‘Expert in Mia Khalifa’- ரெஸ்யூமில் கோளாறாக அப்டேட் செய்த கூகுள் முன்னாள் ஊழியர்; 29 நிறுவனங்களில் அழைப்பு!
தன்னுடைய ரெஸ்யூமில், முன்னாள் ஆபாசப் பட நடிகை மியா கலிஃபா மீது நிபுணத்துவம் கொண்டதாகக் கூறி உள்ளார்.
கூகுள் முன்னாள் ஊழியர் ஒருவர் தன்னுடைய ரெஸ்யூமில், முன்னாள் ஆபாசப் பட நடிகை மியா கலிஃபா மீது நிபுணத்துவம் கொண்டதாகக் கூறிய நிலையில், அவருக்கு 29 நிறுவனங்களில் அழைப்பு வந்துள்ளதாகக் கூறியுள்ளார். சமூக பரிசோதனைக்காக இவ்வாறு அபத்தமான செயலில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
நடிகை மியா கலிஃபா மீது நிபுணத்துவம்
நியூயார்க்கைச் சேர்ந்தவர் ஜெர்ரி லீ. இவர், கூகுள் நிறுவனத்தில் உத்தி மற்றும் செயல்பாட்டு மேலாளர் ஆக 3 ஆண்டுகள் பணியாற்றியவர். இவர் தன்னுடைய ரெஸ்யூமில், ஜாவா ஸ்கிரிப்ட், சி++, டைம்ஸ்கிரிப்ட் உள்ளிட்ட மென்பொருள்களோடு முன்னாள் ஆபாசப் பட நடிகை மியா கலிஃபா மீது நிபுணத்துவம் கொண்டதாகக் கூறி உள்ளார்.
அதேபோல ஒரே இரவில் அதிக அளவிலான வோட்கா உட்கொண்டதாகவும் ரெஸ்யூமில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறுகிறார்.
நிறுவனங்கள் இதை எப்படி எதிர்கொள்ளும் என்று பரிசோதிக்கவே இவ்வாறு நடந்துகொண்டதாகக் கூறும் இவர், 6 வாரங்கள் வரை காத்திருக்கிறார். நிறுவனங்கள் இவரது ரெஸ்யூமை நிராகரிக்கும் என்று பார்த்தால், 29 நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வந்துள்ளன.
View this post on Instagram
MongoDB மாற்றும் ராபின்ஹூட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் இருந்து அழைப்பு வந்ததாக லீ கூறுகிறார். இதுகுறித்த ஜெர்ரி லீயின் இன்ஸ்டாகிராம் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.