(Source: ECI/ABP News/ABP Majha)
WhatsApp: இனி நிறைய GIF ஸ்டிக்கர்ஸ் கிடைக்கும்; வாட்ஸ் அப்பின் அசத்தல் அப்டேட்- மெட்டா தகவல்!
WhatsApp Update: வாட்ஸ் அப் புதிதாக நிறைய ஸ்டிக்கர் டிசைன்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப் தனது ஸ்டிக்கர் லைப்ரரியை பிரபல GIF நிறுவனமான Giphy உடன் இணைந்து மேம்படுத்த உள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது.
மெட்டா நிறுவனம் தனது பயனர்களின் வசதிக்காக பல்வேறு அப்டேட்களை அவ்வப்போது வழங்கும். தனிப்பட்ட பயன்பாடு, வேலை, தொழில் உள்ளிட்டவற்றுக்கு வாட்ஸ் அப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியவற்றில் உள்ளது போன்ற வசதிகளை வாட்ஸ் அப்பிலும் வழங்க மெட்டா நிறுவனம் திட்டமிடுள்ளதாக தெரிகிறது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் இருக்கும் வசதிகளை மெட்டா வாட்ஸ் அப்பிலும் அறிமுகம் செய்துள்ளது. அதோடு, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் இரண்டிலும் தொழில் செய்யவும், பொருட்களை விற்பனை செய்யவும் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது.
வாட்ஸ் அப் குழு வீடியோ கால் வசதியில் நபர்களின் எண்ணிக்கையை உயர்த்தியது, 'All', 'Unread', 'Groups' Images, வீடியோ, லிங்க்ஸ் என சர்ச் டேப், மெட்டா ஏ.ஐ. உள்ளிட்ட அப்டேட்களை வழங்கியிருந்தது. வீடியோ,ஃபோட்டோக்களை HD தரத்தில் அனுப்புவதற்கான வசதி, அதோடு, அதிக எண்ணிக்கையிலான புகைப்படங்களை அனுப்புவது உள்ளிட்ட வசதிகளை வாட்ஸ் அப்பில் கிடைக்கிறது.
வாட்ஸ் அப் ஸ்டிக்கர்ஸ்:
வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்வது உடன் இமோஜி, ஸ்டிக்கர்ஸ் பயன்படுத்துவது பலரின் தேர்வாக இருக்கும். அப்படியிருக்கையில், நிறைய ஸ்டிக்கர்ஸ் வகைகளை அறிமுகப்படுத்த மெட்டா நிறுவானம் Giphy நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால், வாட்ஸ் அப்பில் விரைவில் புதிய ஸ்டிக்கர்கள், GIF அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மெட்டா AI ஸ்டிக்கர்ஸ்:
மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிட்ராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஏ.ஐ. வசதியை அறிமுகப்படுத்தியது. உங்களுக்கு ஏதாவது சந்தேகம், தகவல் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் கூகுளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளும் பழக்கம் சிலருக்கு இருக்கும். இனி, கூகுள் வலைதளத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாதவாறு மெட்டா அப்டேட் வெளியிட்டிருந்தது.
அதாவது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ஒரு மெசேஜ் செய்தால் போதும். உங்களுக்கு பதில் கிடைக்கும். ஃபோட்டோ, டிப்ஸ் உள்ளிட்டவைகளும் கிடைக்கும். இந்த வசதியை பயன்படுத்தி ஸ்டிக்கர்ஸ் உருவாக்கி கொள்ள முடியும். இது ஐ.ஓ.எஸ்., ஆண்ராய்ட் ஆகிய இயங்குதளத்தில் கிடைக்கிறது.
இன்னும் சில நாட்களில் வாட்ஸ் அப்பில் ஏராளமான அப்டேட் வெளியாக இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ் அப் beta for iOS 24.16.10.70 வர்சனில் மெட்டா வாய்ஸ் சாட் செய்யும் வசதி இருப்பதாக WABetaInfo வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Text மற்றும் Voice Mode இரண்டில் எது வேண்டுமோ அதை பயனாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். Apple Siri, கூகுள் Gemini AI யில் நீங்கள் பேசுவதை வைத்து அது பதில் அனுப்பும். இப்போது மெட்டா AI-யிலும் அந்த வசதி விரைவில் அறிமுகப்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Brief & Full மோட் என இரண்டு கொடுக்கப்பட்டிருக்கும். அதற்கேற்றவாறு நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு விரிவான, சுருக்கமான பதில்கள் கிடைக்கும் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.