WhatsApp Update: வாட்ஸ் அப்பில் வந்த புதிய மாற்றம்! இனி இப்படியெல்லாம் மெசேஜ் பண்ணலாம் - என்னென்ன தெரியுமா?
வாட்ஸ் அப்பில் புதிய டெக்ஸ்ட் ஃபார்மெட்டிங் வசதியை மெட்டா நிறுவனம் அறமுகப்படுத்தியுள்ளது.
Whatsapp Update: வாட்ஸ் அப்பில் புதிய டெக்ஸ்ட் ஃபார்மெட்டிங் வசதியை மெட்டா நிறுவனம் அறமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்:
தகவல் தொடர்புக்காக எத்தனையோ செயலிகள் இருந்தாலும், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவற்றிற்கு எல்லாம் முன்னோடியாக வாட்ஸ்-அப் செயலி உள்ளது. குறுந்தகவல்களை பரிமாறிக் கொள்ளும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி, அலுவலகங்களின் பாதி வேலையை இருந்த இடத்தில் இருந்து கொண்டே முடிக்கும் அளவிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த செயலி மெட்டா குழுமத்திற்கு கீழ் வந்த பிறகு, அதனை மேலும் மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது புதிய வசதியை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது.
புதிய வசதி:
வாட்ஸ் அப்பில் புதிய டெக்ஸ்ட் ஃபார்மெட்டிங் வசதியை மெட்டா நிறுவனம் அறமுகப்படுத்தியுள்ளது. அதாவது, புல்லட் லிஸ்ட் (Bulleted List), நம்பர்டு லிஸ்ட் (Number), பிளாக் கோட் (Block Quote), இன்லைன் கோட் (Inline Code) என்று புதிய ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. முக்கிய விவரங்கள், பொருட்கள் உள்ளிட்டவற்றை பட்டியிலட புல்லட் லிஸ்ட் அம்சத்தை பயன்படுத்தலாம். இந்த டெக்ஸ்ட் முறையை பயன்படுத்த ஸ்பேஸ் (Space) கிளிக் செய்து, பின்னர் குறிப்பிட்ட மெசேஜை டைட் செய்ய வேண்டும்.
புல்லட் லிஸ்ட் ஆப்ஷனை போல் தான் இந்த நம்பர்டு லிஸ்ட் அம்சம் பயன்படும். ஒரு விஷயங்களை பிரித்து தனித் தனியாக காட்ட இது உதவும். குறிப்பிட்ட வரிசையை எண்ணிடப்பட்ட பட்டிலயாக காட்ட முடியும். இந்த ஆப்ஷனை பயன்படுத்த 1,2,3 என்கிற தொடர்ச்சியான எண்களை பயன்படுத்தி ஸ்பேஸ் பட்டனை கிளிக் செய்து, பின்னர், குறிப்பிட்ட மெசேஜை டைட் செய்யலாம்.
பிளாக் கோட் ஆப்ஷன் என்பது முக்கியமான வார்த்தைகளை முன்னிலைப்படுத்தி காட்டி அதை கவனிக்கும்படி செய்ய உதவும். ஒரு மெசேஜ் தொடக்கத்தில் ‘>’ என்றதை பயன்படுத்தி, ஒரு ஸ்பேஸ்-ஐ டைட் செய்து பின்னர் குறிப்பிட்ட மெசேஜை டைப் செய்ய வேண்டும்.
மேலும், இன்லைன் கோட் ஆப்ஷன் என்பது ஒரு வாக்கியத்தில் உள்ள வார்த்தையை மற்ற வார்த்தைகளில் இருந்து வேறுபடுத்தி காட்ட உதவும். ’ என்ற சிம்பிலை பயன்படுத்தி, குறிப்பிட்ட வார்த்தைகளை டைப் செய்து, ’ இந்த சிம்பிலை டைப் செய்ய வேண்டும்.
அண்மையில் வந்த அப்பேட்:
ஸ்பேம் எனப்படும் தேவையற்ற குறுந்தகவல்களை தொடர்ச்சியாக அதிகளவில் அனுப்பப்படும் நிலையில், இதனை எதிர்கொள்ள வகையில் பயனர்கள் தங்கள் லாக் ஸ்கிரீனில் இருந்தபடியே ப்ளாக் செய்து கொள்ளலாம். இதன் மூலம், வாட்ஸ் அப் பயனர்கள் தங்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை அதிகப்படுத்தும் முயற்சியாக உள்ளது.
இந்த வசதியை கொண்டு பயனர்கள் ஸ்மார்ட் போனினை அன்லாக் செய்யாமல், நேரடியாக லாக் ஸ்கிரீனில் இருந்தபடி ஸ்பேம் மெசேஜ்களை ப்ளாக் செய்யலாம். வாட்ஸ் அப் மூலம் உங்களுக்கு ஸ்பேம் மெசேஜ்கள் வந்தால், உங்களது லாக் ஸ்கிரீனிலேயே Notification வரும். அதில், ப்ளாக் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அந்த நபரை ப்ளாக் செய்து கெள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.