Realme 9i 5G: எல்லாமே இருக்கு.. நல்லாவே இருக்கு! பக்காவான பட்ஜெட் ஃபோனை வெளியிட்ட ரியல்மீ..
Realme 9i 5G மாடல் இன்று மதியம் 12 மணிமுதல் விற்பனைக்கு வந்துள்ளது. ஆகஸ்ட் 18-ஆம் தேதியே இந்த மாடல் ஃபோன் அறிமுகமான நிலையில் இன்று முதல் சந்தையில் விற்பனையாகிறது.
பட்ஜெட் விலையில் ஸ்மாட்ஃபோன் வாங்கணும்னு எண்ணம் இருப்பவர்களுக்கு ரியல்மி (Realme) சிறந்த தேர்வாக இருக்கும். ரியல்மி நிறுவனம் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்ஃபோன்களை விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறது. தொடர்ந்து புதுப்புது ஃபோன்களை சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல புதிய அப்டேட்களை அனைவரும் வாங்கும் வகையில் உள்ள விலையில் விற்பனை செய்கிறது. அந்த வகையில் தற்போது புதிதாக ரியல்மி களமிறக்கும் மாடல் Realme 9i 5G.
Realme 9i 5G மாடல் இன்று மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வந்துள்ளது. ஆகஸ்ட் 18ம் தேதியே இந்த மாடல் போன் அறிமுகமான நிலையில் இன்று முதல் சந்தையில் விற்பனையாகிறது. 4GB RAM + 64GB மாடல் போன் ரூ. 14999க்கும், 6GB RAM + 128GB மாடல் போன் ரூ.16,999க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ரியல்மி வெப்சைட்டிலும், ப்ளிப்கார்ட் வெப்சைட்டிலும் இந்த மாடல் விற்பனைக்கு உள்ளது.
When #The5GRockstar 🤝 ultimate rockstar!
— realme (@realmeIndia) August 18, 2022
We bring you #realme9i5G with:
💥Dimensity 810 5G Chipset
💥Laser Light Design
💥90Hz Ultra Smooth Display
Starting from ₹13,999*
*Price Inclusive of Bank Offer
1st sale at 12 PM on 24th August.
Know more: https://t.co/svC87rjeVx pic.twitter.com/nV952DnfJr
ஆஃபர்கள்..
ரியல்மி வெப்சைட்டில் ஐசிஐசிஐ டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1000 தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தவணை முறையில் வாங்கினால் ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.1500 தள்ளுபடி உண்டு. ப்ளிப்கார்ட்டை பொறுத்தவரை HDFC கிரெடிட், டெபிட் பரிவர்த்தனைக்கு ரூ.1000 ஆஃபர் கொடுப்பட்டுகிறது. அதேபோல HDFC மாத தவணை முறையில் செல்போன் வாங்கினால் ரூ.1500 வரை தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. அதேபோல் எக்ஸேன்ச் ஆஃபரும் உண்டு.
சிறப்பம்சங்கள்:
The #realme9i5G is here!
— realme (@realmeIndia) August 24, 2022
Powered by a Dimensity 810 5G Chipset and finessed with the remarkable Laser Light Design, #The5GRockstar is all you need to light up your world.
First Sale today at 12 PM
Know more: https://t.co/T245c65Qld pic.twitter.com/Udq6Ocxap9
Realme 9i 5G மாடல் இரண்டு நானோ சிம் பொருத்தும் வசதி கொண்டது. இது ஆண்ட்ராய்டு 12 கொண்டதாகவும் உள்ளது. இதன் டிஸ்பிளே 6.6 இஞ்சாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வீடியோ குவாலிட்டிக்காக 1,080x2,400 பிக்சல்ஸ் கொண்ட ஹெச்டி டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ரிபிரஸ் ரேட் 90Hz ஆகவுள்ளது. பேட்டரி கெபாசிட்டையை பொறுத்தவரி 5000 mAh கொடுக்கப்பட்டுள்ளது. சார்ஜர் 18W ஆக உள்ளது. இதனால் நீண்ட நேரம் சார்ஜை நாம் எதிர்பார்க்கலாம். கேமராவை பொறுத்தவரை பின்பக்கம் 50 மெகாபிக்ஸல் கொண்ட 3 விதமான கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்பக்க செல்பி கேமரா 8 மெகாபிக்ஸலாக கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற பொதுவான சிறப்பம்சங்களான ப்ளூடூத், 5ஜி, 4ஜி LTE, வைஃபை போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன. கைரேகையான பிங்கர் ப்ரிண்டை பொறுத்தவரை பக்கவாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.
Display | 6.60-inch |
Processor | MediaTek Dimensity 810 |
Front Camera | 8-megapixel |
Rear Camera | 50-megapixel |
RAM | 4GB, 6GB |
Storage | 64GB, 128GB |
Battery Capacity | 5000mAh |
OS | Android 12 |
Resolution | 1080x2400 pixels |