Oppo F29 Series: ஓப்போ F29 5G ஸ்மார்ட்போன் விற்பனை எப்போது? சிறப்புகள், விலை விவரம் இதோ!
Oppo F29 Series India Launch: ஓப்போ F29 சீரிஸ் வெளியீடு, சிறப்புகள் பற்றி இங்கே காணலாம்.

ஓப்போ நிறுவனத்தின் ‘Oppo F29 Series’ ஸ்மாட்ஃபோன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் வெளியீடு, புதிய மாடலில் கொடுக்கப்பட்டுள்ள சிறப்புகள் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
ஓப்போ F29 மாடல்:
ஸ்மாட்ஃபோன் சந்தையில் நாளுக்கு நாள் புதிய அப்டேட்களுடன் மாடல்கள் வெளியாகி வருகிறது. பிரபல ஸ்மாட்ஃபோன் நிறுவனம் ஓப்போ ‘Oppo F29 5G, Oppo F29 Pro 5G’ இரண்டு மாடல்களை வெளியிட இருக்கிறது. ஆண்ட்ராய்ட் 15, அதிக நேர பேட்டரி வசதி ஆகியவற்றுடன் வெளியாகும் என தகவல்கல் வெளியாகியுள்ளன.
Oppo F29 Vs Oppo F29 Pro: சிறப்புகள் என்ன?
ஓப்போ F29 5G சீரிஸ் மாடல், இந்தியாவில் மார்ச் 20-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகமாகிறது.
புதிய வடிவமைப்பு, 360 டிகிரி ஆர்மர் Case, MIL-STD-810H-2022 சான்றிதழ், IP66, IP68 மற்றும் IP69 ஆகிய மதிப்பீடுகளும் வழங்கப்பட்டுள்ளது. 6.7-inch AMOLED டிஸ்ப்ளே 120Hz ரெஃப்ரெஷ் ரேட். 3000 nits peak ப்ரைட்னஸ் உடன் வருகிறது.
Oppo F29 மாடல் 2.5GHz octa கோர் ப்ராசசர், F29 Pro 5G Qualcomm Snapdragon 6 Gen 3 chipset ப்ராசசர் உடன் வரலாம் என்று தகவல் தெரிவிக்கிறது. Oppo F29 மாடல் 256GB இன்டனர்ல் மெமரி, ப்ரோ வர்சன் 128GB உடன் கிடைக்குமாம். ஓப்போ F29 மூன்று கேமராவுடன் வருகிறது. தண்ணீருக்கு அடியில் புகைப்படம், வீடியோ எடுக்கும் அளவு வாட்டர் ரெசிஸ்டண்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
பேட்டரி மற்றும் சார்ஜிங்-ஐ பொறுத்தவரை ப்ரோ மாடலில் 6,000mAh பேட்டரி மற்றும் 80W சூப்பர்வூக் சார்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது. SuperVOOC உடன் வருவதால் அதிவிரைவாக சார்ஜ் ஆகிவிடும்.
F29 Pro 5G 8GB RAM + 128GB ஸ்டோட்ரேஜ், 8GB RAM + 256GB ஸ்ரோரேஜ் என இரண்டு வகைகளில் கிடைக்கிறது.
ஓப்போ F29 5G: கிளேசியர் ப்ளூ மற்றும் சாலிட் பர்ப்பிள் வண்ணங்களில் கிடைக்கும்.
ஓப்போ F29 ப்ரோ 5G மொபைல் கிரானைட் பிளாக் மற்றும் மார்பிள் வைட் வண்ணங்களில் கிடைக்கும்.
ஓப்போ F29 ப்ரோ 5G மொபைல் இந்தியாவில் ரூ.25,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.





















