Apple Watch: ஆப்பிள் நிறுவனத்தின் அல்ட்ரா 2, சீரிஸ் 9 வாட்ச் அறிமுகம்..புதிய அம்சங்கள், விலை விவரங்கள் உள்ளே
Apple Smart Watch: ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 சீரிஸ் செல்போன்கள் உடன் புதியதாக, இரண்டு ஸ்மார்ட் வாட்ச்களையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Apple Smart Watch: ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 சீரிஸ் செல்போன்கள் உடன் புதியதாக, சீரிஸ் 9 மற்றும் அல்ட்ரா 2 மாடல் ஸ்மார்ட் வாட்ச்களையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவன நிகழ்ச்சி:
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய சாதனங்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள் வொண்டர்லஸ்ட் நிகழ்ச்சி, இந்திய நேரப்படி நேற்று இரவு 10.30 மணிக்கு தொடங்கியது. அதில், 15 சீரிஸில் 4 புதிய செல்போன்களையும், அதோடு 2 புதிய ஸ்மார்ட் வாட்ச்களையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஐபோன் 15 சீரிஸின் நான்கு செல்போன்கள் உடன், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் அல்ட்ரா 2 என புதியதாக இரண்டு ஸ்மார்ட் வாட்ச்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
வாட்ச் சீரிஸ் 9:
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வாட்ச் சீரிஸ் 9 ஸ்மார்ட்வாட்ச் புதிய S9 சிப் உடன் பல்வேறு வண்ணங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. உட்புறத்தில் அதன் வடிவமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் வழங்கப்பட்டுள்ள சிரி (siri) ஆப்ஷனை 2 பயன்படுத்த உதவுகிறது. உடல்நலன் தொடர்பான தரவுகளை சிரியின் வாய்ஸ் மூலம் அறியும் வசதி வாட்ச் சீரிஸ் 9-ல் வழங்கப்பட்டுள்ளது. தற்போதய சூழலில் ஆங்கிலம் மற்றும் மாண்டரின் மொழிகளில் மட்டும் இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற மொழிகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. வாட்ச் உடன் எளிமையில் உரையாடுவதற்கான டபுள் டேப் அம்சம் அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 2000 nits வரையில் இதில் பிரைட்னஸை அதிகரிக்கலாம்.
கேஸ் & வண்ண ஆப்ஷன்கள்:
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 ஆனது 41 மிமீ மற்றும் 45 மிமீ அளவுகளில் ஸ்டார்லைட், மிட்நைட், சில்வர், (தயாரிப்பு) சிவப்பு மற்றும் புதிய இளஞ்சிவப்பு அலுமினிய கேஸ்கள் மட்டுமின்றி, துருப்பிடிக்காத எஃகு நிறத்திலான தங்கம், வெள்ளி மற்றும் கிராஃபைட் கேஸ்களிலும் கிடைக்கிறது. புதிய ஸ்போர்ட் லூப் பேண்டுடன் கூடிய அலுமினிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 கார்பன் நியூட்ரல் ஆகும். இன் அந்த நிறுவனம் தோலை பயன்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் ஹெர்ம்ஸ் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சில்வர் மற்றும் ஸ்பேஸ் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 விலை ரூ.41,900-லிருந்து தொடங்குகிறது,
அல்ட்ரா 9 ஸ்மார்ட் வாட்ச்:
ஆப்பிள் நிறுவனத்தின் அதிக பிரைட்னஸ் கொண்ட ஸ்மார்ட் வாட்ச்சாக அல்ட்ரா 9 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த வாட்ச் 3000 nits-ஐ கொண்டுள்ளது. முதல் தலைமுறை அல்ட்ரா வாட்சை காட்டிலும், கூடுதலாக 50 சதவிகித பிரைட்னஸை பெற்றுள்ளது. ” நைட் மோட்” ஆப்ஷன் இதில் புதியதாக வழங்கப்பட்டுள்ளது. வாட்ச்சில் இடம்பெற்றுள்ள ஆம்பியண்ட் லைட் சென்சார் தேவையின் அடிப்படையில் தாமாகவே ”நைட் மோட்” ஆப்ஷனை செயல்படுத்துகிறது. வாட்ச்சின் தலை பகுதியை சுழற்றுவதன் மூலம் இதில் பிரைட்னஸை அட்ஜெஸ்ட் செய்ய முடியும். நொடிகள் மற்றும் ஆல்டிடியூட் போன்ற விவரங்களை நிகழ்நேர தகவல்களாக வழங்கும். எந்தவொரு ஆப்பிள் வாட்ச்சிலும் இல்லாத வகையில் விளையாட்டு, அவுட்டோர் அட்வென்சர்ஸ், கடல் மற்றும் நீர் விளையாட்டுகளின் போதும் பயன்படுத்தும் வகையிலான பல்வேறு அம்சங்க்ளும் இதில் இடம்பெற்றுள்ளன.
விலை விவரங்கள்:
இந்தியா உள்ளிட்ட 40 நாடுகள் மற்றும் பிராந்தியங்களை சேர்ந்தவர்கள் அல்ட்ரா 2 வாட்ச்சை முன்பதிவு செய்யலாம். செப்டம்பர் 22ம் தேதி முதல் இவை கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும். ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2-வின் விலை ரூ. 89,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆல்பைன் லூப் (நீலம், இண்டிகோ, ஆலிவ்), டிரெயில் லூப் (ஆரஞ்சு/பீஜ், பச்சை/சாம்பல், நீலம்/கருப்பு) மற்றும் ஓசியன் பேண்ட் (நீலம், ஆரஞ்சு) பிரிவுகளில் வெவ்வேறு வண்ணங்களில் இந்த வாட்ச்கள் விற்பனைக்கு வர உள்ளன.