Whatsapp | இனி வாட்ஸ் அப் வீடியோ க்வாலிட்டியை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்: மூன்று ஆப்ஷன் இருக்கு!
முன்னணி மெசேஜிங் சேவையான வாட்ஸ் அப், தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய ஆப்ஷன்களை வழங்கவிருக்கிறது
முன்னணி மெசேஜிங் சேவையான வாட்ஸ் அப், தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய ஆப்ஷன்களை வழங்கவிருக்கிறது
வாட்ஸ் அப்பில் நீங்கள் அனுப்பும் வீடியோவின் தரத்தை நீங்களே ஃபிக்ஸ் செய்துகொள்ளும் வகையில் மூன்று ஆப்ஷன்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ளது அந்நிறுவனம். அடுத்து வரவிருக்கும் வாட்ஸ் அப் அப்டேட்டில் இந்த வசதியை வாடிக்கையாளர்கள் பெறலாம் எனக் கூறப்படுகிறது. இப்போதைக்கு இந்த வசதி வாட்ஸ் அப் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்சன் 2.21.14.6ல் சோதனை முறையில் பயன்படுத்தப்படுகிறது.
புதிய அப்டேட் வந்த பிறகு, ஆட்டோமேட்டிக், பெஸ்ட் குவாலிட்டி, டேட்டா சேவர் என மூன்று ஆப்ஷங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். அதன்படி, ஆட்டோமேட்டிக் விருப்பத்தினை தேர்வு செய்வதன் மூலம் கம்ப்ரெஸ்ஸன் ஆல்கரிதத்தைப் பயன்படுத்தி இரண்டாவது ஆப்ஷன், பெஸ்ட் குவாலிட்டி ஆப்ஷன். இதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் வீடியோவை உயர் தரத்தில் அனுப்பலாம்.
மூன்றாவது ஆப்ஷன் டேட்டா சேவை முறை. இதன் மூலம் வீடியோக்களின் அளவைக் குறைத்து அனுப்பலாம். வாட்ஸ் அப்பில் வீடியோ கால் பேசும்போதும் வீடியோவின் தரத்தை நிர்ணயம் செய்யும் தொழில்நுட்பத்தையும் வாட்ஸ் அப் விரைவில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கலாம்.
புதுசு புதுசா.. தினுசா தினுசா..
வாட்ஸ் அப் இதுபோன்று புதுசு புதுசா, தினுசு தினுசா புதுமைகளைப் புகுத்தி வருகிறது. அந்த வகையில் வியூவ் ஒன்ஸ் என்ற வசதியையும் அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. அதன்படி நீங்கள் உங்களின் நண்பருக்கோ உறவினருக்கோ ஒரு ஃபோட்டோவை அனுப்பி அதை ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும்படி செய்யலாம். அதற்கு படத்தை அனுப்புவதற்கு முன்னதாக சாட் இன்புட் பாக்ஸில் ரைட் கிளிக் செய்து 1 என்ற ஆப்ஷனை தேர்வு செய்து அனுப்பலாம். ஆனால், இந்த வசதியும் இப்போதைக்கு சோதனை முயற்சியிலேயே உள்ளது.