WhatsApp Update: வீடியோ காலில் ஸ்கிரீன் பகிர்வு.. AI ஸ்டிக்கர்ஸ்.. Whatsapp கொடுத்த சூப்பர் அப்டேட்ஸ்..
WhatsApp Update: மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் ஒரு புதிய அப்டேட்கள் வழங்குவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Whatsapp-இல் வீடியோ காலில் மொபைல் திரையைப் பகிரும் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அளவில் தகவல் பரிமாற்றத்திற்கு பெரிதும் உதவும் வாட்ஸப் பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. வாடிக்கையாளர்களின் வசதி மற்றும் அவர்கள் யூசர் அனுபவத்தை மேம்படுத்துவதே எங்களின் முக்கிய நோக்கம் என்று மெட்டா தெரிவித்துள்ளது.
சமீபத்தில், வாட்சப் ஸ்டேட்டஸில் நமக்கு தெரியாமல் பகிரப்படும் நம்முடைய தகவல்களுக்கு ரிப்போர்ட் செய்தல், ஸ்பேம் அழைப்புகளை தவிர்க்கவும், வாய்ஸ் நோட்களை ஸ்டேட்டஸில் வைப்பது, வீடியோ மெசேஜ், ஒரே ஃபோன் - பல வாட்ஸ்-அப் கணக்குகள் உள்ளிட்ட பல புதிய அம்சங்களை வாட்சப் வெளியிட்டிருந்தது. அதோடு, நான்கு ஸ்மாட்ஃபோன்கள் வரை வாட்ஸ் அப்பை பயன்படுத்தலாம் என்றும் வாடிக்கையாளர்களுக்கு பல வசதிகளை அறிமுகம் செய்தது மெட்டா நிறுவனம்.
மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் ஒரு புதிய அப்டேட்கள் வழங்குவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, சமீபத்தில் பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், போன் நம்பர் பிரைவசி (Phone Number Privacy) என்ற புதிய அம்சத்தை மெட்டா அறிமுகப்படுத்தியது.
இந்த அம்சமானது வாட்ஸ் ஆப் குழுக்களில் புதிதாக இணையும் பயனர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். வாட்ஸ் ஆப் குரூப்பில் இருக்கும் பயனர்களின் மொபைல் நம்பரை இந்த அம்சம் மூலம் மறைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கிரீன் ஷேரிங்
ஃபேஸ்புக்கில் உள்ளது போலவே Whatsapp-இல் வீடியோ அழைப்பின்போது பயனர்கள் தங்கள் மொபைல் திரையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. Screen- sharing , ஹோஸ்ட் அவர்களின் திரையில் தோன்றும் உள்ளடக்கத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த சேவை மூலம் அலுவலகக் கூட்டங்கள் மற்றும் பிற விஷயங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் பயனர்கள் ஆவணங்களை உருவாக்க மற்றும் திரைப்பகிர்வு திறன்களுடன் விளக்க படங்களை காண்பிக்க இந்த புதிய அம்சம் அனுமதிக்கிறது.
இது Zoom, Google Meet போன்றவற்றில் இருந்ததுபோலவே வாட்ஸ் அப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. அதோடு, வாட்ஸ் அப்பில் வீடியோ அழைப்பில் இணைவோரின் எண்ணிக்கையையும் அதிகப்படுதியது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்த அப்டேட்
வாட்ஸ் அப் -ல் லாக்மொபைல் எண்ணை மட்டுமே சார்ந்து ஹேக்கிங் செய்வது சுலபமாக உள்ளது. சிம் குளோனிங் பயன்படுத்தி வாட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்வது எளிது. ஆனால் இந்த இமெயில் வெரிஃபிகேஷன் செயல்முறை மூலமாக வாட்ஸ்அப் கணக்கு இன்னும் பாதுகாப்பானதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. WAbetainfo வழங்கிய தகவலின்படி, இந்த இமெயில் ஆப்ஷன் 2.23.16.15 என்ற வாட்ஸ்அப் வெர்ஷனில் கிடைக்கிறது. இந்த இ-மெயில் வெரிஃபிகேசன் பீட்டார் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. சோதனை செய்த பிறகு முழுமையாக அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு ஸ்டிக்கர்ஸ்
வாட்ஸ் அப் பீட்டார் டெஸ்டர்களுக்கு ஏ.ஐ. அதாவது செயற்கை நுண்ணறிவு கொண்டு உருவாக்கப்படும் ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்துள்ளது. இது மற்ற பயனாளர்களுக்கு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.