Redmi Note 11, 11s Launch: இந்தியாவில் வெளியானது ரெட்மி நோட் 11 மற்றும் நோட் 11 எஸ்… 108 மெகாபிக்சல் கேமரா! என்ன ஸ்பெஷல்?
இரண்டு மாடல்களின் இந்திய வகைகளும் ஒரே மாதிரியான ஸ்பெசிஃபிகேஷன்களை கொண்டிருக்கும், ஆங்காங்கே சிறு சிறு வித்தியாசங்கள் மட்டுமே உள்ளன.
2022 ஆம் ஆண்டின் இரண்டாவது மாதம் தொடங்கியுள்ளது. இந்த மாதத்திலேயே பல புதிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. சீன ஸ்மார்ட்போன் பிராண்டான ரெட்மி தனது புதிய ஸ்மார்ட்போன் தொடரான ரெட்மி நோட் 11 சீரிஸை இன்று (பிப்ரவரி 9 ஆம் தேதி) அறிமுகப்படுத்த உள்ளது. இந்த தொடரில் Redmi Note 11 மற்றும் Redmi Note 11S ஆகிய இரண்டு போன்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை பற்றி தெரிந்து கொள்வோம். Redmi Note 11 மற்றும் Redmi Note 11S இரண்டும் 90Hz AMOLED டிஸ்ப்ளேக்கள் மற்றும் குவாட் ரியர் கேமராக்களைக் கொண்டுள்ளன. Redmi Note 11 தொடருடன், Xiaomi-யின் துணை பிராண்ட் ஆன Redmi Smart Band Pro மற்றும் Redmi TV X43 இன் அறிமுகத்தை இன்று அதன் மெய்நிகர் நிகழ்வில் உறுதிப்படுத்தியுள்ளது. ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ சிறிய அப்டேஷனுடன் வருகிறது. மறுபுறம், Redmi TV X43, Dolby Vision மற்றும் 4K HDR பேனல் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. Redmi இன்று மதியம் 12 மணிக்கு Redmi Note 11 மற்றும் Redmi Note 11S இன் ஆன்லைன் வெளியீட்டை லைவாக ஸ்ட்ரீம் செய்கிறது. இந்த நிகழ்வு Facebook, Twitter மற்றும் YouTube உள்ளிட்ட Redmi India சமூக ஊடக சேனல்கள் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும். கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ லிங்க் மூலம் வெளியீட்டை நேரலையில் பார்க்கலாம்.
Redmi Note 11 சீரிஸ் Redmi Note 11 மற்றும் Redmi Note 11S இன் ஸ்பெசிஃபிகேஷன்களை வெளியிட்டுள்ளது. இரண்டு மாடல்களின் இந்திய வகைகளும் ஒரே மாதிரியான ஸ்பெசிஃபிகேஷன்களை கொண்டிருக்கும், ஆங்காங்கே சிறு சிறு வித்தியாசங்கள் மட்டுமே உள்ளன. Redmi Note 11 மற்றும் Redmi Note 11S இரண்டும் Android 11 இல் MIUI 13 உடன் இயங்குகிறது மற்றும் 6.43-இன்ச் ஃபுல்-HD+ (1,080x2,400 பிக்சல்கள்) AMOLED டாட் டிஸ்ப்ளே 20:9 விகிதத்துடன் உள்ளது. மற்றும் 90Hz வரை ரெஃப்ரஷிங் ரேட் கொண்டுள்ளது. Redmi Note 11 ஆனது Qualcomm Snapdragon 680 SoC ஐக் கொண்டுள்ளது. Redmi Note 11S ஆனது MediaTek Helio G96 SoC ஐக் கொண்டுள்ளது. Redmi Note 11 ஆனது 6GB RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது, அதேசமயம் Redmi Note 11S ஆனது 8GB RAM-ஐ கொண்டுள்ளது.
Redmi Note 11 ஆனது 50 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. Redmi Note 11S ஆனது குவாட் ரியர் கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது ஆனால் 108 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் கொண்டது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ சாட்களுக்காக, Redmi Note 11 ஆனது முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா சென்சார் உடன் வருகிறது. Redmi Note 11S, 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவை வழங்குகிறது. Redmi Note 11 மற்றும் Redmi Note 11S இரண்டும் 128GB வரையிலான ஸ்டோரேஜ் மற்றும் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளன. ஃபோன்களில் 33W ப்ரோ ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் Redmi Note 11 விலை ரூ. 13,999 அல்லது ரூ. 14,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் Redmi Note 11S ரூ. 16,999 அல்லது ரூ. 17,499, என்று சமீபத்திய அறிக்கை கூறுகிறது. மற்றொரு அறிக்கை Redmi Note 11S பேசிக் மாடல் 6ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் ரூ. 17,999 என்றும் மற்றும் 6ஜிபி + 128ஜிபி மாடலுக்கு ரூ. 19,999 என்றும் கூறப்பட்டுள்ளது.