Websites: இணையதள பயனாளர்களுக்கு பயன் அளிக்கும் 10 முக்கிய தளங்கள்..
மக்களுக்கு பயன்படும் மிகவும் முக்கியமாக உள்ள சில இணையதளங்கள் என்னென்ன?
இணையதள சேவை அதிகரிக்க தொடங்கியது முதல் இணையதள பயன்பாடு மிகவும் வேகமாக அதிகமாகியுள்ளது. தற்போது மக்கள் தங்களுடைய அன்றாட நிகழ்வுகள் தொடங்கி பல சந்தேகங்கள் ஆகியவற்றிற்கு இணையதள சேவையை நாடி வருகின்றனர். இதன்காரணமாக பல்வேறு இணையதளங்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் மக்களுக்கு பயன்படும் மிகவும் முக்கியமாக உள்ள சில இணையதளங்கள் என்னென்ன?
Downdetector.in:
Downdetector.in என்ற இணையதள மூலம் உங்களுடைய மொபைல் அல்லது கணினியிலுள்ள செயலிகள் எடுக்கும் நேரம் தொடர்பாக தெரிந்து கொள்ளலாம்.
Haveibeenpwned.com:
Haveibeenpwned.com என்ற இணையதளத்தின் மூலம் உங்களுடைய பாஸ்வேர்டு திருடப்பட்டுள்ளதாக என்று தெரிந்து கொள்ள முடியும். அதாவது உங்களுடைய மின்னஞ்சல் முகவரி அல்லது போன் நம்பர் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக என்பதை தெரிந்து கொள்ளலாம்.
Earth.fm:
Earth.fm இந்த இணையதளத்தின் மூலம் உலகத்திலுள்ள பல இடங்களில் உள்ள ஒலியை கேட்க முடியும். இதன்மூலம் தேசிய பூங்கா மற்றும் விலங்குகள் சரணாலயம் உள்ளிட்டவற்றின் ஒலியை கேட்க முடியும்.
Printfriendly.com:
Printfriendly.com என்ற இணையதளத்தின் மூலம் எந்தவிதமான இணையதள பக்கத்தையும் பிரிண்ட் செய்யக் கூடிய பிடிஎஃப் வசதியாக மாற்ற முடியும்.
Pixabay.com:
Pixabay.com என்ற இணையதளத்தின் மூலம் எந்தவித காபிரைட் பிரச்சினை இல்லாமல் இமேஜ் பதிவிறக்கம் செய்ய முடியும்.
Zamzar.com:
Zamzar.com என்ற இணையதளத்தின் மூலம் ஒரு ஃபையிலை(file) ஆடியோ, வீடியோ, எழுத்து உள்ளிட்ட எந்தவித வடிவத்திற்கும் மாற்றும் வசதி இடம்பெற்றுள்ளது.
DisposableWebPage.com:
DisposableWebPage.com என்ற இணையதளத்தின் மூலம் உங்களுக்கு தேவையான ஒரு இணையதள பக்கத்தை உருவாக்க முடியும். அத்துடன் அந்த பக்கம் உங்களுடைய கணினியில் மட்டும் பதிவாகும் படி செய்ய முடியும்.
Mathway.com:
Mathway.com என்ற இணையதளத்தின் மூலம் கணிதம் தொடர்பான விஷயங்களை சரி பார்த்து கொள்ளலாம். குறிப்பாக அல்ஜிப்ரா தொடர்பான கணக்குகள் இதில் சரியாக தெரிந்து கொள்ளலாம்.
Kiddle:
Kiddle என்ற இணையதளத்தின் மூலம் குழந்தைகளுக்கு தேவையான படங்கள், வீடியோக்கள், தகவல்கள் கிடைக்கும். இது கூகுள் நிறுவனத்தின் குழந்தைகள் தளமாக உள்ளது.
Tosdr.org:
Tosdr.org என்ற இணையதளத்தின் மூலம் பல்வேறு சேவை தொடர்பான நிபந்தனைகளை எளிதாக புரிந்து கொள்ளலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்