(Source: ECI/ABP News/ABP Majha)
OnePlus Phone | ரூ. 20,000-க்குள் ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்… செம்ம அப்டேட்ஸ் இங்கே..
குறைந்த பட்ஜெட் ஒன்பிளஸ் நார்ட் ஃபோன் மீடியாடெக் டைமென்சிட்டி சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பிராண்ட் உலகம் முழுவதும் பல நோர்ட்-சீரிஸ் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது, அவற்றில் மூன்று இந்தியாவிற்கு வந்தன. அவைகள் OnePlus Nord, Nord CE 5G மற்றும் Nord 2 மாடல்கள் ஆகும். இவை அனைத்துமே ரூ.30,000 க்கும் குறைவான விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இப்போது ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ரூ.20,000 க்கும் குறைவான விலையில் ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஒன்பிளஸ் 10 ப்ரோ மார்ச் மாதத்தில் உலகளவில் அறிமுகமாகும் என்றும், அதைத் தொடர்ந்து ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஒருங்கிணைந்த இயங்குதளம் ஓப்போ கலர்ஓஎஸ் மற்றும் ஆக்சிஜன்ஓஎஸ் ஆகியவற்றின் கலவையாக இருக்கும் என்றும் யோகேஷ் ட்வீட் உறுதிப்படுத்துகிறது.
20,000 ரூபாய்க்குள் வரும் போன்கள் Nord தொடரின் கீழ் இருக்கும் என்று யோகேஷ் ப்ரார் தெரிவித்துள்ளார். இந்த 20,000 ரூபாய்க்கு குறைவான ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதற்கான இறுதி முடிவு Q2 2022 ஆம் ஆண்டின் மத்தியில் எடுக்கப்படும் என்று முன்னதாக கூறி இருந்தார். ஸ்பெசிஃபிகேஷன்ஸ் பொறுத்தவரை, குறைந்த பட்ஜெட் ஒன்பிளஸ் நார்ட் ஃபோன் மீடியாடெக் டைமென்சிட்டி சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ஃபோனில் 90 ஹெர்ட்ஸ் AMOLED டிஸ்ப்ளே, 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 5G ஆகியவை இடம்பெறும் என்று தெரிகிறது. ப்ராரின் கூற்றுப்படி, ஒன்பிளஸ் பட்ஜெட் நார்ட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் திட்டங்களுடன் முன்னேறினால், நோர்ட் 3 அறிமுகத்திற்குப் பிறகு மொபைல் சந்தையில் வரும். OnePlus Nord CE 2 5G தற்போது இந்தியா மற்றும் ஐரோப்பாவில் சோதனை கட்டத்தில் உள்ளது.
இதற்கிடையில், OnePlus இந்தியாவில் Nord CE 2 ஐ அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதுவரை வந்துள்ள தகவல்களின் படி, Nord CE 2 பிப்ரவரியில் அதிகாரப்பூர்வமாக வரும் என தெரிகிறது, அதே நேரத்தில் OnePlus 10 Pro உலகளாவிய வெளியீடு மார்ச் மாதத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வெளியீடுகளைத் தவிர, OnePlus ஆனது வரும் மாதங்களில் இந்தியாவில் பல ஸ்மார்ட் டிவிகள், ANC-இயக்கப்பட்ட நெக்பேண்ட் இயர்போன்கள் மற்றும் இயர்பட்களை வெளியிடும் திட்டங்களுடன் உள்ளது.
தொடர்புடைய செய்திகளில், OnePlus அதன் முதல் டேப்லெட்டான OnePlus Pad ஐ வெளியிடுவதை தள்ளிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனம் இப்போது இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் டேப்லெட்டை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்ப்ளஸ் டேப்லெட்டைப் பற்றிய அறிக்கைகள் 2014 ஆம் ஆண்டிலிருந்தே வந்துகொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இன்னும் எப்போது வெளியாகும் என்ற தீர்க்கமான பதில் கிடைக்கவில்லை.