மேலும் அறிய

Kaanum Pongal 2025: கம்மி செலவு, மனசு நிறைவு.. காணும் பொங்கல், குடும்பத்துடன் செல்ல ஏற்ற இடங்கள்.. தமிழ்நாட்டில் இவ்வளவு ஆப்ஷனா?

Kaanum Pongal Places to Visit: காணும் பொங்கலன்று குடும்பத்துடன் செல்ல ஏதுவாக, தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தளங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Kaanum Pongal Places to Visit: காணும் பொங்கலன்று குடும்பத்துடன் செல்ல ஏதுவாக, குறைந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தளங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

காணும் பொங்கல் கொண்டாட்டம்:

தமிழர்களின் முக்கிய அறுவடை திருநாளான தைதிருநாள், ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 4 நாட்கள் தொடர் விடுமுறையான பொங்கல் கொண்டாட்டத்தில், நான்காவது  நாளில் காணும், பொங்கல் விமரிசையாக கடைபிடிக்கப்படுகிறது. காணும் பொங்கல் உறவை வளர்ப்பதற்கான நாளாகும். அதன்படி, குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது, வெளியே செல்வது, உறவினர்களின் வீடுகளுக்கு செல்வது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் குறைந்த செலவில் குடும்பத்தினருடன் வெளியே சென்று, நேரத்தை மகிழ்ச்சியாக கழித்து பல நினைவுகளை உருவாக்குவதற்கான சிறந்த சுற்றுலா தளங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

 தமிழ்நாட்டு சுற்றுலா தளங்கள்:

1. மதுரை

தமிழ்நாட்டின் பொங்கல் கொண்டாட்டங்களின் உண்மையான பிரதிநிதித்துவத்தை மதுரையில் காணலாம். இது ஏராளமான கோயில்கள், வயல்வெளிகள் மற்றும் கிராமங்களைக் கொண்டுள்ளது. குடும்பத்தினருடன் கோயிலுக்கு செல்ல விரும்புவோருக்கு பல வித்தியாசமான வாய்ப்புகளை வழங்குகிறது. புகழ்பெற்ற மீனாட்சி கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மற்றும் கூடல் அழகர் கோயில் ஆகியவை மதுரையில் உள்ள வேண்டிய மற்ற இடங்களாகும். குறிப்பாக காணும் பொங்கலன்று தான், மிகவும் பிரபலமான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் மதுரையில் நடைபெறுகிறது.

2.  தஞ்சாவூர்

பொங்கல் உற்சாகத்தில் மூழ்க விரும்புவோருக்கு தஞ்சாவூர் மற்றொரு சிறந்த இடமாகும். அதன்படி, பிரகதீஸ்வரர் கோயில்,  தஞ்சாவூர் அரச அரண்மனை, கங்கைகொண்டசோழபுரம் கோயில் மற்றும் ஐராவதேஸ்வரர் கோயில் ஆகியவை தஞ்சாவூரில் உள்ள மற்ற பிரபலமான சுற்றுலா அம்சங்களாகும்.

3. சேலம்

காணும் பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக, சேலத்தில் காடுகளில் தேடிச்சென்று நரி தரிசனம் மேற்கொள்வது பிரபலமான நடவடிக்கையாகும்.கோட்டை மாரியம்மன் கோயில், கரிய மாணிக்கம் அரசு அருங்காட்சியகம், சேலம் எஃகு ஆலை உள்ளிட்ட பல அழகான கோயில்கள் மற்றும் பிற கலாச்சார இடங்களும் அங்கு உள்ளன. கிள்ளியூர் அருவி போன்ற தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அழகிய இடங்கள் அமைந்துள்ளன. வடக்கே நகரமலையும், தெற்கே ஜெரகமலையும், மேற்கே காஞ்சனமலையும், கிழக்கே கொடுமலையும் இருப்பதால், இந்நகரம் இயற்கையாகவே மலைகளால் சூழப்பட்டு பார்வயாளர்களை ஈர்க்கிறது.

4. கோயம்புத்தூர்

பொங்கல் கொண்டாட்டங்களை கோயம்புத்தூரை குறிப்பிடாமல் கடக்க முடியாது. அங்கு  சேற்று வயல்களில் சவாரி செய்து வலிமையையும் திறமையையும் வெளிப்படுத்தும் காளைகளின் "கம்பளா" பந்தயத்தைக் காணலாம். பேரூர் பட்டீஸ்வரர் கோயில், மருதமலை கோயில், சிறுவாணி அணை உள்ளிட்ட பல அழகிய கோயில்கள் மற்றும் பிற கலாச்சார இடங்கள் உள்ளன.

5. பொள்ளாச்சி

கோயம்புத்தூரில் இருந்து பொள்ளாச்சிக்கு சாலைப் பயணம் செய்வது ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கிறது. அதோடு டாப்சிலிப், இந்திரா காந்த் வனவிலங்குகள் சரணாலயம், பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம், ஆலியார் அணை, வால்பாறை, குரங்கு நீர்வீழ்ச்சி, மற்றும் மாசாணி அம்மன் கோயில் என பொங்கல் தினத்தன்று குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க ஏராளமான இடங்கள் அங்கு உள்ளன.

6. கன்னியாகுமரி

கன்னியாகுமரி பொங்கல் கொண்டாட்டங்களின் ஒரு வகையான அழகை அனுபவிக்க சிறந்த இடமாகும். அரபிக்கடல், வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பிரமிக்க வைக்கும் இயற்கைக்காட்சிகளுக்கு நடுவில் அமைந்திருக்கும் காட்சி வேறு எங்கும் கிடைக்காது. சூரிய உதயம், விவேகானந்தர் பாறை, படகு சவாரி, திருவள்ளுவர் சிலை என பல சுற்றுலா தளங்கள் அங்கு நிரம்பி வழிகின்றன.

7. சென்னை

தலைநகர் சென்னை தமிழ்நாட்டில் பொழுதுபோக்கிற்கு பஞ்சமில்லாத பரபரப்பான நகரமாகும். மெரினா உள்ளிட்ட கடற்கரைகள், பொழுது போக்கு பூங்காங்கள், மால்கள், திரையரங்குகள், சென்னை சங்கமம் போன்ற கலாச்சார நிகழ்வுகள், கேளிக்கை விடுதிகள் என ஏராளமான இடங்கள் உள்ளன. அங்கு குறைந்த செலவிலேயே குடும்பத்தினருடன் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவிடலாம்.

8. நெல்லை

திருநெல்வேலி பொங்கல் விழாவின் சிறப்பம்சமாக நெல்லையப்பர் கோயில் வழிபாடு உள்ளது. மேலும், அகஸ்தியர் நீர்வீழ்ச்சி, பாபநாசம் கோயில், மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி, கழுகுமலை ஏராளான சுற்றுளா தளங்களும் உள்ளன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

துருக்கி ரிசார்ட்டில் தீ விபத்து - 66 பேர் பலி; 51 பேர் படுகாயம் - நடந்தது என்ன?
துருக்கி ரிசார்ட்டில் தீ விபத்து - 66 பேர் பலி; 51 பேர் படுகாயம் - நடந்தது என்ன?
"பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது" ஆளுநர் ரவி பேச்சு
துப்பாக்கி சுடும் பயிற்சி; எல்லை தாண்டி மீன் பிடிக்காதீங்க - தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை
துப்பாக்கி சுடும் பயிற்சி; எல்லை தாண்டி மீன் பிடிக்காதீங்க - தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை
பரந்தூரில் ஏர்போர்ட் - பயப்படாதீங்க: விடாப்பிடியாக விளக்கம் கொடுக்கும் தமிழக அரசு 
பரந்தூரில் ஏர்போர்ட் - பயப்படாதீங்க: விடாப்பிடியாக விளக்கம் கொடுக்கும் தமிழக அரசு 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vivek Ramaswamy DOGE Resign : பதவியேற்ற TRUMP..BYE சொன்ன விவேக்! திடீர் TWISTJagabar Ali Murder : ’’அநியாயம் பண்றாங்க’’அதிமுக நிர்வாகி படுகொலைஇறக்கும் முன் கடைசி வீடியோKomiyam Drinking Fact Check | கோமியம் குடிச்சா நல்லதா?IIT காமகோடி Vs மனோ தங்கராஜ் உண்மை நிலை என்ன?Appavu walk out : ஆளுநர் ரவி சர்ச்சை அப்பாவு வெளிநடப்பு !பீகார் சபாநாயகர்கள் மாநாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துருக்கி ரிசார்ட்டில் தீ விபத்து - 66 பேர் பலி; 51 பேர் படுகாயம் - நடந்தது என்ன?
துருக்கி ரிசார்ட்டில் தீ விபத்து - 66 பேர் பலி; 51 பேர் படுகாயம் - நடந்தது என்ன?
"பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது" ஆளுநர் ரவி பேச்சு
துப்பாக்கி சுடும் பயிற்சி; எல்லை தாண்டி மீன் பிடிக்காதீங்க - தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை
துப்பாக்கி சுடும் பயிற்சி; எல்லை தாண்டி மீன் பிடிக்காதீங்க - தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை
பரந்தூரில் ஏர்போர்ட் - பயப்படாதீங்க: விடாப்பிடியாக விளக்கம் கொடுக்கும் தமிழக அரசு 
பரந்தூரில் ஏர்போர்ட் - பயப்படாதீங்க: விடாப்பிடியாக விளக்கம் கொடுக்கும் தமிழக அரசு 
Australian Open Women: அரையிறுதிக்குள் நுழைந்த சபலென்கா, படோஸா
ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் சபலென்கா, படோஸா
“மாட்டுக்கறி சாப்பிடலாம்; ஆனால் கோமியம்....” - காமகோடிக்கு ஆதரவாக களமிறங்கிய தமிழிசை 
“மாட்டுக்கறி சாப்பிடலாம்; ஆனால் கோமியம்....” - காமகோடிக்கு ஆதரவாக களமிறங்கிய தமிழிசை 
Ranji Trophy: ரஞ்சிக் கோப்பையில் களமிறங்கும் இந்திய நட்சத்திர வீரர்கள் யார் யார் தெரியுமா.?
ரஞ்சிக் கோப்பையில் களமிறங்கும் இந்திய நட்சத்திர வீரர்கள் யார் யார் தெரியுமா.?
TNTET Exam: எப்போதுதான் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு? ஏங்கி நிற்கும் தேர்வர்கள்! டிஆர்பி செவிசாய்க்குமா?
TNTET Exam: எப்போதுதான் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு? ஏங்கி நிற்கும் தேர்வர்கள்! டிஆர்பி செவிசாய்க்குமா?
Embed widget