மேலும் அறிய
Advertisement
மதுரை : பயோ டீசலாக மாறும் மீனாட்சியம்மன் கோவில் எண்ணெய்
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பிரசாதத்திற்கு பயன்படுத்திய 600 லிட்டர் எண்ணெய் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடம்பவனத்துப் பேரரசி மீனாட்சி, மதுரையின் பெருமைக்கு காரணமாக விளங்குகிறாள். ‘ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி’ என்றே மீனாட்சியை பெருமை கொள்வர். சித்திரை மாதமே போற்றும் மீனாட்சியின், அருள் மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் தேவரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் முதலாவது தலமாகும். இப்படி பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் மீனாட்சியம்மன் கோவிலை மையமாக வைத்தே மாமதுரை நிர்மாணிக்கப் படுகிறது. இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து அதன் வேலை நடைபெறாமல் இருந்த சூழலில் தற்போது மீண்டும் விறு,விறுப்பாக நடைபெற்று, கும்பாபிஷேகத்திற்கு தயாராகி வருகிறது.
மதுரையில் தினமும் திருவிழா என்பதுபோல் தினமும் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும். மீனாட்சியம்மன் கோயிலில் வழிபட வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக இனிப்பு வழங்க முடிவு செய்த கோயில் நிர்வாகத்தினர், லட்டு வழங்க முடிவெடுத்து கடத்த ஆட்சி முதல் வழங்கி வருகின்றனர். தற்போது கொரோனா முழு ஊரடங்கு தளர்விற்கு பின் கோவில் திறக்கப்பட்டு தொடர்ந்து லட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் பிரசாதம் தயாரிப்பதற்கு ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை எரிபொருள் தயாரிக்க வழங்கும் திட்டம் (RUCO) நேற்று முதல் தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக ஒரு முறை பயன்படுத்திய 600 லிட்டர் எண்ணெய் பயோ டீசலாக கேன்களில் சேகரிக்கப்பட்டது. மதுரையில் இந்த திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. தற்போது மீனாட்சியம்மன் கோவிலிலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில்...,” ஹோட்டல், உணவு தொழிற்சாலைகள், மால்கள் என அதிகளவு எண்ணெய் பயன்படுத்தக் கூடி இடங்களில் மீண்டும், மீண்டும் அதனை பயன்படுத்தும் போது புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை பயோ டீசலுக்கு கொடுக்க முடிவு செய்து பல இடங்களில் திட்டம் அமலுக்கு வந்துவிட்டது. மதுரையிலும் இந்த திட்டம் கடந்த சில வருடங்களாக இருந்துவருகிறது.
மேலும் மதுரை மாவட்டத்தின் நேற்றைய கொரோனா அப்டேட் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும் - TN Corona Update: மதுரையில் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு; சிவகங்கையில் 20 பேர்!
தற்போது மீனாட்சியம்மன் கோவிலில் பிரசாதங்கள் தயாரிக்க பயன்படுத்தும் எண்ணெயை பயோ டீசல் தயாரிக்க முடிவு செய்து முதல் கட்டமாக 600 லிட்டர் எண்ணெயை வாங்கியுள்ளோம். தொடர்ந்து இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மதுரையில் உள்ள சிறிய கடைகளிலும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம்” என்றனர்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் -Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
சமீபத்திய தொழில்நுட்ப செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் தொழில்நுட்பம் செய்திகளைத் (Tamil Technology News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion