மேலும் அறிய

Best Phones Under Rs 20000: புது ஃபோன் வாங்க போறீங்களா? ரூ.20,000தான் பட்ஜெட் - உங்களுக்கான டாப் 5 சாய்ஸ் இதோ

Top 5 Phones Under 20000 in India: ரூ.20 ஆயிரம் பட்ஜெட்டில்  புதிய ஃபோன் வாங்கும் திட்டம் உள்ளதா? உங்களுக்கான டாப் 5 சாய்ஸ் கீழே வழங்கப்பட்டுள்ளது.

Best Smartphone Under 20000: ரூ.20 ஆயிரம் பட்ஜெட்டில் இந்திய சந்தையில் கிடைக்கும் தரமான 5 ஃபோன்களின் விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

பட்ஜெட் ஸ்மார்ட் ஃபோன்கள்:

பிரீமியம் ஸ்மார்ட் போன்கள் காண்போரின் கவனத்தை ஈர்க்கலாம். ஆனால், 20 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டிற்குட்பட்ட ஸ்மார்ட் ஃபோன்கள் தான் அதிகப்படியான விற்பனையாகின்றன. சாதாரன ஃபோன்களிலிருந்து செயலிகளை உள்ளடக்கிய ஸ்மார்ட் ஃபோன்களின் பயன்பாடு என்பது இங்கிருந்து தான் அதிகரிக்கிறது.  விற்பனையில் இந்த செக்மெண்ட் ஃபோன்கள் முன்னிலையில் இருப்பதன் காரணமாகவே, பல்வேறு நிறுவனங்களும் இந்த பிரிவில் அதிகப்படியான மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றன.  இதன் விளைவாக ரூ.20,000 க்குக் குறைவான பட்ஜெட்டில் ஃபோனைத் தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்கு ஏராளமான ஆப்ஷன்கள் கிடைக்கும். இதனால் எந்த ஃபோனை வாங்குவது என ஏற்படும் குழப்பத்தை தவிர்க்கும் நோக்கில்,  20,000 ரூபாய்க்கு வாங்கக்கூடிய ஐந்து சிறந்த ஃபோன்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 

OnePlus Nord CE 3 Lite 5G:

20 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் எல்லா அம்சங்களும் அடங்கிய ஒரு ஃபோன் வேண்டுமென்றால், உங்களுடைய முதல் தேர்வு OnePlus Nord CE 3 Lite 5G ஆக இருக்க வேண்டும்.   OnePlus  பிராண்டிற்கே உரித்தான் சுத்தமான, நேர்த்தியான வடிவமைப்புடன் வருகிறது.  மிகவும் பிரகாசமான 6.72-இன்ச் FHD+ டிஸ்ப்ளேயை கொண்டுள்ளது. பின்புறத்தில் 108-மெகாபிக்சல் மெயின் சென்சார் மற்றும் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.  67W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் பெற்றுள்ளது.  மைக்ரோ எஸ்டி கார்டுகளுக்கான ஆதரவுடன், ஸ்போர்ட்ஸ் டூயல் ஸ்பீக்கர்கள் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளது.  

Moto G84 5G: 

மோட்டோ நிறுவனத்தின் ஜி84 5ஜி மாடல் விலை, இந்திய சந்தையில் ரூ. 18,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப் உடன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. ஃபோன் 120Hz ரிஃப்ரெஷ் ரேட்டுடன் 6.5 இன்ச் FHD+ poOLED டிஸ்ப்ளே பெற்றுள்ளது. இதன் பிரதான கேமரா 50-மெகாபிக்சல் மற்றும் OIS உடன் வருகிறது. இதில் உள்ள 5,000mAh பேட்டரி, ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒன்றரை நாள் வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Poco X5 Pro: 

போகோ நிறுவனத்தின் X5 Pro மாடலின் விலை ரூ. 18,499 ஆகும். இது பொதுவாக ரூ.25,000க்கு மேல் விலையுள்ள சாதனங்களில் காணப்படும், Snapdragon 778G சிப்பில் இந்த மாடல் ஃபோன் இயங்குகிறது. இதன் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆனது 6GB+128GB மற்றும் 8GB+256GB ஆகிய வேரியண்ட்களில் கிடைக்கிறது. 120ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் கூடிய 6.67-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 5000 mAh பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால்,  அதை ஒரு நாளுக்கும் மேல் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.  இந்த பேட்டரி வெறும் 45 நிமிடங்களில் பூஜ்ஜியத்திலிருந்து 100%-ஐ எட்டுகிறது. 

Samsung Galaxy M34 5G:

சாம்சங் கேலக்ஸி M34 5G மாடலின் விலை 16,499 ரூபாய் ஆகும். Snapdragon 695 சிப்பை விட மேம்பட்ட Exynos 1280 புராசசரில் இந்த ஃபோன் இயங்குகிறது.  ரேம் மற்றும் ஸ்டோரேஜில் 6GB+128GB, 8GB+128GB, மற்றும் 8GB+256GB ஆகிய வேரியண்ட்களில் கிடைக்கிறது. 120Hz ரிஃப்ரெஷ் ரேட்டுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் உடன் பிரகாசமான மற்றும் வண்ணமயமான 6.5 இன்ச் FHD+ Super AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. OIS உடனான ஒரு சிறந்த 50-மெகாபிக்சல் பிரதான கேமராவை கொண்டுள்ளது. இதில் வழங்கப்பட்டுள்ள 6000 mAh பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால்,  இரண்டு நாட்களுக்கு பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Redmi Note 12 5G: 

ரெட் மி நோட் 12 5ஜியின் விலை ரூ. 15,999 ஆகும்.  மிட் செக்மென்ட்டில் உள்ள ஃபோன்களைப் பொறுத்தவரை, சியோமியின் ரெட்மி நோட் சீரிஸ் முக்கிய பங்கு வகிக்கிறது.   120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய அற்புதமான 6.67-இன்ச் FHD+ Super AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது.  குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 1 செயலியானது வழக்கமான பணிகள் மற்றும்  கேமிங்கைக் கையாளும் திறன் கொண்டுள்ளது.  இதில் உள்ள 5,000mAh பேட்டரி, நாள் முழுவதும் ஃபோனை பயன்படுத்த வழிவகுக்கிறது.  ரேம் மற்றும் ஸ்டோரேஜில் 4ஜிபி+128ஜிபி, 6ஜிபி+128ஜிபி மற்றும் 8ஜிபி+256ஜிபி ஆகிய வேரியண்ட்களில் கிடைக்கிறது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
ஐடி ஊழியர் மாயம்.. போதையில் உளறிக்கொட்டிய நண்பர்கள்.. தகராறில் நண்பனை கொன்ற கொடூரம்
ஐடி ஊழியர் மாயம்.. போதையில் உளறிக்கொட்டிய நண்பர்கள்.. தகராறில் நண்பனை கொன்ற கொடூரம்
Embed widget