Mi 11 Lite Launch | ஒரு போன் ஒரு வாட்ச் : அசத்தும் ஜியோமி - விலை மற்றும் முழு விவரம்..!
சியோமி நிறுவனம் இன்று தனது Mi 11 Lite போன் மற்றும் Mi Watch Revolve Active ஆகியவற்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தனக்கென தனி மார்கெட்டை வைத்திருக்கும் சியோமி நிறுவனம், சீரான இடைவெளியில் பல்வேறு மாடல் போன்களை இந்தியாவில் களமிறக்கி வருகிறது. அதன்படி, Mi 11 Lite 4G மாடல் இந்தியாவில் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாக, 'சியோமி இந்தியா'வின் விற்பனைப்பிரிவு அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவலை பதிவிட்டார். ஆனால் புதிய மாடலின் ரிலீஸ் தேதி, போன் மாடலின் பெயர் என எதையுமே அவர் வெளியிடவில்லை. அதன் பிறகு ரசிகர்களின் ஆர்வத்தால் அந்த புதிய போன் Mi 11 Lite 4G என்றும் இம்மாதம் 22ம் தேதி அது வெளியாகும் என்றும் சியோமி நிறுவனத்தின் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வந்தன.
இந்நிலையில் இன்று ஜூன் 22ம் தேதி Mi 11 Lite 4G போனுடன் சேர்ந்து தனது அடுத்த படைப்பையும் வெளியிட்டுள்ளது சியோமி நிறுவனம். ஆம் அது தான் புதிய Xiaomi Mi Watch Revolve Active. பல மாதங்களாக எம்.ஐ. வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்த ஸ்மார்ட் வாட்ச் தற்போது விற்பனைக்கு வரவுள்ளது. Mi நிறுவனம் இந்த ஸ்மார்ட் வாட்ச் தொடர்பான தகவல்களை அண்மையில் வெளியிட்டது.
Mi வாட்ச் ரிவால்வ் ஆக்டிவின் சில முக்கிய அம்சங்கள்
இந்த ஸ்மார்ட் வாட்ச் இரத்த ஆக்ஸிஜன் செறிவு கண்காணிப்பு மற்றும் SpO2 மானிட்டருடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமேசான் அலெக்சா ஒருங்கிணைப்பைக் கொண்ட இந்த ஸ்மார்ட் வாட்ச் கூடுதலாக அழைப்பு மற்றும் அப்ளிகேஷன்ஸ் குறித்த அறிவிப்புகளை வழங்கும் திறன் கொண்டதாக இருக்கும். பிரத்தியேகமாக உடற்பயிற்சியை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் வாட்சில் ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் உடல் ஆற்றல் மற்றும் இதய துடிப்பு மானிட்டரிங் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.
விரைவில் அறிமுகமாகும் Jio 5G Launch : எப்பொழுது? என்னென்ன அம்சங்கள்?
#MiFans, less than 1 hour to go for the launch of #Mi11Lite & #MiWatchRevolveActive🤩
— Mi India (@XiaomiIndia) June 22, 2021
See us today @12PM👉 https://t.co/dVqrA1ftX9 for an exciting launch of 2 wonderful products.
Tighten up your seatbelts, get some popcorn & enjoy the show 🍿
RT🔁 and spread the word pic.twitter.com/oF9bak8m9G
வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மற்றும் 2 வார பேட்டரி லைப் கொண்ட இந்த ஸ்மார்ட் வாட்ச், இன்று (22ந் தேதி) மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அமேசான் மற்றும் Mi-யின் இணையதளத்தில் வரும் ஜூன் 25ந் தேதி முதல் விற்பனையாகும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் Mi 11 Lite போன் வரும் ஜூன் மாதம் 28 தேதி முதல் விற்பனைக்கு வரும் என்றும் சியோமி தெரிவித்துள்ளது.