மேலும் அறிய

WhatsApp New Privacy Policy | நெருங்கியது வாட்ஸ் அப்பின் டெட்லைன்: மே 15க்கு பிறகு என்ன?

மே 15க்கு பிறகு வாட்ஸ் அப் நிபந்தனை ஏற்றுக்கொள்ளதவர்களின் கணக்குகள் நிச்சயம் டெலிட் செய்யப்படுமா? அல்லது மேலும் காவ அவகாசம் அல்லது வாட்ஸ் அப் தனது நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டுவருமா என பயனர்கள் எதிர்பார்க்கின்றனர்

புதிய நிபந்தனைகளை விதித்து கடந்த ஜனவரியில் சர்ச்சையில் சிக்கியது. குறிப்பாக புதிய நிபந்தனையை ஏற்றுக்கொண்டால் சேவையை தொடர முடியும் என்றும், இல்லையென்றால் கணக்குகள் முடக்கப்படும் என்றும் அதிரடியாக அறிவித்தது. தரவுகளை தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர்வோம் என்ற வாட்ஸ் அப்பின் அறிவிப்பை பயனாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னதான் நிறுவனத்தில் தனியுரிமைக் கொள்கை என்றாலும், பயனர்களுக்கான பிரைவசி என்பதை வாட்ஸ் அப் போன்ற மிகப்பெரிய தகவல் பரிமாற்ற செயலிகள் உறுதி செய்ய வேண்டுமென்று பலரும் கருத்து தெரிவித்தனர். இன்னும் ஒரு படி மேலே போய்,  பலர் வாட்ஸ் கணக்கில் இருந்து வெளியேறினர். இதனை பயன்படுத்தி டெலிகிராம், சிக்னல் போன்ற பல செயலிகள் உள்ளே நுழையப் பார்த்தன. சுதாரித்துக்கொண்ட வாட்ஸ் அப் நிபந்தனைக்கான கால நேரத்தை நீட்டித்தது. 

WhatsApp New Privacy Policy | நெருங்கியது வாட்ஸ் அப்பின் டெட்லைன்: மே 15க்கு பிறகு என்ன?

இந்த கால அவகாசத்திற்குள் பயனாளர்களுக்கு புரிய வைத்துவிடலாம் என நினைத்து தொடர்ந்து நிபந்தனை தொடர்பான தகவல்களை விளக்கமாக கூறி வருகிறது. ஆனாலும் கால அவகாசம் கொடுக்கப்பட்டாலும் கொள்கைகளில் மாற்றமில்லை என்பதை வாட்ஸ் அப் தெளிவுபடுத்தியது. அதாவது பிசினஸ் தொடர்பான கணக்குகளுடன் பயனர்கள் செய்யும் உரையாடல்கள் பேஸ்புக் சர்வரில் சேகரிக்கப்படும். இதனை வாட்ஸ் அப் பகிறும். இது விளம்பரங்கள் காட்ட மட்டுமே என்கிறது வாட்ஸ் அப். புதிய பிஸினஸ் வசதிகளுக்கான முதல் அடியாக இதனை வாட்ஸ் அப் எடுத்து வைக்கிறது.

அதாவது வரும் 15ம் தேதி தான் வாட்ஸ் அப் நிபந்தனையை ஏற்றுக்கொள்வதற்கான கடைசி தேதி ஆகும். வாட்ஸ் அப் ஏற்கெனவே தெரிவித்த அறிவிப்பின்படி, நிபந்தனையை  ஏற்றுக்கொள்ளாத கணக்குகள் டெலிட் செய்யப்படும். அதனால் மே 15க்கு பிறகு நிபந்தனை ஏற்றுக்கொள்ளதவர்களின் கணக்குகள் நிச்சயம் டெலிட் செய்யப்படுமா? அல்லது மேலும் காவ அவகாசம் அல்லது வாட்ஸ் அப் தனது நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டுவருமா என பயனர்கள் எதிர்பார்க்கின்றனர் இதற்கிடையே பயனர்களை விட்டுப்பிடிக்கவே வாட்ஸ் அப் நினைக்கிறது.

WhatsApp New Privacy Policy | நெருங்கியது வாட்ஸ் அப்பின் டெட்லைன்: மே 15க்கு பிறகு என்ன?

கணக்குகள் டெலிட் செய்வது குறித்து பேசிய வாட்ஸ் அப் செய்தித்தொடர்பாளர், ‛மே 15க்கு பிறகு நிச்சயம் எந்த கணக்குகளும் டெலிட் செய்யப்படாது. இந்தியாவில் பயனர்கள் யாருமே பாதிக்கப்படக்கூடாது என்றே வாட்ஸ் அப் விரும்புகிறது. நாங்கள் தொடர்ந்து சில வாரங்களுக்கு பயனர்களுக்கு நினைவூட்டுவோம். இந்தியாவில் பெருவாரியான பயனாளர்கள் வாட்ஸ் அப் நிபந்தனையை ஏற்றுக்க்கொண்டுள்ளனர். சிலருக்கு இன்னும் அதற்காக வாய்ப்புகிட்டவில்லை,’ என தெரிவித்தார். 

உலக அளவில் வாட்ஸ்அப் சேவையை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. வாட்ஸ் அப்பின் இந்த டெட்லைன் எந்த அளவிற்கு பலனளிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ambedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget