WhatsApp Update: இனி வாட்ஸ் அப்பில் வாக்கெடுப்பு! அடடா அப்டேட்டை அள்ளிக்கொடுக்கும் மார்க்!! வருது போலிங் அம்சம்!
வாட்ஸ்அப் நிறுவனம் குழுவிற்குள் போலிங் எனும் வாக்கெடுப்பை அனுமதிக்கும் புதிய அம்சத்தை விரைவில் வெளியிட இருக்கிறது.
உலகம் முழுக்க பரவலாக பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்ற ஆப் வாட்ஸ்-அப் . பிரபல மேட்டா (ஃபேஸ்புக் ) நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்-அப்தான் அதிக பயனாளர்களை கொண்ட குறுஞ்செய்தி அனுப்பும் தொழில்நுட்பமாக தற்போது உள்ளது. டெக்ஸ்ட் மெசேஜ் மட்டுமே அனுப்பும் வகையில் அறிமுகமான வாட்ஸப் இன்று பல அப்டேட்களுக்கு பிறகு மாற்றங்களையும் வசதிகளையும் கொண்டுள்ளது. அந்த வரிசையில், அடுத்து வரப்போகும் அப்டேட்கள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் குழுவிற்குள் போலிங் எனும் வாக்கெடுப்பை அனுமதிக்கும் புதிய அம்சத்தை உருவாக்கி வருகிறது. இது வாட்ஸ் அப் குழுவில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த புதிய வாட்ஸ்அப் அம்சம் பயனர்கள் தங்களுக்கு பொருத்தமான தலைப்புகளில் குழுவிற்குள் கருத்துக்கணிப்புகளை உருவாக்க அனுமதிக்கும் புதிய அப்டேட் ஆகும். பெரும்பாலும் இது முதலில் ஐஓஎஸ் பயனர்களுக்குக் கிடைக்கும் பின்னர் ஆண்ட்ராய்ட், மற்றும் டெஸ்க்டாப் வர்சனுக்கும் கிடைக்கும். ஆனால் இந்த அப்டேட் எப்போது வெளியாகும் என்ற தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
வாட்ஸ் அப் தனிப்பட்ட சாட்களில் இதை அறிமுகப்படுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை. அதானால்தான் வாட்ஸ் அப் குழுக்களுக்கு மட்டும் இது கொண்டுவரப்பட உள்ளது.
நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்கலாம், மற்றவர்கள் அதற்கு பதிலுக்கு வாக்களிக்கலாம். வாட்ஸ்அப் குழுக்களில் மட்டுமே கருத்துக் கணிப்புகள் கிடைக்கும். கேள்விகளும், பதில்களும் முழுவதுமாக என்கிரிப்டட் செய்யப்பட்டது. ஒரு வாட்ஸ் அப் குழுவில் உள்ளவர்கள் மட்டுமே வாக்கெடுப்பு மற்றும் முடிவுகளை பார்க்க முடியும்.
மேலும் சில குறிப்பிடத்தக்க அப்டேட்கள் விரைவில் வர உள்ளது.அவை,
மெசேஜ் ரியாக்ஷன்..
இன்ஸ்டா மற்றும் பேஸ்புக்கில் இருப்பது போல மெசேஜ் ரியாக்ஷன் விரைவில் வாட்ஸ் அப்பில் வரவுள்ளது. மெசேஜுக்கு ரியாக்ட் செய்யும் வகையில் இந்த் அப்டேட் வரவுள்ளது. மேசேஜை அழுத்திப்பிடித்தால் சில எமோஜிக்கள் ஸ்கிரீனில் தெரியும். நாம் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அனிமேஷன் எமோஜிஸ்..
புதிய ஹார்ட் வகை அனிமேஷன் மாதிரியான எமோஜியை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது வாட்ஸ் அப். தற்போது சிவப்பு நிற இதய எமோஜி மட்டுமே அனிமேஷன் மாதிரியான எமோஜியாக வரும். தற்போது வரவுள்ள அப்டேட்டால் இன்னும் பல எமோஜிக்கள் அனிமேட் வகையில் இருக்கும்.
போட்டோ, வீடியோ ப்ரிவியூ
டாக்குமெண்ட் வகை போட்டோ, வீடியோவை ஷேர் செய்தால் அதனை ஓபன் செய்யாமல் பார்க்க முடியாது. அதற்கான ப்ரிவியூ வராது. ஆனால் விரைவில் ப்ரிவியூ பார்க்கும் அப்டேட்டை வாட்ஸ் அப் கொண்டு வரவுள்ளது. இதன் மூலம் டாக்குமெண்ட் வகை வீடியோ, புகைப்படத்தை அனுப்பும் முன் ப்ரிவியூ பார்க்கலாம்.
📝 WhatsApp beta for iOS 22.6.0.70: what’s new?
— WABetaInfo (@WABetaInfo) March 5, 2022
WhatsApp is finally working on a feature that allows creating polls in groups, for a future update of the app! 😍https://t.co/7XxUA98h2C
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்