Twitter Circle: இனி ட்விட்டரிலும் `ப்ரைவசி’ பெற்றுக் கொள்ளலாம்.. புதிதாக வருகிறது `ட்விட்டர் சர்க்கிள்!’
உலகம் முழுவதும் பிரபல சமூக வலைத்தனமான ட்விட்டர் தளம் புதிதாக ட்விட்டர் சர்க்கிள் என்ற சிறப்பம்சத்தை ஐ.ஓ.எஸ் பயனாளர்களுக்கும், ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கும் வழங்குவதாக அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பிரபல சமூக வலைத்தனமான ட்விட்டர் தளம் புதிதாக ட்விட்டர் சர்க்கிள் என்ற சிறப்பம்சத்தை ஐ.ஓ.எஸ் பயனாளர்களுக்கும், ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கும் வழங்குவதாக அறிவித்துள்ளது. இன்ஸ்டாகிராம் தளத்தின் ஸ்டோரி ஆப்ஷனைப் போலவே இருக்கும் இந்த சிறப்பம்சம் மூலமாக குறிப்பிட்ட நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மட்டும் உங்கள் எண்ணங்களைப் பகிரலாம். ட்விட்டர் வெளியிட்டிருந்த குறிப்பு ஒன்றில் இதுகுறித்து குறிப்பிடப்பட்ட போது, `உங்கள் ட்விட்டர் சர்க்கிளில் யார் இருக்க வேண்டும் என்பதை நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம். மேலும், உங்கள் ட்விட்டர் சர்க்கிளில் நீங்கள் சேர்த்துக் கொண்ட நபர்கள் மட்டுமே உங்களுக்கு ரிப்ளை செய்ய முடியும்’ எனக் கூறப்பட்டுள்ளது.
தற்போது ட்விட்டர் சர்க்கிள் சிறப்பம்சம் உருவாக்கப்பட்டு வந்தாலும், சர்வதேச அளவில் வெகுசிலர் மட்டுமே ட்விட்டர் சர்க்கிள் தளத்தை சர்வதேச அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆண்ட்ராய்ட், ஐ.ஓ.எஸ் பயனாளர்கள் ட்விட்டர் சர்க்கிள் அம்சத்தைப் பயன்படுத்துவது எப்படி? வழிமுறைகள் இதோ...
Some Tweets are for everyone & others are just for people you’ve picked.
— Twitter Safety (@TwitterSafety) May 3, 2022
We’re now testing Twitter Circle, which lets you add up to 150 people who can see your Tweets when you want to share with a smaller crowd.
Some of you can create your own Twitter Circle beginning today! pic.twitter.com/nLaTG8qctp
1. ட்விட்டர் செயலிக்குச் செல்லவும், அதன் Main Menu பகுதியில், Tweet என்பதை அழுத்தி ட்வீட் கம்போசர் பகுதியைத் திறக்கவும்.
2. இதில் Choose audience என்பதைத் தேர்ந்தெடுத்து, அதில் Everyone என்ற ஆப்ஷனை அழுத்தவும்.
3. ட்விட்டர் சர்க்கிள் என்ற ஆப்ஷனுக்கு அருகில் இருக்கும் Edit ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. Edit your Twitter Circle என்ற ஆப்ஷனுக்குக் கீழ், தேடுதல் அம்சத்தைப் பயன்படுத்தி உங்கள் ட்விட்டர் சர்க்கிளில் யார் இடம்பெற வேண்டும் என்பதை முடிவு செய்து தேர்ந்தெடுக்கவும்.
5. Add/Remove முதலான ஆப்ஷன்களைப் பயன்படுத்தி நமக்குத் தேவையானவர்களைச் சேர்க்கவும், தேவையில்லாதவர்களை நீக்கவும் முடியும்.
6. அடுத்ததாக Done என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் ட்வீட்டைத் தொடர்ந்து எழுதலாம்.
7. தற்போது Tweet என்பதைத் தேர்ந்தெடுக்கும் போது, நீங்கள் மேற்கொள்ளும் ட்வீட்களை உங்கள் ட்விட்டர் சர்க்கிளில் இருப்பவர்கள் மட்டுமே படிக்கவும், ரிப்ளை செய்யவும் முடியும்.