மேலும் அறிய
Real me c25s Launch : பட்ஜெட் மொபைல் ப்ளானா? அலப்பறையே இல்லாமல் வெளியானது புது ரியல்மி ஃபோன்!
ரியல்மி தனது புதிய பட்ஜெட் மொபைலான Real me c25s திடீரென வெளியிட்டு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

Real me c25s
பட்ஜெட் மொபைல் பிரியர்களின் சாய்ஸில் ஒன்று ரியல்மி ஸ்மார்ட்போன்கள் . பொதுவாக மொபைல்போன்கள் வெளியாவதற்கு முன்னதாக அது குறித்த அப்டேட் இணையத்தில் கசிய தொடங்கும் ஆனால் ரியல்மி தனது புதிய பட்ஜெட் மொபைலை திடீரென சந்தைப்படுத்தியது இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வெளியான Realme C25 மொபைல் வெளியிடப்பட்ட நிலையில் தற்பொழுது Realme C25s விற்பனைக்கு வந்துள்ளது.
என்னென்ன வசதிகள் இருக்கு?
- கிரே மற்றும் ஊதா என இரண்டு நிறங்களில் அறிமுகமாகியுள்ள Realme C25s ஆண்ட்ராய்ட் 11 இயங்குதளத்தில் 6.5 இஞ்ச் திரையுடன் உருவாக்கப்பட்டுள்ளது
- LCD மல்டி தொடுதிறை தொழில்நுட்பத்துடன் 570 nits பிரைட்னஸ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் Helio G70 புராஸசருடன் உருவாக்கப்பட்டுள்ளது.
- பின்பக்கம் மூன்று கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 13 மெகா பிக்சல் சென்சார், 2 மெகா பிக்சல் கருப்பு வெள்ளை சென்சார், 2 மெகா பிக்சல் மேக்ரோ லென்ஸ் இதில் அடங்கும். 8 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது
- Realme C25s ஐ பொருத்தவரையில் பட்ஜெட் விலையில் தரமான பேட்டரி லைஃப்வுடன் உருவாக்கப்பட்டுள்
ளது 6,000mAh திறனுடன் , 18 வாட் அதிவேக சார்ஜிங் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஃபிங்கர் பிரிண்ட் வசதியுடன் வடிவமைக்கப்பட்டிருப்பதாலும் கூடுதல் கவனத்தை பெறுகிறது.
விலை எவ்வளவு ?
4GB RAM மற்றும் 64GB நினைவக திறனுடன் உருவாக்கப்பட்டுள்ள மொபைலின் விலை 10,999 ரூபாயாகவும், 4GB RAM மற்றும் 128GB நினைவக திறனுடைய மொபைல்போனானது 9999 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சமீபத்திய தொழில்நுட்ப செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் தொழில்நுட்பம் செய்திகளைத் (Tamil Technology News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
கல்வி
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion