Twitter Down : முடங்கிய டிவிட்டர்; செயல்படுவதில் சிக்கல்.. தவிக்கும் பயனர்கள்.. திடீர்னு என்னாச்சு?
Twitter Down : கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பில் ட்விட்டர் சமூக வலைதள கணக்கை லாக்-இன் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உலக அளவில் டிவிட்டர் சேவை மீண்டும் முடங்கியுள்ளது. இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் டிவிட்டர் சேவையை மக்கள் பயன்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. டிவிட்டர் செயலி மற்றும் இணையதள பக்கத்திலும் அதை பயன்படுத்த முடியவில்லை என சிலர் தெரிவித்துள்ளனர். டிவிட்டர் பயனர்கள் தங்களது போஸ்ட்கள் தெரியவில்லை என்றும் ஹோம் பக்கத்தில் வெகு நேரமாக ‘டிரை அகெயின்’ என்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
டிவிட்டர் டவுன் இந்தியா
outage tracker Downdetector தகவலின் படி, டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, பாட்னா, ஐதராபாத், கல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் டிவிட்டர் பயனர்கள் தங்கள் டிவிட்டர் கணக்குகள் சரிவர செயல்படவில்லை என்று தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. டிவிட்டர் நிறுவனத்தில் ஊழியர்கள் நீக்கப்பட்டதற்கு பிறகு பயனர்களின் டிவிட்டர் கணக்கு முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு டிவிட்டர் நிறுவனம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டிவிட்டரும் எலாம் மஸ்க்-வும்
எலான் மஸ்க் இந்திய மதிப்பில் ரூ.3.5 லட்சம் கோடிக்கு டிவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கினார். செலவுகளை குறைக்க வேண்டும் என்று எலான் மஸ்க் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் செயல்பட்டு வந்த 3 ட்விட்டர் அலுவலகங்களில் 2 அலுவலகங்களை எலான் மஸ்க் மூடி விட்டார். இந்நிலையில் இருந்த 2000 பேரிலும் 200 பேரை நேற்றோடு நீக்கிவிட்டார். இதேநிலை தொடர்ந்தால் ட்விட்டர் சமூக வலைதளமாக நீடிக்குமா என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
டிவிட்டர் பணிநீக்கம்’
ட்விட்டர் நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் புதிதாக 200 பேரை வேலையைவிட்டு நீக்கியுள்ளார். இதன் மூலம் எஞ்சியிருக்கும் ஊழியர்களில் 10 சதவீதம் பேரை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்துள்ளார். எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவதற்கு முன்னர் அதில் 7500 ஊழியர்கள் இருந்தனர். பின்னர் தொடர்ந்து பணி நீக்க நடவடிக்கைகளை அவர் சரமாரியாக கட்டவிழ்த்தார். இதனால் ட்விட்டரின் ஊழியர் பலம் வெறும் 2000 ஆனது. தற்போது கடந்த சனிக்கிழமையன்று அதிலும் 10 சதவீதம் பேரை அவர் பணி நீக்கம் செய்துள்ளார். இது ட்விட்டர் ஊழியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதில் இருந்து எலான் மஸ்க் பல மாற்றங்களை செய்து வருகிறார். அதிரடியான மாற்றங்கள் நிறுவனத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
டிவிட்டர் சேவை முடக்கம் மீம்ஸ்:
“Welcome to Twitter!” என்று மட்டுமே பயனர்களுக்கு ஸ்கிரினில் வந்ததால் அனைவரும் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர். பலர், இதை மீம்ஸ்-களுக்கான வாய்ப்பாக கருதி பல நகைச்சுவையான மீம்ஸ் மற்றும் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
சிலர், ‘வெல்கம் டூ டிவிட்டர்’ என்றால் என்ன? டிவிட்டர் புதிதாக பிறந்துள்ளதா? என்பது போன்ற கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இன்னும் சிலரோ, டிவிட்டர் நிறுவனத்தில் இருந்து பொறியாளர்களை வேலையைவிட்டு நீக்கிய பிறகு இப்படிதான் இருக்கும் என்றும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
டிவிட்டர் தலைமையகத்தில் எலான் மஸ்க் மட்டும் டிவிட்டர் சேவையை சீர் செய்வதற்காக சர்வர் அறையில் முயற்சி செய்து கொண்டிருப்பார் என்று கேலிக்குள்ளாகும் வகையில் பலரும் தங்களது கருத்துகளை சமூக வலைதளத்தில் கூறி வருகின்றனர்.