மரணத்தில் இறந்தான். சிகிச்சைக்கு பிறகு அவனுடைய சிறுநீரகங்கள் செயல்படாமல் போய்விட்டது. அவனுடைய மற்ற உறுப்புகளுக்கு செயல்படவில்லை. நான் ஒவ்வொரு நாளும் என் மகனை நினைவில் வைத்துக் கொண்டு மெதுவாக இறக்கிறேன். நான் என் மகனை இழந்தேன், ஆனால் ஒரு சிலரின் மோசடி நடவடிக்கைகளால் வேறு எந்த தாயும் தங்கள் குழந்தையை இழக்க விரும்பவில்லை” என தெரிவித்தார்.
மேலும், மகன் இறப்பதற்கு முன்பாக வீங்கிய முகத்துடன் இருந்த புகைப்படத்தையும் அவரது தாயார் காண்பித்தார்.