WhatsApp Update: எல்லாம் பாதுகாப்புக்காக.! இப்படி செஞ்சாதான் வாட்ஸ் அப் யூஸ் பண்ணலாம்.. விரைவில் புதிய அப்டேட்!!
கணினியில் வாட்ஸ் அப் கணக்கை பயன்படுத்தும் போது புதிய வகை பாதுகாப்பு வசதியை அந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.
தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அடுத்தடுத்து வாட்ஸ் அப் நிறுவனம் அப்டேட்களை அள்ளி கொடுத்து வருகிறது. மொபைல் போன் பயனாளர்கள் மட்டுமல்லாமல் இம்முறை வாட்ஸ் அப் செயலியை கணினியில் பயன்படுத்துவோருக்கும் புதிய விதமான அப்டேட்டை வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த அப்டேட் தொடர்பாக வாபீட்டா இன்ஃபோ என்ற தளம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி வாட்ஸ் அப் செயலியை கணினியில் பயன்படுத்துவோருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் விதமாக ஒரு புதிய வகை அப்டேட் வெளியாக உள்ளது. அதன்படி இனிமேல் வாட்ஸ் அப் வேப் பயன்படுத்தும் போது இரண்டு நிலை வெரிஃபிகேஷன் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த முறையை பயன்படுத்தினால் ஒவ்வொரு முறை நீங்கள் வாட்ஸ் வெப் பயன்படுத்தும் போது அந்த பாஸ்வேர்டை கொடுத்தால் மட்டுமே கணினியில் வாட்ஸ் அப் வெப்பை பயன்படுத்த முடியும்.
இந்த முறை ஏற்கெனவே வாட்ஸ் அப் மொபைல் செயலியில் உள்ளது. இந்த இரண்டு நிலை வெரிஃபிகேஷன் முறை வாட்ஸ் அப் ஓடிபி முறையில் இருந்து மாறுபட்டது. இதை முதல் முறையாக பயன்படுத்தும் போது முதலில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பதிவிட வேண்டும். அதன்பின்னர் உங்களுக்கு ஏற்ற 6 இலக்க பாஸ்வேர்டை பதிவிட வேண்டும்.
அந்த பாஸ்வேர்டை ஒருவேளை நீங்கள் மறந்துவிட்டால் முதலில் கொடுத்த மின்னஞ்சல் முகவரிக்கு ரிசேட் செய்யும் லிங்க் வரும். இதன்மூலம் உங்களுடைய வாட்ஸ் அப் கணக்கை யாரும் எளிதாக கணினியில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். மேலும் இது வாட்ஸ் வேப்பிற்கு கூடுதல் பாதுகாப்பை தரும் வகையில் அமைந்திருக்கும்.
மேலும் படிக்க: ஆண்ட்ரய்டு டு ஐபோன் பயன்பாட்டாளர்களே... வாட்ஸ்-அப்பில் இருந்து ஒரு முக்கிய அப்டேட்
இந்த புதிய அப்டேட் கூடிய விரைவில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள வாட்ஸ் அப் சேட்களை ஐஓஎஸ் போன்களுக்கு பதிவிறக்கம் செய்யும் வகையிலும் ஒரு புதிய அப்டேட் வெளியிட வாட்ஸ் அப் திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே ஐஒஎஸ் போன்களில் இருந்து வாட்ஸ் அப் சேட்களை சாம்சங் மற்றும் கூகுள் பிக்சல் போன்களுக்கு பதிவிறக்கும் வசதியை கடந்த ஆண்டே வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்தது. அதைத் தொடர்ந்து தற்போது இந்த புதிய வசதியும் விரைவில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: உங்க ஸ்மார்ட்ஃபோன் பேட்டரியில் பிரச்சனையா? அப்போ இதை உடனே பண்ணுங்க!