Google Account Hack : உங்க கூகுள் அக்கவுண்ட் ஹேக் ஆகிடுச்சான்னு சந்தேகமா..! 2 நிமிஷத்துல தெரிஞ்சுக்கலாம்..
உங்கள் மின்னஞ்சலை யாராவது பயன்படுத்துகிறார்களா என்று உங்களுக்குச் சந்தேகம் வந்தால் உங்கள் கூகிள் பகுதியின் கீழ் Last account activity என்பதை கவனிக்கலாம்.
ஜிமெயில் உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் பிராண்டுகளில் ஒன்றாகும். கூகுள் நிறுவனம் தகவல் பாதுகாப்பிற்கு பல சிறப்பு அம்சங்களை வழங்கினாலும், ஹேக்கிங்லிருந்து 100% தப்பிக்கலாம் என்பது இல்லை. உலக அளவில் தகவல்கள் திருடப்பட்டு வெளியாகும்போது பல்வேறு முக்கியமான தகவல்கள் வெளியாவது வழக்கமானதுதான். அப்படியிருக்க, உங்கள் கூகுள் அக்கவுண்ட், ஜிமெயில் ஹேக் செய்யவில்லை என்பதை எப்படி உறுதி செய்வது என்பதற்கான வழிகள் இதோ.
உங்கள் கூகுள் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக நீங்கள் சந்தேகித்தாலோ அல்லது உறுதியாக இருந்தாலோ என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா? உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா என்பதை அறியவும், ஹேக் செய்யப்பட்டால் அதைக் கட்டுப்படுத்தவும் கூகுள் சில குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
உங்கள் கூகுள் கணக்கின் செயல்பாட்டை மதிப்பாய்வு செய்யவும், நீங்கள் செய்யக்கூடிய மற்றொரு விஷயம், உங்கள் கணக்கின் செயல்பாட்டை மதிப்பாய்வு செய்வது.
உங்கள் கூகுள் கணக்கில் செட்டிங்ஸ் பகுதிக்கு செல்லவும்.
செக்யூரிட்டி ஐகானை க்ளிக் செய்யவும்.
அதில் 'சமீபத்திய பாதுகாப்பு நிகழ்வுகள்' பேனலின் கீழ் பாதுகாப்பு என்பதைத் தேர்ந்தெடுத்து, பாதுகாப்பு நிகழ்வுகளை ஆய்வு செய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். ஏதேனும் சந்தேகத்திற்குரிய செயல்பாட்டைச் சரிபார்க்கவும் என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும்.
எதாவது சந்தேகத்திற்குரிய நடவடிக்கை உங்கள் அக்கவுண்டில் இருந்தால் அதுகுறித்து மேலும் ரிப்போர்ட் செய்யலாம். அப்படி ஏதும் இல்லை என்றால் ஆம் என்பதை தேர்வு செய்து கொள்ளலாம்.
உங்கள் அக்கவுண்ட் உடன் இணைக்கப்பட்டுள்ள சாதனங்களை பரிசோதிக்க, கூகுள் அக்கவுண்டில் மேனேஜ் டிவைசஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதில் புதியதாக ஏதேனும் டிவைஸ் இணைக்கப்பட்டுள்ளதைக் கண்டால், உங்கள் கூகுள் அக்கவுண்ட் இன்னும் பாதுக்கப்பாக இல்லை என்று தோன்றினால், உங்கள் கூகுள் கணக்கின் பாஸ்வேர்டை உடனடியாக மாற்றவும்.
உங்கள் கூகுள் அக்கவுண்டில் செக்யூரிட்டி என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும். அதில் பாஸ்வர்டு என்ற பிரிவின் கீழ், பாஸ்வேர்டை மாற்று என்பதைக் க்ளிக் செய்யவும். புதிய பாஸ்வேர்டை உருவாக்கவும்.
ஜிமெயில் ஹேக் செய்பவர்கள் முதலில் செய்வது உங்கள் பாதுகாப்பு தகவல்களை அழிப்பதுதான்.
உங்கள் மின்னஞ்சலை யாராவது பயன்படுத்துகிறார்களா என்று உங்களுக்குச் சந்தேகம் வந்தால் உங்கள் கூகிள் பகுதியின் கீழ் Last account activity: … hours ago on this computer- ல் Details என்ற பகுதியில் நீங்கள் தினமும் பயன்படுத்தும் ஐ.பி. முகவரி இருக்கும். அது மாறி இருந்தால் உங்கள் பாஸ்வேர்டு சம்பந்தமாக உள்ள அனைத்து தகவல்களையும் மாற்றி விடுங்கள்.
அனைத்தையும் செய்து சரிவரவில்லை என்றால், புதிய கணக்கு தான் துவங்கவேண்டும்.