GPay, Phonepe மூலம் ஒரு நாளைக்கு அதிகபட்சம், எவ்வளவு அனுப்பலாம்? RBI சொன்னது என்ன?
UPI Upper Limit: யுபிஐ பரிவர்த்தனை மூலம் வரி செலுத்தவதற்கு வசதியாக, அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது.
UPI Upper Limit: யுபிஐ மூலம் ஜி பே, போன் பே உள்ளிட்ட செயலிகளின் வழியாக பரிவர்த்தனையின் அளவு குறித்தும் , எதற்கெல்லாம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.
யுபிஐ பரிவர்த்தனை:
நம் அன்றாட வாழ்வில் வங்கியிலிருந்து பணம் அனுப்பி பெறும் வசதியில் இருந்து ஏ.டி.எம். பயன்பாடானது எளிமையாக்கியது. அதைத் தொடர்ந்து நெட் பேங்கிங் முறை, தற்போது செயலிகள் மூலமாக , அதாவது வங்கியின் செயலிகள், BHIM, G Pay, Phonepe, Paytm உள்ளிட்ட செயலிகளின் வழியாக பணப்பரிமாற்ற முறை பயன்பாட்டில் அதிகமுள்ளது.
இந்த முறையானது, எளிமையாக இருப்பதால், மக்கள் பயன்படுத்தும் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. இதில் சில்லறை வணிகத்தையும், அதாவது ரூ. 1 கூட கடைகளில் அனுப்ப முடியும் என்பதுதான், தொழில்நுட்பம் எந்தளவு வளர்ந்திருக்கிறது என்பதை யோசிக்க வைக்கிறது.
பரிவர்த்தனை அளவு:
யுபிஐ மூலம் பணம் பரிவர்த்தனை மேற்கொள்ளும் அளவானது, ரூ. 1 லட்சம் அளவு வரை அனுப்பலாம் என கூறப்படுகிறது. ஆனால், குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு இந்த அளவானது அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது, வரி செலுத்துவதற்கு ரூ. 1 லட்சமாக இருந்த பரிவர்த்தனையின் அளவானது, ரூ. 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வரி செலுத்தவர்களுக்கான முறையை எளிமைப்படுத்தப்படுகிறது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் கட்டணம் செலுத்துவதற்காக, யுபிஐ மூலம் அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
Never a dull moment for Payment Systems in India!
— Dilip Asbe 🇮🇳 (@dilipasbe) August 8, 2024
Announcements today by Governor, RBI in MPC - Aug 2024
1. Delegated Payments on UPI
2. Increased UPI Limits to Rs. 5L for tax payments
3. Continuous Clearing of Cheques@RBI @DasShaktikanta
ரெப்போ விகிதம்:
இன்று , ரிசர்வ் வங்கியின் பண கொள்கை குறித்தான செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் , ரெப்பொ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமில்லை என்றும் முந்தைய நடைமுறையே தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 9 முறையாக எந்த மாற்றமின்றி ரெப்போ விகிதமானது 6. 5 சதவிகிதம் என்ற அளவிலேயே தொடர்கிறது. இந்நிலையில், வங்கியில் கடனுக்கான வட்டி விகிதமும் மாற்றமடைய வாய்ப்பில்லை.
இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சக்திகாந்த தாஸ், வரி செலுத்துவதை எளிமையாக்கும் வகையில், யுபிஐ மூலம் பரிவர்த்தனை அளவானது ரூ. 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.