WhatsApp Update: ஆண்ட்ரய்டு டு ஐபோன் பயன்பாட்டாளர்களே... வாட்ஸ்-அப்பில் இருந்து ஒரு முக்கிய அப்டேட்
WhatsApp Update: சமீபத்தில் வெளியான அப்டேட்டில், ஐபோனில் இருந்து சாம்சங் அல்லது பிக்சல் ஆண்ட்ராய்டு போன்களுக்கு சாட்களை டிரான்ஸ்வர் செய்யும் வசதி அறிவிக்கப்பட்டது.
WhatsApp Update: பிரபல மெசேஜிங் செயலியான வாட்ஸ் அப், 2022ம் ஆண்டில் சில அப்டேட்களை அறிவித்திருக்கிறது. அதன் ஒரு பகுதியாக, ஆண்டுராய்டு போனில் இருந்து ஐபோனுக்கு சாட் மெசேஜ்களை அனுப்பும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட் ஃபோன் யுகத்திற்கு பிறகு வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தாதவர்களே இல்லை என சொல்லலாம்.. உலக அளவில் செய்திகளைப் பரிமாறிக்கொள்ள பல மெசேஜ் ஆப்கள் இருந்தாலும் பெரும்பாலானவர்களின் முதல் தேர்வு வாட்ஸ் ஆப்தான்.. காரணம் அது வடிவமைக்கப்பட்ட விதம் சாமானியர்களும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பவும், புகைப்படங்களைப் பரிமாறிக் கொள்ளவும் எளிதாக இருக்கிறது. அந்த வாட்ஸ் ஆப்பினை பயனர்கள் இன்னும் எளிதாக பயன்படுத்த அவ்வபோது வாட்ஸ் அப் நிறுவனம் அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.
📝 A new year means new goals, hopes, and dreams. This week we’ve been reflecting on a few resolution ideas to share for some 2022 inspiration:
— WhatsApp (@WhatsApp) January 7, 2022
அந்த வரிசையில், சமீபத்தில் வெளியான அப்டேட்டில், ஐபோனில் இருந்து சாம்சங் அல்லது பிக்சல் ஆண்ட்ராய்டு போன்களுக்கு சாட்களை டிரான்ஸ்வர் செய்யும் வசதி அறிவிக்கப்பட்டது. விரைவில், ஆண்டுராய்டு போன்களில் இருந்து ஐபோனுக்கு அனுப்பும் வசதியை கொண்டு வர இருப்பதாக வாட்ஸ் அப் அறிவித்திருக்கிறது.
ஆண்ட்ராய்டு போனில் இருந்து ஐபோனுக்கு மாறி வாட்ஸ்-அப்பில் பயன்படுத்தும்போது, சாட்டின் பேக் அப் இருக்காது. வாட்ஸ்-அப் நிறுவனத்தின் அறிவிப்பின்படி, புதிய வசதிக்கான பீட்டா பதிப்பு ஆண்ட்ராய்டு 2.21.20.11 சோதனை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு போனில் இருந்து சாட் பேக்கப்பை பதிவிறக்கம் செய்ய இந்த வசதி உதவியாக இருக்கும். சோதனை வெற்றிகரமாக முடிந்ததும், இந்த ஆப்ஷன் பயன்பாட்டாளர்களுக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்