WhatsApp Update: ஆண்ட்ராய்டு போனில் இருந்து ஐபோனுக்கு வாட்ஸ் அப் சாட்டை மாற்றுவது இனி ஈசி!
வாட்ஸ் அப் சாட் டேட்டாவை ஆண்ட்ராய்டு போனிலிருந்து ஐபோனுக்கு மாற்ற ஆண்ட்ராய்டு 5 இயங்குதளத்தையும், ஐபோனில் iOS 15.5 இயங்குதளத்தையும் ஒருவர் கொண்டிருக்க வேண்டும்.
ஆண்ட்ராய்டு போனிலிருந்து ஐபோனுக்கு மாறி வரும் யூசர்களின் தொடர் கோரிக்கைகளுக்கு இணங்க, வாட்ஸ் அப் சாட் ஹிஸ்டரி / மெசேஜ் ஹிஸ்டரியை, ஆண்ட்ராய்டு சாதனங்களிலிருந்து ஐபோன்களுக்கு தங்கு தடையின்றி மாற்றும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஐபோனுக்கு மாறுபவர்களின் கவலைக்கு முற்றுப்புள்ளி!
பொதுவாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்ட மொபைல் ஃபோன்களில் இருந்து, ஐஓஎஸ் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட ஆப்பிள் மொபைல்களுக்கு ஒருவர் மாற விரும்புகையில், வாட்ஸ் அப் சாட்கள், வாட்ஸ் அப் புகைப்படங்கள், வீடியோக்கள், வாய்ஸ் மெசேஜ் உள்ளிட்ட தரவுகளை எப்படி ஆண்டிராயிடில் இருந்து ஐபோனுக்கு மாற்றுவது என்பதே அவரது மிகப்பெரும் கவலையாக இருக்கும்.
இந்த நிலையில், ஐபோனுக்கு மாற விரும்புவோரின் கவலையைப் போக்கும் வகையில், ஏற்கெனெவே உள்ள move to iOS செயலியின் மூலமாக அனைத்து ஆண்ட்ராய்டு போன்களில் இருந்து தரவுகளை பாதுகாப்பாக அனுப்பும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Mark Zuckerberg announces the ability to move chats to iOS!
— WABetaInfo (@WABetaInfo) June 14, 2022
Mark Zuckerberg just revealed on Facebook another top requested feature for WhatsApp: the ability to transfer our chat history from Android to iOS!https://t.co/TParp0dWF7
மார்க் ஜூக்கர்பெர்க் பதிவு
முன்னதாக இந்த வசதி சில சேம்சங் போன்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனரும் வாட்ஸ் அப் உரிமையாளருமான மார்க் ஜூக்கர்பெர்க், ”வாட்ஸ் அப் குறித்து பலரும் பல காலமாகக் கேட்டு இந்த வந்த வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வழிமுறை
வாட்ஸ் அப் சாட் டேட்டாவை ஆண்ட்ராய்டு போனிலிருந்து ஐபோனுக்கு மாற்ற ஆண்ட்ராய்டு 5 இயங்குதளத்தையும், ஐபோனில் iOS 15.5 இயங்குதளத்தையும் ஒருவர் கொண்டிருக்க வேண்டும். தரவுகளை அனுப்ப, பெற வேண்டிய இரண்டு போன்களையும் ஒரே வைஃபையில் இணைத்திருக்க வேண்டும்.
ஆண்ட்ராய்டு ஃபோனில் Move to iOS செயலியை திறந்து, அனைத்து தரவுகளையும் இந்த மேற்கண்ட வசதிகளைக் கொண்ட போன்களில் இருந்து அனுப்பிக் கொள்ளலாம். முன்னதாக வாட்ஸ் அப்பில் ஃபேஸ்புக் போலவே மெசேஜ்களுக்கு ரியாக்ட் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்