Nothing Phone 1: பட்ஜெட் விலையில் ஐபோன் தரத்தில் புதிய மொபைல்! புதிய பிராண்ட்! விவரங்கள் உள்ளே!
நத்திங் ஃபோன் 1 ஜூலை 21 அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது
லண்டனை சேர்ந்த பிரபல நிறுவனமான NOTHING மொபைல் சந்தையில் தடம் பதிக்க இருப்பது நாம் அறிந்ததுதான். பிரபல ஒன் பிளஸ் நிறுவனத்தின் இணை இயக்குநர் கார்ல் சாய்யின் புதிய நிறுவனம்தான் நத்திங். லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனமான NOTHING கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நிறுவனமாகும். மக்களுக்கும் தொழில்நுட்பத்திற்கும் இடையில் இருக்கும் தடையை நீக்குவதுதான் தங்கள் நிறுவனத்தின் கோட்பாடாக கொண்டுள்ளது நத்திங் நிறுவனம். முதன் முதலாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் தேதி தனது முதல் படைப்பான இயர் ஒன் இயர்பட்டை அறிமுகப்படுத்தியது. ஆகஸ்ட் மாதத்திலிருந்து இதன் விற்பனை சக்கப்போடு போட ஆரமித்துவிட்டது. இரண்டே மாதங்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் யூனியன் இயர் ஒன் பட்டுகள் விற்பனையாக தொடங்கிவிட்டன. அதுவரையில் இயர்பட் தயாரிப்பிலிருந்த பல முன்னணி நிறுவனங்கள் நத்திங்க் பக்கம் கவனத்தை திருப்ப தொடங்கிவிட்டன.
You’ve speculated, and now you know.
— Nothing (@nothing) March 23, 2022
Nothing phone (1) is officially coming.
It’s unlike anything else.
Summer 2022.
Sign up for the latest updates on https://t.co/pLWW07l8G7. pic.twitter.com/Lo4UPkk7MT
இந்த நிலையில் மொபைல் தயாரிப்பிலும் நத்திங் கால் பதிக்க துவங்கியிருப்பதாக செய்திகள் வெளியானது. அதனை நிறுவனம் உறுதிப்படுத்தியது. இந்த ஆண்டு மொபைல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இணையத்தில் மொபைலின் வசதிகள், விலை உள்ளிட்ட சில தகவல்கள் கசிந்துள்ளன. வரவிருக்கும் மொபைலின் பெயர் Nothing Phone 1 என குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் இது ஒரு பட்ஜெட் மொபைலாக வரவிருக்கிறது. ஐபோனில் இருப்பது போல வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் வரவுள்ளதாம் . அதேபோல வயர்லெஸ் இயர்பட்களும் வழங்கப்படுவதாகும் கூறப்படுகிறது. transparent பின்பக்கத்துடன் வரவுள்ளது.ஜெர்மன் பதிப்பகமான ஆல் ரவுண்ட் பிசியின் அறிக்கையின்படி, நத்திங் ஃபோன் 1 ஜூலை 21 அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. Nothing Phone 1 ஸ்மார்ட்போனின் விலை சுமார் யூரோ 500 (சுமார் ரூ. 41,400) இருக்கலாம் என கூறப்படுகிறது.
இருப்பினும், நத்திங்கின் டிசைன் தலைவரான டாம் ஹோவர்ட் மற்றும் நிறுவனர் பீ ஆகியோர் ஒரு நேர்காணலில் தொலைபேசியின் வடிவமைப்பு மற்றும் அதன் சில விவரக்குறிப்புகளை உறுதிப்படுத்தியுள்ளனர். அதில் "ஸ்மார்ட்ஃபோனில் 400-க்கும் மேற்பட்ட கூறுகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. 'நல்லவற்றை' கொண்டாட விரும்பினோம்" என்றனர். மொபைல்போனி வசதிகளை பொருத்தவரையில் wallpapers, widgets, sounds, உள்ளிட்ட பல வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரத்யேகமாக தனது சொந்த படைப்பான நத்திங் ஓ.எஸ்ஸை பயன்படுத்தவுள்ளது. அதே போலகுவால்காம் நிறுவன சிப்செட்களை தனது புதிய சாதனங்களில் பயன்படுத்த இருப்பதாக நத்திங் அறிவித்தது. இதற்காக 50 மில்லியன் டாலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.