Poco C55 Launch: போக்கோ சி சீரிஸில் களமிறங்கிய சி55 ஸ்மார்ட் போன். அதுவும் வெறும் ரூ.9,499-க்கே..!
போக்கோ நிறுவனத்தின் சீ சீரிஸில் புதியதாக, சி55 எனும் புதிய ஸ்மார்ட்போன், இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
போக்கோ நிறுவனத்தின் சீ சீரிஸில் புதியதாக, சி55 எனும் புதிய ஸ்மார்ட்போன், இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ.9,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
போகோ ஸ்மார்ட்போன்:
இந்திய சந்தையில் தொடர்ந்து புதுப்புது ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யும் போகோ நிறுவனம், பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் தான், தனது சி சீரிஸில் புதியதாக மேலும் ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, பல்வேறு புதுப்புது அம்சங்களுடன் கூடிய போகோ சி55 எனும் பட்ஜெட் விலை ஸ்மார்ட், இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது.
விலை விவரங்கள்:
POCO C55 மாடல் ஸ்மார்ட்போன் ஆனது Forest Green, Cool Blue மற்றும் Power Black எனும் மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. அதோடு, 4GB + 64GB மற்றும் 6GB + 128GB என இரண்டு வேரியண்ட்களின் விலை முறையே ரூ.9,499 மற்றும் ரூ.10,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பிப்ரவரி 28 முதல் Flipkart இல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயல்திறன்:
POCO C55 ஆனது MediaTek Helio G85 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. MediaTek Helio G85 ஆனது அதன் Arm Mali-G52 GPU ஐ 1GHz உச்சம் வரை செலுத்துகிறது. மொபைல் கேமர்களுக்கு நிலையான செயல்திறனை அளிக்கிறது. விரிவாக்கக்கூடிய 5 ஜிபி டர்போ ரேம் கொண்டுள்ளது. இதன் விளைவாக 11 ஜிபி ரேம் வரை கிடைக்கும். இது Android 12 இல் இயங்குகிறது.
கேமரா விவரங்கள்:
கேமராக்களை பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா செட்டப் இடம்பெற்றுள்ளது. அதில் 50எம்பி மெயின் கேமரா உடன், முன்பக்கத்தில் 5MP செல்பீ கேமரா வழங்கப்பட்டுள்ளது. போக்கோ சி55 ஸ்மார்ட்போனில் 5,000mAh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இது 10W சார்ஜிங்கை ஆதரிக்கிறது.
சலுகைகள்:
POCO நிறுவனம் 4ஜிபி+64ஜிபி வேரியண்டில் ரூ.500 முதல் நாள் பிளாட் தள்ளுபடியை அறிவித்துள்ளது. மேலும், ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் SBI, HDFC மற்றும் ICICI டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு முறையே 4GB + 64GB மற்றும் 6GB + 128GB வகைகளில் ரூ.500 மற்றும் ரூ.1,000 வங்கிச் சலுகைகள் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் முதல் நாளில் மட்டும் இரண்டு வேரியண்ட்களை முறையே ரூ.8,499 மற்றும் ரூ.9,999-க்கு பெறலாம்.
”பெருமிதம் கொள்கிறோம்”
போகோ சி55 ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய POCO நிறுவன இந்திய தலைவரான ஹிமான்ஷு டாண்டன், “POCO நிறுவனம் அதன் C-சீரிஸ் போர்ட்ஃபோலியோ மூலம் 10 அயிரத்திற்கும் கீழே உள்ள பிரிவில் மகத்தான வெற்றியை கண்டுள்ளது. உண்மையான கேம் சேஞ்சராக இருக்கும் சிறந்த மற்றும் சக்திவாய்ந்த சி55 ஸ்மார்ட்போனுடன் பட்ஜெட் பிரிவை சமன் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என கூறினார்.