Twitter: புதிய அப்டேட் கொடுத்த டிவிட்டர் நிறுவனம்; ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஒரு ஸ்வீட் நியூஸ்..
ஆண்ராய்டு பயனர்களுக்கு, ட்வீட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியை தேர்ந்தெடுக்கும் அம்சத்தை டிவிட்டர் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
டிவிட்டர் (Twitter) நிறுவனம ஆண்ராய்ட் பயனர்களின் வசதிகாக, ட்வீட்டில் உள்ள வார்த்தைகளில் ஒரு குறிப்பிட்ட வரி அல்லது சொல்லை காப்பி செய்வதற்கான அப்டேட்டை விரைவில் வழங்க இருக்கிறது.
இதற்காக ட்விட்டர் நிறுவனம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எளிமையான மற்றும் பயனுள்ள அம்சத்தைச் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
Twitter for Android is finally working on the ability to select text on Tweet pic.twitter.com/xoqYwc7aeL
— Jane Manchun Wong (@wongmjane) April 2, 2022
இது குறித்து, பிரபலமான ஆப் ரிவர்ஸ் இன்ஜினியர் ஜேன் மன்சுன் வோங் (Jane Manchun Wong) ட்வீட்டில், இதை உறுதி செய்திருந்தார்.
I thought we can already do this using Overview Selection!?
— Narendra Ram (@narenkram) April 2, 2022
அதில், ட்விட்டர் விரைவில் ஆண்ராய்ட் பயனர்களுக்கு ட்வீட்டில் ஒரு பகுதியை தேர்வு செய்து காப்பி செய்யலாம். நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள் என்றால், இந்த அம்சம் ட்விட்டரின் iOS பயன்பாட்டில் சில காலமாக கிடைக்கிறது. ட்வீட்டை நீண்ட நேரம் அழுத்தினால், தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளையோ, சொற்களையோ காப்பி செய்து பகிரலாம். அல்லது ட்வீட் முழுவதும் தேர்ந்தெடுக்கும் விருப்பங்களை காண்பிக்கும்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
Overview text/image selection isn't available on all Android devices. Apart from Google Pixels I don't know if any other devices have it. (Google's is proprietary but other OEMs may have made their own.)
— Mishaal Rahman (@MishaalRahman) April 2, 2022
இப்போது வழக்கத்தில் உள்ள நடைமுறைபடி, ட்வீட்டில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளை காப்பி செய்ய வேண்டும் என்றால், முழு ட்வீட்டையும் காப்பி செய்து, அதை பேஸ்ட் செய்தால் மட்டுமே உங்களுக்குத் தேவையானதை மட்டும் காப்பி செய்ய முடியும். ஆனால், வரவிருக்கும் புதிய அப்டேட் மூலம், ட்வீட்டில் தேவையான குறிபிட்ட பகுதியை மட்டும் காப்பி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு, ஒருவர் இந்த காப்பி மற்றும் பேஸ்ட் அம்சம் ஆண்ராய்ட் ஃசாப்வேர் உள்ள ஒரு சில குறிப்பிட்ட ஸ்மார்ட்ஃபோன் மாடல்களில் மட்டுமே இருக்கிறது. இதையும் ட்விட்டர் நிறுவனம் சரி செய்ய வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்