மேலும் அறிய

Thanjavur Museum: விட போறாங்க லீவு... புறப்படலாமா டூரு... காத்திருக்குது உங்களுக்காக தஞ்சாவூரு!!!

இந்தோ- சராசனிக் கட்டடக் கலை பாணியை சார்ந்த இந்த கட்டடத்தில், 120 ஆண்டுகளாக, தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வந்தது.

தஞ்சாவூர்: கோடை காலம் ஆரம்பிக்க போகுது. பள்ளிகளுக்கும் விடுமுறை விட்டாச்சுன்னா வீட்டில குழந்தைகள் சுற்றுலா போகணும் என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். சுற்றுலாவாகவும் இருக்கணும். குழந்தைகளுக்கும் அப்படியே என்டர்டெயிமென்டா இருக்கணும். அறிவும் வளரும்னு நினைக்கிறீங்களா. அப்போ எங்கே போறதுன்னு கேட்கிறீர்களா? நம்ம தஞ்சாவூருல இருக்கிற அருங்காட்சியகத்துக்கு வாங்க.

தஞ்சாவூர் பழைய கலெக்டர் அலுவலகம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு அருங்காட்சியகமாக மாறி அனைவரையும் கவர்ந்து இழுத்து வருகிறது. இங்கு 7டி திரையரங்கம், அரியவகை வெளிநாட்டு பறவைகள் பூங்கா, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய சிலைகள் என்று தாராளமாக ஏராளமாக பார்க்க பல உள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடம், பிரிட்டிஷ் கட்டட வல்லுனர் ராபர்ட் சிஷோலம் என்பவரால், 1896 முதல் 1900ம் ஆண்டு காலத்தில் கட்டப்பட்டது. இந்தோ- சராசனிக் கட்டடக் கலை பாணியை சார்ந்த இந்த கட்டடத்தில், 120 ஆண்டுகளாக, தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வந்தது.

மக்கள் தொகை பெருக்கம்,  போக்குவரத்து அதிகரிப்பு போன்ற காரணங்களால் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து, பழைய கலெக்டர் அலுவலகத்தை அதன் பழமை மாறாமல் பாதுகாத்து, அருங்காட்சியகமாக மாற்ற நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், ரூ. 8.4 கோடி மதிப்பீட்டில், அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.

Thanjavur Museum: விட போறாங்க லீவு... புறப்படலாமா டூரு... காத்திருக்குது உங்களுக்காக தஞ்சாவூரு!!!

இந்த அருங்காட்சியகத்தில் வேளாண் துறை சார்பில் பழமையான வேளாண் கருவிகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை உட்பட புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் மற்றும் தலைக்காவிரி முதல் பூம்புகார் வரை காவிரி ஆறும், அதன் கிளை ஆறுகளின் செயல்பாடுகள் குறித்த தத்ரூபமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. நம் பாரம்பரிய கலைகள், நம் முன்னோர்கள் விவசாயத்திற்கு பயண்படுத்திய கருவிகள் என பார்த்து , பார்த்து வியந்து போகக்கூடிய வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் பெருமுயற்சியால் பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கு அழகிய கற்சிலைகள், செப்புத் திருமேனிகள், இசைக்கருவிகள், விவசாயப் பொருட்கள், நில அளவை சாதனங்கள், காவிரி நதியின் டெல்டா காட்சியுடன் கல்லணைக் காட்சி போன்ற பல அரும் பொருட்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

10-11ம் நூற்றாண்டைச் சார்ந்த சோழர் கால அரிய புத்தர் சிலை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அமர்ந்த கோலத்தில் தியான நிலையில் அமைந்துள்ள இந்த புத்தர் சிலை உடையாமல் முழுமையாக இருக்கிறது. அதேபோல் 10-11 ஆம் நூற்றாண்டை சார்ந்த சோழர், 13ம் நூற்றாண்டை சார்ந்த பைரவர், பைரவி, 15-16 ஆம் நூற்றாண்டை சார்ந்த விஷ்ணு தேவி, பெண் தெய்வங்கள், மகாவிஷ்ணு, 15ம் நூற்றாண்டை சேர்ந்த படி அணைப்பு யாழி, 16-17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பைரவி, 18ம் நூற்றாண்டை சேர்ந்த சூரியன், ரதி தேவதை, ராகு கேது ஆகிய சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

Thanjavur Museum: விட போறாங்க லீவு... புறப்படலாமா டூரு... காத்திருக்குது உங்களுக்காக தஞ்சாவூரு!!!

இதனை தஞ்சைக்கு வரும் சுற்றுலா பயணிகள் காண வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் மொத்தமாக 15-க்கும் மேற்பட்ட சிலைகள் இடம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அருங்காட்சியகம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்து வருகிறது. ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு விதமான பொக்கிஷங்களை பார்ப்பது போல் உள்ளது. 7டி திரையரங்கம் தஞ்சையில் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பறவைகள் பூங்காவும் மனதை லயக்க செய்கிறது. இந்த அருங்காட்சியகத்தில் நவதானியங்கள், ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட பெரிய கோவில் மாதிரிகள் உள்ளன. பல மாவட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால உலோக சிற்ப காட்சியகம், கற்சிற்ப காட்சியகம், சரஸ்வதி மஹால் நுாலக காட்சியகம், '7டி' திரையரங்கம் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சையில் நிறைய சுற்றுலா தலங்கள் இருந்தாலும் இது மேலும் சிறப்பாக இருக்கிறது. வாங்க ஒரு விசிட்டை அடியுங்கள். குழந்தைகளுக்கும் சிறந்த சுற்றுலாவாக இது அமையும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
"நானா இருந்தா தோற்கடிச்சிருப்பேன்" டிரம்ப் வெற்றி குறித்து பைடன் ஒபன் டாக்!
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
Embed widget