நச்சுனு ஒரு காரை சந்தையில் இறக்கிய டாடா..! வெளியானது Tata Punch!
Tata Punch Launched : வடிவமைப்பு மட்டுமின்றி தரம் மற்றும் பாதுகாப்பிலும் மிகவும் உறுதியான காராக டாடா பஞ்ச் உள்ளதாக அதன் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன
இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான டாடா குறைந்த விலையில் அதிக வசதிகளுடன் கூடிய கார்களை தயாரிப்பதில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. சமீபத்தில் டாடா நிறுவனம் வெளியிட்ட தியாகோ, அல்ட்ராஸ், டிகார், சஃபாரி, நெக்சன், ஹாரியர் ஆகிய 6 கார்கள் இந்திய ஆட்டோமொபைல் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி உள்ளன. அந்த கார் விற்பனை சக்கைபோடு போட்டு வரும் நிலையில், பஞ்ச் என்ற புதிய கார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இதன் படம், சிறப்பம்சங்கள் போன்றவை வெளியாகி கார் பிரியர்களின் வாயை பிளக்க வைத்துள்ளன. பெரும் வரவேற்பை பெற்ற டாடாவின் ஹாரியர் காரின் குட்டி மாடல் போல் இருப்பதால் இது காண்போரை கவர்ந்தது. மினி SUV வகையில் அமைந்திருக்கும் இந்த காரின் விலையை 6 லட்சம் ரூபாய்க்கும் குறைவு என்பதால் நல்ல வரவேற்பை பெரும் எனத் தெரிகிறது. அதே போல் சுசூகி நிறுவனத்தின் வெற்றிகரமான கார் மாடலான விடாரா ப்ரேசாவின் சாயலையும் ஒத்து அமைந்துள்ளது இந்த கார் விடாரா ப்ரீசாவின் நீல நிறம், வெள்ளை நிற மேற்கூரை போன்ற வடிவமைப்பிலும் டாடா பஞ்ச் கார் தயாரிக்கப்பட்டு உள்ளது.
வடிவமைப்பு மட்டுமின்றி தரம் மற்றும் பாதுகாப்பிலும் மிகவும் உறுதியான காராக டாடா பஞ்ச்(Tata Punch) உள்ளதாக அதன் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சாலையில் மட்டுமின்றி கரடு முரடான பாதைகள், மலைப் பாதைகள், அதிக மணற்பாங்கான பகுதிகள், சேரு சகதிகளிலும் இடையூறு இன்றி டாடா பஞ்ச் செல்லும் எனக் கூறப்படுகிறது. குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் இதில் 4X4 கியர் சிஸ்டமோ, அல்லது மலிவான கியர் சிஸ்டமோ இருப்பதாக கருதிவிட வேண்டாம். இதில், சாலை அல்லாத கரடு முரடான பகுதிகள் இதை ஓட்டிப்பார்த்து மிக சிறப்பாக செயல்படுவதாக முடிவுகள் வெளிவந்துள்ளன.
குறிப்பாக மலைப் பகுதிகளில் இனிமையான பயண அனுபவத்தை டாடா பஞ்ச் வழங்குவதாக இதை பரிசோதித்தவர்கள் தெரிவிக்கின்றனர். 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சனுடன் தயாராகி இருக்கிறகு இந்த கார். ஆனால், அதிக டார்க் கொண்ட எஞ்சினாக இருப்பதால் இந்த காரின் இழுவை திறன் சிறப்பாக இருக்கிறது. இதில் ஆட்டோமேடிக் கியரை விட மேனுவல் கியர் சிஸ்டம் கரடு முரடான பாதைகளில் பயணிக்க உதவுகிறது. குறிப்பாக இதன் சிறிய அளவிலான வடிவமைப்பு பெரிய கார்கள் செல்ல முடியாத பாதைகளில் கூட இதை செல்ல அனுமதிக்கிறது. பாறைகள் நிறைந்த சாலைகளில் கூட சமாளித்துக் கொண்டு இந்த காரில் செல்ல முடியுமாம்.
விலை குறைவு என்பதற்காக இந்த காரின் பாதுகாப்பிலும் எந்த குறையும் வைக்கவில்லை. இரட்டை ஏர்பேட், ஏ.பி.எஸ்., ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இறுக்கை என பல பாதுகாப்பு அம்சங்களை இந்த கார் உள்ளடக்கி இருக்கிறது. இதன் பாதுகாப்பு திறனை பரிசோதித்த குளோபல் என்.சி.ஏ.பி அமைப்பு இதற்கு 5 ஸ்டார்களை கொடுத்துள்ளது. இந்த காரை மோதல் பரிசோதனைக்கு உட்படுத்திய என்.சி.ஏ.பி., காரில் பயணிக்கும் பெரியவர்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதாக அறிவித்துள்ளது.