சோம்பேறித்தனத்தை விரட்டணுமா?அப்போ இத follow பண்ணுங்க..

வாழ்வில் வெற்றியடைய பெரிய தடையாக இருப்பதே இந்த சோம்பேறித்தனம் தான்.

அதிக வேலை காரணமாக ஓய்வு எடுக்கலாம். ஆனால் எந்த ஒரு வேலையுமே செய்யாமல் ஓய்வு எடுப்பது தான் சோம்பேறித்தனம்.

காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பது, உடற்பயிற்சி செய்வது போன்ற சில ஆரோக்கியமான பழக்கங்களை பின்பற்றவும்.

ஒரு வேலையை முடிக்க வேண்டும் என்றால்,அதனை உடனடியாக செய்து முடிக்க உங்களை பழக்கப்படுத்த வேண்டும்.

நீங்கள் வேலை செய்யும் மற்றும் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.

எப்போதும் அமர்ந்தே இருக்காமல், அடிக்கடி சிறிது நேரம் எழுந்து நடக்கவும்.

வேலை செய்யும் போது கவனத்தை சிதறவிடாமல் இருப்பது நல்லது.

சரியாக செய்து முடிக்கும் வேலைக்கு நீங்களே உங்களுக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்வது புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.