லோ பட்ஜெட்ல டூர் ப்ளான் போட்றீங்களா..? - தேனியில் இந்த இடத்துக்கு ஒருமுறை போங்க..!
செம்ம ஸ்ட்ரெஸ்சா இருக்கு, கம்மி பட்ஜெட்ல ஒரு டூர் போகனும்னு இருந்தா, அதுக்கு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பக்கத்துல இருக்க வைகை அணை பூங்கா நல்ல சாய்ஸ் !
வருட ஆரம்பித்து விடும் தூரத்தில் தெரியும் மலையும், சாலையோரம் கடந்து செல்லும் மரங்களும் நம்மை குதுகலப்படுத்தும். பிரமாண்டமாக எழுந்து நின்று தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றும் வைகை அணை நம்மை வரவேற்கும்.
அங்கிருந்து பார்க்கும்போது அணையின் பிரமாண்டம் நம்மை வியக்க வைக்கும். நீரின் ஈர்ப்பதம் காற்றில் கலந்து நம் உடலை குளிர்விக்கும். அணையின் மேற்பகுதிக்கு சென்று தண்ணீர் தேங்கியிருக்கும் விஸ்தாரத்தை பார்ப்பதே மனதுக்கு உற்சாகத்தைத் தரும்.
அணையின் பிரமாண்டத்தை அழகான சூழலில் அமர்ந்து ரசிப்பதற்காக அணையின் இரண்டு பக்கமும் அப்போதே பூங்காக்கள் அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் மதுரை, தேனி மாவட்ட மக்கள் மட்டும் வந்து பார்த்துவிட்டு சென்ற வைகை அணை, வெளி மாநில சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் அளவுக்கு பிரபலமாகிவிட்டது.
அணையின் இரண்டு கரைப் பகுதியிலும் அமைக்கப்பட்டிருக்கும் பூங்காவை இணைக்க நடுவில் பாலம் உள்ளது. பச்சை பசேல் என்றிருக்கும் பூங்காவில் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் பொம்மைகள், சறுக்குகள், ஊஞ்சல் என அமைத்திருக்கிறார்கள். பூங்காவை சுற்றி வர குட்டி ரயிலும் உண்டு. விளையாடுவதற்கு பரந்த இடமும் உண்டு.
அதே நேரம் பூங்கா அழகாகவும் அருமையாகவும் உள்ளது.வைகை அணை நீர் எந்தெந்த மாவட்டங்களுக்கு எப்படியெல்லாம் செல்கிறது என்பதை பூங்காவில் ஒரு மாடலாக செய்து வைத்திருப்பது அனைவரையும் ஈர்க்கும். மிருகங்கள், மனிதர்கள் என பல சிலைகளை வடித்து வைத்திருக்கிறார்கள்.
பூங்காவை ரசித்தபடி நடந்து சென்று அப்படியே மேட்டில் ஏறினால் வைகை அணையின் மேற்பகுதிக்கு சென்று விடலாம்.
நொறுக்குத்தீணி, சிற்றுண்டிகள் விற்கும் கடைகள் உள்ளது. ஆனாலும், சாப்பாடு கொண்டு செல்வது சிறப்பு. ஆண்டிப்பட்டியில் நல்ல ஹோட்டல்கள் உள்ளன. குழந்தைகள் மிகவும் கொண்டாட்டமாக இருப்பார்கள்.
பொழுது சாயும் வரை அங்கு சுற்றி பார்த்துவிட்டு ஊர் திரும்பலாம். எப்படி செல்வது? மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து ஆண்டிப்பட்டிக்கு அதிகமான பேருந்துகள் உள்ளன. ஆண்டிப்பட்டியிலிருந்து வைகை அணக்க்கு பேருந்துகளும், ஆட்டோக்களும் உள்ளன. சொந்த வாகனம் வைத்திருப்பவர்களுக்கு இன்னும் நேரம் குறையும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்