WhatsApp : உஷார் மக்களே உஷார்! ஒரே போன்கால்.. வாட்ஸ் அப் அக்கவுண்டை ஹேக் செய்யும் கும்பல்! தப்பிப்பது எப்படி?
பாதுகாப்பு அம்சத்தை வாட்ஸ் அப் மேம்படுத்திக்கொண்டே இருந்தாலும் மறுபக்கம் ஹேக்கர்ஸ் தங்களது வேலையைக் காட்டிக்கொண்டேதான் இருக்கின்றனர்.
வாட்ஸ் அப்
உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ் அப். மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் தளம் அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு சில அப்டேட்களை அளித்து வருகிறது. மேலும் வாடிக்கையாளார்களுக்கு ஏற்ப தன்னுடைய வசதியை மேம்படுத்தி வருகிறது. வாடிக்கையாளர்கள் பயன்படுத்த எளிமையாக இருக்க வேண்டுமென்படு மட்டுமின்றி பல பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தியும் இந்த அப்டேட் கொடுக்கப்படுகிறது.
என்னதான், பாதுகாப்பு அம்சத்தை வாட்ஸ் அப் மேம்படுத்திக்கொண்டே இருந்தாலும் மறுபக்கம் ஹேக்கர்ஸ் தங்களது வேலையைக் காட்டிக்கொண்டேதான் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது ஒரே போன்காலில் வாட்ஸ் அப்பை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும் டிஜிட்டல் மோசடியை ஹேக்கர்ஸ் கையில் எடுத்துள்ளனர். இது குறித்த எச்சரிக்கை தற்போது விடுக்கப்பட்டுள்ளது.
ஒரே போன்கால்..
உங்கள் போனுக்கு உங்களுக்கு அறிமுகமில்லாத எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வரும். அதனை எடுத்து பதிலளித்தால் 67 அல்லது 405 என தொடங்கும் பத்து இலக்க எண்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ள வலியுறுத்தப்படும். அதனை நீங்கள் செய்துவிட்டால் உங்கள் செல்போனில் உள்ள வாட்ஸ் அப் கணக்கு ஹேக்கர்கள் வசம் சென்றுவிடும். அதன்பின்னர் உங்கள் கணக்கை அவர்கள் நிர்வகிக்கவும், உங்கள் தகவல்களை திருடவும் தொடங்கிவிடுவார்கள்.
சைபர் மோசடிகள் மற்றும் ஹேக்கர்ஸ் தொடர்பான தகவல்களையும், எச்சரிக்கைகளையும் தொடர்ந்து கொடுத்து வரும் கிளவுட்செக் எனும் ஏ.ஐ. நிறுவனத்தின் செயல் அதிகாரியே இந்த எச்சரிக்கையை கொடுத்துள்ளார். ஹேக்கர்ஸ் கொடுக்கும் எண்கள் கஸ்டர்மர் கேர் எண்களைப் போலவே இருப்பதால் பயனர்கள் எளிதில் ஏமாந்துவிடவும், சர்வதேச அளவில் இந்த ஹேக்கிங் நடக்கவும் வாய்ப்பு அதிகம் எனக் கூறப்படுகிறது.
தப்பிப்பது எப்படி?
இதுபோன்ற மோசடிகளை சரிசெய்ய வாட்ஸ் அப் நிறுவனம் தொடர்ந்து நடவடிக்கையை எடுத்துக்கொண்டே இருக்கிறது. அதேவேளையில் அறிமுகம் இல்லாத வித்தியாசமான நம்பர்களில் இருந்து வரும் அழைப்புகளை தவிர்ப்பது, மெசேஜுக்கு வரும் தேவையற்ற லிங்குகளை க்ளிக் செய்யாமல் இருப்பதுதான் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள ஒரே வழி.
பொதுவெளியில் இருக்கும் மால்களிலும், வெளியிடங்களிலும் இருக்கும் வைஃபை இணைப்பை பயன்படுத்தாமல் இருப்பதும், இணைய பாதுகாப்பில் முக்கியமான ஒன்றாகும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்