Moto G71: 3000 ரூபாய் தள்ளுபடி.. சூப்பர் போனை வெளியிடும் மோட்டோரோலா!
ஜனவரியில் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 695 5G SoC மற்றும் டிரிபிள் கேமராக்களுடன் போன் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மோட்டோரோலா நிறுவனத்தின் Moto G71 5G மாடல் இந்தியாவில் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஆன்லைன் விற்பனை நிறுவனமான ஃப்ளிப்கார்ட் வழியாக இந்த ஃபோன் வாங்குபவர்களுக்கு ரூபாய் 3,000 தள்ளுபடியில் இந்த ஃபோன் விற்பனை செய்யப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட கால சலுகையாகும், மேலும் நீங்கள் 5G கைபேசியை மலிவு விலையில் பெற திட்டமிட்டிருந்தால், இந்த வாய்ப்பை நீங்கள் நழுவ விடக்கூடாது.
இந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 695 5G SoC மற்றும் டிரிபிள் கேமராக்களுடன் போன் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
போன் குறித்த விவரங்கள்
ஒப்பந்தம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் Moto G71 5G இந்தியாவில் ரூபாய் 18,999க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது தற்போது ஃப்ளிப்கார்ட்டில் வெறும் ரூபாய்15,999க்கு கிடைக்கப் பெறுகிறது. ஒரிஜினல் விலையிலிருந்து ரூபாய் 3000 தள்ளுபடி செய்து இது விற்கப்படுகிறது.
ஸ்டேட் பாங்க் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்குபவர்கள் கூடுதலாக பத்து சதவிகிதத் தள்ளுபடியைப் பெறலாம். டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு அனைத்து ப்ரீபெய்ட் பரிவர்த்தனைகளுக்கும் 250 தள்ளுபடி மற்றும் ஸ்மார்ட்போன் பரிமாற்ற சலுகையின் கீழ் தள்ளூபடி விலையில் ரூபாய் 12,500க்கு கிடைக்கப்பெறுகிறது.
வடிவமைப்பு
இந்த ஸ்மார்ட்போனில் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. Moto G71 5G மெலிதான பெசல்களுடன் கூடிய டாப் செண்டர் பஞ்ச் ஹோல் கட் அவுட்டைக் கொண்டுள்ளது. இது மூன்று கேமராக்கள் மற்றும் கைரேகை சென்சார் கொண்ட பிளாஸ்டிக் பின்புற பேனலைக் கொண்டுள்ளது.
இந்த மாடல் 60Hz அப்டேட் வீதம் மற்றும் 20:9 வீதத்துடன் 6.4-இன்ச் முழு AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது ஆர்க்டிக் நீலம் மற்றும் நெப்டியூன் பச்சை நிறத்தில் வருகிறது.
அளவைப் பொறுத்தவரை, இந்த மொபைல் 8.5 மில்லி மீட்டர் தடிமன் மற்றும் 179 கிராம் எடை கொண்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

