Voice Only Plan: வாய்ஸ் ஒன்லி திட்டம்.. வோடாஃபோனும் அறிவிப்பு - ஜியோ Vs ஏர்டெல், எந்த நிறுவனத்தில் விலை கம்மி?
Voice Only Plan TRAI: ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களை தொடர்ந்து வோடாஃபோன் ஐடியா (VI) நிறுவனமும், வாய்ஸ் ஒன்லி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Voice Only Plan TRAI: வாய்ஸ் ஒன்லி திட்டத்தின் மூலம் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் ஐடியா ஆகியவற்றில் எந்த நிறுவனம் மலிவு விலையில் சேவை வழங்குகிறது தெரியுமா?
வாய்ஸ் ஒன்லி திட்டம்
TRAI உத்தரவுகளைத் தொடர்ந்து, Vodafone Idea (Vi) நிறுவனமும் வாய்ஸ் ஒன்லி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் அழைப்பு மற்றும் SMS அனுப்பும் வசதி மட்டுமே கிடைக்கும். முன்னதாக ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களும் இதுபோன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. Vi அத்தகைய பாணியில் ஒரு திட்டத்தை கொண்டு வந்தாலும், ஜியோ மற்றும் ஏர்டெல் தலா 2 திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்நிலையில் TRAI என்ன ஆணை வழங்கியது மற்றும் இந்த நிறுவனங்கள் எந்த திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன என்பது குறித்து கீழே விவரிக்கப்பட்டுளது.
டிராய் பிறப்பித்த உத்தரவு
டிசம்பர் 23, 2024 அன்று முதல் வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்த அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது. இதற்காக நிறுவனங்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போதுள்ள ரீசார்ஜ் திட்டங்களுடன், நிறுவனங்கள் குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் மட்டும் போன்ற பலன்களைக் கொண்ட திட்டங்களையும் கொண்டு வர வேண்டும் என்று TRAI கூறியுள்ளது. டேட்டா தேவையில்லாதவர்களுக்கு இது போன்ற திட்டங்கள் அவசியம். அடிப்படை போன் பயனர்களுடன், 2 சிம்களைப் பயன்படுத்துபவர்களும் இதன் மூலம் பயனடைவார்கள்.
Vi 1460 திட்டம்
வோடாஃபோன் நிறுவனம் ரூ.1460 மதிப்பிலான வாய்ஸ் ஒன்லி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். 100 இலவச எஸ்எம்எஸ் வரம்பை அடைந்த பிறகு, ஒரு எஸ்எம்எஸ்க்கு 1 ரூபாய் வசூலிக்கப்படும். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 270 நாட்கள். அதேநேரம், வோடாஃபோன் ஐடியாவில் குறைந்தபட்சமாக 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் 249 ரூபாய் திட்டத்திற்கு ரீசார்ஜ் செய்தால், நாள் ஒன்றிற்கு ஒரு ஜிபி டேட்டா, நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் கால் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
ஜியோவின் வாய்ஸ் ஒன்லி திட்டங்கள்
ஜியோ ரூ.458 மற்றும் ரூ.1,958 மதிப்பிலான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.458 திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 84 நாட்கள். இதில் நீங்கள் இலவச அழைப்பு மற்றும் மொத்தம் 1000 SMS பெறுவீர்கள். ரூ.1,958 திட்டமானது 365 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதில் நீங்கள் இலவச அழைப்பு மற்றும் மொத்தம் 3,600 SMS பெறுவீர்கள். அதேநேரம், ஜியோவில் குறைந்தபட்சமாக 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் 299 ரூபாய் திட்டத்திற்கு ரீசார்ஜ் செய்தால், நாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி டேட்டா, நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் கால் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
ஏர்டெல் வாய்ஸ் ஒன்லி திட்டங்கள்:
ஏர்டெல் ரூ.509 திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு மற்றும் 900 எஸ்எம்எஸ்களை 84 நாட்களுக்கு வழங்குகிறது. அதேசமயம் ரூ.1,999 திட்டத்தில் பயனர்கள் வரம்பற்ற அழைப்பு மற்றும் 3,000 எஸ்எம்எஸ்கள் ஒரு வருட செல்லுபடியாகும். அதேநேரம், ஏர்டெல்லில் குறைந்தபட்சமாக 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் 349 ரூபாய் திட்டத்திற்கு ரீசார்ஜ் செய்தால், நாள் ஒன்றிற்கு 2 ஜிபி டேட்டா, நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் கால் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.





















