Nokia Purebook Pro Laptop: அல்டிமேட் ஸ்டைல்.. 2 வெரைட்டி.. இந்த நோக்கியா லேப்டாப் பத்தி கண்டிப்பா தெரிஞ்சுகோங்க..
Nokia Purebook Pro Laptop: நோக்கியா பியூர்புக் ப்ரோ லேப்டாப்பின் சிறப்பம்சங்கள் குறித்து இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.
மக்களிடத்தில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் நிறுவனம் நோக்கியா. மொபைல் தயாரிப்பில் தனது ட்ரேடுமார்க்கை பதித்திருக்கும் அந்த நிறுவனம், சகநிறுவனங்களின் போட்டியால் பின்னடைவை சந்தித்தது. இருப்பினும் நோக்கியா நிறுவனம், விட்டுக்கொடுக்காமல் தங்களது பொருட்களை வெளியிட்டு வருகிறது.
மொபைல் மற்றும் மொபைல் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு மட்டுமல்லாது லேப்டாப்களையும் தயாரித்து வெளியிட்டு வருகிறது நோக்கியா நிறுவனம். அந்த வரிசையில், பியூர்புக் ப்ரோ என்ற லேப்டாப்பை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
என்ன ஸ்பெஷல்?
விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் முறையில் இயங்கும் இந்த லேப்டாப் Mobile World Congress 2022 யில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏற்கனவே டேபுளட்ஸ், வயர்லெஸ் ஹெட்செட் போன்றவற்றை தயாரித்து வரும் நோக்கியா நிறுவனம் இந்த லேப்டாப்பை தற்போது அறிமுகப்படுத்திருக்கிறது.
பெரிய அளவிலான டிஸ்ப்ளேவை கொண்டுள்ள இந்த லேப்டாப், 15.6 இன்ச் ஸ்கிரீன் மற்றும் 17.5 இன்ச் ஸ்கிரீன் என இரண்டு வேரியண்டுகளில் கிடைக்கிறது.
இன்டெல் கோர் 3 ப்ராசசர்
இன்டெல் கோர் 3 ப்ராசசரை கொண்டிருக்கும் இந்த லேப்டாப், 8 ஜிபி ரேம்மை கொண்டிருக்கிறது. 2 MB ஃப்ரண்ட் கேமாரவை லேப்டாப்பின் முன்பகுதியில் கொண்டுள்ள இதில் 512GB SSD ஸ்டோரேஜ்ஜை இடம்பெற்றிருக்கிறது.
க்ளார் அடிக்காமல் இருப்பதற்கு தேவையான ஆன்ட்டி கலர் கோட்டிங்கோடு வரும் இந்த லேப்டாப் 1.7 கிலோ மற்றும் 2.5 கிலோ என இரண்டு எடைகளில் கிடைக்கிறது. ஃபிங்கர் பிரிண்ட் ரீடருடன், பெரிய ட்ரேக் பேடும் இதில் இடம்பெற்றிருக்கிறது.
இரவில் உதவியாக இருக்கும் கீபோர்டு பேக்லைட் சப்போர்ட் இதில் இடம்பெறவில்லை. 3 விதமான யூஎஸ்பி சி C போர்ட்ஸ் மட்டுமல்லாது சிறிய அளவிலான எஸ்.டி. கார்டு ரீடரும் இதில் இடம்பெற்றிருக்கிறது. நார்மல் போர்ட் இடம்பெறாதது கொஞ்சம் ஆச்சரியம்தான்.
இரண்டு வேரியண்டுகளில் கிடைக்கும் லேப்டாப்பின் 15.6 இன்ச் மாடல் லேப்டாப் தோராயமாக 58,800 ரூபாயாகவும், 17.3 இன்ச் மாடல் லேப்டாப் 67,200 ரூபாயாகவும் உள்ளது. ஆனால் இந்த லேப்டாப்புகள் எப்போது சந்தைக்கு வரும் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்