மேலும் அறிய

Whatsapp Channels: இதுவும் வந்துருச்சா.. இனி வாட்ஸ் அப்பிலும் செய்தி வரும்.. வந்தது புதிய அப்டேட்..எப்படி பயன்படுத்துவது?

தனிநபர் மற்றும் நிறுவனங்கள் தரப்பில் இருந்து வரும் அதிகாரப்பூர்வ தகவல்களை உடனடியாக அறிந்துகொள்ள இந்த புதிய வசதி உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Whatsapp Update: தனிநபர் மற்றும் நிறுவனங்கள் தரப்பில் இருந்து வரும் அதிகாரப்பூர்வ தகவல்களை உடனடியாக அறிந்துகொள்ள இந்த புதிய வசதி உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்:

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்-அப், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், பயனாளர்களுக்கு கூடுதல் அம்சங்களை வழங்கும் விதமாகவும், அவர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி வருகின்றன.

அந்த வகையில் தான் தற்போது  ”சேனல்ஸ்” எனும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தனிநபர் மற்றும் நிறுவனங்கள் தரப்பில் இருந்து வரும் அதிகாரப்பூர்வ தகவல்களை உடனடியாக அறிந்துகொள்ள இந்த புதிய வசதி உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தை 150 நாடுகளில் அறிமுகம் செய்துள்ளது மெட்டா நிறுவனம்.

புதிய அப்டேட்:

அதன்படி, அப்டேட்ஸ் எனும் ஒரு புதிய டேப் வழங்கப்படுகிறது. பயனர்கள் தங்கள் குடும்பம், நண்பர்கள் மற்றும் சமூகங்களுடனான சாட்களில் இருந்து தனித்தனியாக அவர்கள் பின்பற்ற விரும்பும் ஸ்டேட்ஸ் மற்றும் சேனல்கள் எனும் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. சேனல்கள் என்பது  உரை, புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் வாக்கெடுப்புகளை அனுப்ப உதவும் ஒரு வழி ஒளிபரப்பு கருவியாகும்.

பயனர்கள் தங்களின் தேவைகள் மற்றும் விருப்பத்தின் பேரில் பின்தொடர வேண்டிய சேனல்களைத் தேர்ந்தெடுக்க ஒருவித கோப்பகத்தை ( searchable directory ) வாட்ஸ்-அப் நிறுவனம் வழங்குகிறது. அதனை பயன்படுத்தி பொழுதுபோக்குகள், விளையாட்டுக் குழுக்கள், உள்ளூர் செய்திகள் போன்றவை தொடர்பான சேனல்களை விருப்பத்தின் பேரின் பயனாளர்கள் தேர்வு செய்யலாம். சாட், இமெயில் மற்றும் ஆன்லைன் பதிவுகளில் இருந்து கிடைக்கப்பெறும், இணைய முகவரிகள் மூலமாகவும் பயனர்கள் செய்திகளை அறியலாம்.

இந்த அம்சத்தில் சேனல் நிர்வாகி மற்றும் அவர்களின் தொலைபேசி எண் மற்றும் சுயவிவரப் புகைப்படம் ஃபாலோவர்களுக்கு காட்டப்படாது, அதேபோல, அட்மின் மற்றும் பிற பயனாளிகளுக்கு தனிநபர் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் சேனல் ஹிஸ்டரியை 30 நாட்கள் வரை தங்கள் சேவையகங்களில் சேமித்து வைக்கும் என்றும், பின்தொடர்பவர்களின் சாதனங்களில் இருந்து இன்னும் வேகமாக அப்டேட்கள் அழிந்துவிடுவதற்கான வழிகளைச் சேர்க்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. நிர்வாகிகள் தங்கள் சேனல்களில் இருந்து ஸ்கிரீன் ஷாட்கள் மற்றும் ஃபார்வர்டுகளைத் தடுக்கும் விருப்பத்தைப் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

Apple iPhone 15 Series: ஆப்பிளின் ஐபோன் 15 சீரிஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்.. இணையத்தில் வைரலாகும் மீம்ஸ் வீடியோக்கள்

Apple Watch: ஆப்பிள் நிறுவனத்தின் அல்ட்ரா 2, சீரிஸ் 9 வாட்ச் அறிமுகம்..புதிய அம்சங்கள், விலை விவரங்கள் உள்ளே

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget