ஆன்லைன் வகுப்புகளுக்கு டேப் வாங்குறீங்களா? - இதோ உங்களுக்கான பரிந்துரைகள்!
25 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவான விலையில், ஆன்லைன் வகுப்புகளுக்கு ஏற்ற வகையில், என்ன டேப் மாடல் வாங்கலாம்?
கொரோனா ஊரடங்கின் காரணமாக இன்னும் பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்படாமல், பெற்றோர்களும், மாணவர்களும் ஆன்லைன் வகுப்புகளுக்குக் குறைந்த விலையில் சிறந்த டேப்களைத் தேடிக் கொண்டிருக்கும் சூழல் நிலவுகிறது. ஆன்லைன் வகுப்புகளுக்கு டேப் பயன்படுத்துவது பல்வேறு வகைகளில் சிறந்தது. ஸ்மார்ட்போன்களை விட அளவில் பெரியது டேப். அதே போல லேப்டாப்களை விட, செல்லும் இடங்களுக்கு எடுத்துச் செல்லும் வசதி டேப் பயன்பாட்டில் உண்டு. மேலும், 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் லேப்டாப்பில் அதிகளவிலான மேம்பட்ட வசதிகள் அளிக்கப்படுவதில்லை. அதே வேளையில், டேப் விலை மிகக்குறைவாகவும் மேம்பட்ட வசதிகளுடனும் இருக்கிறது.
25 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவான விலையில், ஆன்லைன் வகுப்புகளுக்கு ஏற்ற வகையில், என்ன டேப் மாடல் வாங்கலாம்?
Samsung Galaxy Tab A7 Lite - 14,999 ரூபாய்
சாம்சங் நிறுவனம் வழங்கியுள்ள மிகக் குறைந்த விலை கொண்ட டேப் இது. இதில் 8.7-inch WXGA (1,340x800 pixels) TFT display உடன், octa-core SoC பிராசஸர் அடங்கியுள்ளது. இதன் பின்பக்கத்தில் 8MP கேமராவும், முன்பக்கத்தில் 2MP கேமராவும் உள்ளது. இதன் விலை 14,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Lenovo Tab M10 FHD Plus - 21,999 ரூபாய் (ஒரிஜினல் விலை - 35,000 ரூபாய்)
35 ஆயிரம் ரூபாய் விலை மதிப்பு கொண்டிருக்கும் இந்த டேப் தற்போது அமேசான் தளத்தில், 21,999 ரூபாய்க்குத் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இதில் 10.3-inch FHD டிஸ்ப்ளே வசதியும், அதில் 1920 X 1200 pixel resolutionனும் கிடைக்கின்றது. இந்த மாடல் 1.8GHz MediaTek Helio P22T Tab processor மூலமாக வேலை செய்கிறது. இதில் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டிருப்பதால், இதனை நீண்ட நேரம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
iBall iTab MovieZ - 12,690 ரூபாய் (ஒரிஜினல் விலை - 24,999 ரூபாய்)
iBall iTab MovieZ டேப் தற்போது தள்ளுபடி காரணமாக, மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. இதன் ஒரிஜினல் விலையில் இருந்து சுமார் 12,300 ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 10.1-inch IPS FHD LED டிஸ்ப்ளே வசதியும், அதில் 1200 X 1920 pixel resolutionனும் கிடைக்கின்றது. இதில் 7000mAh பேட்டரி பவர் இருப்பதோடு, இதில் 1.6GHz+1.2GHz ARM Cortex-A55 octa core processor பொருத்தப்பட்டுள்ளது.
Lenovo Tab4 8 - 11,490 ரூபாய் (ஒரிஜினல் விலை - 16,000 ரூபாய்)
Lenovo Tab4 8 மீது சுமார் 4500 ரூபாய் தள்ளுபடி செய்யப்படுகிறது. இது 8-inch டிஸ்ப்ளே அம்சத்தையும், 1280 x 800 pixels resolutionனையும் கொண்டது. இதில் 4850mAh பேட்டரி உண்டு. மேலும், பின்பக்கம் 5MP கேமராவும், முன் பக்கத்தில் 2MP செல்ஃபி கேமராவும் இதில் உண்டு.
Panasonic Tab 8 HD - 10,499 ரூபாய் (ஒரிஜினல் விலை 16,000 ரூபாய்)
சுமார் 4500 ரூபாய் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த டேப் மாடல் 8-inch HD+ டிஸ்ப்ளே, 3GB RAM, 32GB ஸ்டோரேஜ் 5100mAh பேட்டரி ஆகிய அம்சங்கள் இதில் கிடைக்கின்றன.
Lenovo Yoga smart - 20,999 ரூபாய் (ஒரிஜினல் விலை 35,500 ரூபாய்)
சுமார் 14 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியில் இந்த டேப் கிடைக்கிறது. 10.1-inch டிஸ்ப்ளே கொண்ட இந்த டேப், 1920 x 1200 pixels resolutionனை அளிக்கிறது. மேலும் இதில் Qualcomm Snapdragon 439 SoC பிராசஸரும், 7000mAh பேட்டரியும் கிடைக்கிறது.