ஆப்ஸ் மூலம் கண்காணிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு! ஐபோனின் தனியுரிமையை ஏற்காத பயனாளர்கள்!
9to5Mac இன் அறிக்கையின்படி, அதிகமான ஐபோன் பயனர்கள் செயலிகளால் கண்காணிக்கப்படும் விருப்பத்தை ஏற்றுக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது
பிரபல ஆப்பிள் நிறுவனம் தனது பயனாளர்களின் தனி உரிமையை பாதுகாப்பதற்காக கடந்த ஆண்டு டிரான்ஸ்பரன்ஸி அம்சத்தை அறிமுகப்படுத்தியிருந்தது. இது ஃபேஸ்புக் , வாட்ஸப் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு பிடிக்கவில்லை என்ற போதிலும் இழுபறியிலேயே வைத்திருந்த தங்கள் முடிவுகளை இறுதியாக மாற்றிக்கொண்டது. இதன் மூலம் பயனாளர்களின் விருப்பம் இல்லாமல் , அவர்களின் தனிப்பட்ட தகவல்களை எடுத்துக்கொள்ள செயலி நிறுவனங்களுக்கு உரிமை இல்லை . இந்த நிலையில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் ஐபோன் பயனாளர்கள் அதிகமானோர் ஐபோன் அறிவித்த தனியுரிமை பாதுகாப்பில் கவனம் கொள்ளவில்லை என சில தகவல்கள் தெரிவிக்கின்றனர்
Apple's privacy focus means fewer app features, slower development, say company's own engineers https://t.co/Tlv2SjzVgh by @benlovejoy
— 9to5Mac.com (@9to5mac) April 15, 2022
9to5Mac இன் அறிக்கையின்படி, அதிகமான ஐபோன் பயனர்கள் செயலிகளால் கண்காணிக்கப்படும் விருப்பத்தை ஏற்றுக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஆராய்ச்சி நிறுவனமான அட்ஜஸ்ட் வெளியிட்டுள்ளது. ஆப்ஸ் மூலம் கண்காணிக்கப்படும் ஐபோன் பயனர்களின் எண்ணிக்கை இப்போது சுமார் 25% ஆக உயர்ந்துள்ளது என அந்த ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு மே மாதத்தில் இந்த எண்ணிக்கை 16 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கிட்டத்தட்ட 9 % அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் மொபைல் கேமிங்தான் என கூறப்படுகிறது.
கேம்களை விளையாடும் பயனர்கள் டெவலப்பர்கள் தங்கள் தனிப்பட்ட தரவை சேகரிக்க அனுமதித்துள்ளனர். சுமார் 30% ஐபோன் பயனாளர்கள் , கேம் டெவலப்பர்கள் தங்கள் தரவைச் சேகரிக்க அனுமதித்துள்ளனர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் சில பிரபலமான கேம்கLஐ பதிவிறக்கம் செய்து விளையாடும் 75% பயனர்கள் தங்கள் தரவை கண்காணிக்கும் விருப்பத்தை அனுமதித்துள்ளனர் என்பதுதான்.
என்னதான் பயனாளர்கள் அதிகரித்திருந்தாலும், அதன் ஒப்பீட்டு விகிதத்தை கணக்கிட்டு பார்க்க வேண்டியிருக்கிறது. அதாவது கடந்த முறை பல்வேறு செயலிகளால் கண்காணிக்கப்பட்ட பயனாளார்கள் இம்முறை கேமிங் மூலம்தான் அதற்கான ஒப்புதலை அளித்திருக்கின்றனர். மொபைல் கேமிங் தற்போது சூடுபிடித்துக்கொண்டிருக்கிறது. வரும் காலங்களில் இது இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே ஐபோனின் தனியுரிமையை ஏற்காத பயனாளர்களின் எண்ணிகையும் அதிகரிக்கும் என்பதே ஆய்வு முடிவின் கருத்தாகும். ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு பயனாளர்களின் அனுமதி இல்லாமல் , செயலி நிறுவனங்கள் அவர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்க கூடாது என்றும் , இந்த புதிய விதிக்கு உட்படாத செயலிகளை ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கிவிடுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.