மேலும் அறிய

JioBook | ஆஹா! தரச் சான்றிதழுக்கு அப்ளை பண்ணியாச்சாம்! - அப்புறம் என்ன.. Jiobook laptop பத்தி தெரிஞ்சுக்கோங்க..!

தற்போது வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில்  NB1118QMW, NB1148QMW மற்றும் NB1112MM  என மூன்று விதங்களில் Jio Book Laptop அறிமுகமாகும் என தெரிகிறது

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் முன்னணி நிறுவனமாக அறியப்படும் ஜியோ நிறுவனம் தற்போது மொபைல் , லேப்டாப் போன்ற சாதனங்களை உற்பத்தி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. சமீபத்தில் jio mobile next 4G என்னும் விலை மலிவான 4ஜி மொபைல் குறித்து அறிவித்திருந்தது. இந்நிலையில் விரைவில் தனது லேப்டாப்பையும் அறிமுகப்படுத்தும் என தெரிகிறது. Bureau of Indian Standards (BIS) என்னும் இந்திய தர சான்றிதழ் தளத்தில் ஜியோவின் லேப்டாப் மூன்று வகைகளில் பட்டியலிடப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்த விவரங்களை முகுல் ஷர்மா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஜியோ லேப்டாப்பானது ஜியோ புக் என்ற பெயரில் வெளியாகும் என முன்னதாக வெளியான சில இணைய கசிவுகள் தெரிவித்தன. இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக தர சான்றிதழுக்கு விண்ணப்பித்திருக்கும் தகவல் எதிர்பார்ப்பாளர்களை குஷிப்படுத்தியுள்ளது. jio book -இன் வசதிகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

jio laptop ஹை.டி  மற்றும் 1,366x768 பிக்சல்கள் வசதிகள் கொண்ட திரையுடன் உருவாக்கப்பட்டிருக்கலாம் என முன்னதாக வெளியான சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் வசதிகளுடன் உருவாக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும்  Snapdragon X12 4G மோடம் உடன் இணைக்கப்பட்ட Snapdragon 665 SoC  வசதிகளை பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இதுதவிர HDMI connector, டூயல் பேண்ட் வைஃபை (dual-band Wi-Fi) மற்றும் ப்ளூடூத் (Bluetooth) வசதி போன்றவையும் இடம்பெறும் என தெரிகிறது. அதே போல முன்னதாகவே இன்ஸ்டால் செய்யப்பட்ட ஜியோ அப்ளிகேஷன்ஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் அப்ளிகேஷனும் லேப்டாப்பில் இடம்பெறும் என தெரிகிறது.

முகுல் ஷர்மா வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில்  NB1118QMW, NB1148QMW மற்றும் NB1112MM  என மூன்று விதங்களில் அறிமுகமாகும் என தெரிகிறது. இதன் வசதிகளை பொறுத்து விலை மற்றும் செயல்பாடுகளில் மாற்றம் இருக்கும் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மற்ற பிராண்ட் லேப்டாப்பை ஒப்பிடும்பொழுது ஜியோ  லேப்டாப் நிச்சயம் பட்ஜெட் ஃபிரண்ட்லியாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

JioBook | ஆஹா! தரச் சான்றிதழுக்கு அப்ளை பண்ணியாச்சாம்! - அப்புறம் என்ன..  Jiobook laptop பத்தி தெரிஞ்சுக்கோங்க..!
 Jio mobile next 4G  ஆனது கடந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகை அன்று விற்பனைக்கு வரும் என ஜியோ நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால் உற்பத்தி பொருள் பற்றாக்குறை காரணமாக அதன் வெளியீட்டு தேதியை ஒத்திவைத்தது ஜியோ. நிச்சயம்  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு   jio mobile next 4G  
அதிரடியாக களமிறங்கவுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.   jio mobile next 4G ஆனது இந்தியாவின் மிக குறைந்த விலை கொண்ட 4ஜி மொபைல் ஆகும். அதன் விலை 3499 ரூபாயாக இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Pushpa 2 : நம்பி வாங்க!  புஷ்பா 2  அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Pushpa 2 : நம்பி வாங்க! புஷ்பா 2 அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல்  புகார் - பெரும் பரபரப்பு
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் - பெரும் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul, Priyanka Visit Sambhal : ”உள்ளே வராதீங்க ராகுல்” தடுத்து நிறுத்திய போலீசார் பாத்துக்கலாம் Bro! பிரியங்கா சவால்!நேற்று சேறு, இன்று பேனர்... கடும் கோபத்தில் மக்கள்! தலைவலியில் பொன்முடிநிர்மலாவை சந்தித்த திமுகவினர்ஸ்டாலின் கணக்கு என்ன?பின்னணியில் அதானி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Pushpa 2 : நம்பி வாங்க!  புஷ்பா 2  அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Pushpa 2 : நம்பி வாங்க! புஷ்பா 2 அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல்  புகார் - பெரும் பரபரப்பு
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் - பெரும் பரபரப்பு
சபரிமலையில் போதைப் பொருள்... கேரள போலீசார் விடுத்த எச்சரிக்கை என்ன?
சபரிமலையில் போதைப் பொருள்... கேரள போலீசார் விடுத்த எச்சரிக்கை என்ன?
Chennai OSC Recruitment: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; நேர்காணல் மட்டுமே- தமிழக அரசுத் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?
Chennai OSC Recruitment: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; நேர்காணல் மட்டுமே- தமிழக அரசுத் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?
Mithunam New Year Rasi Palan: விபரீத ராஜயோகம்! 2025 மிதுனத்துக்குத்தான் ஜாக்பாட்! யோகத்தை பாருங்க
Mithunam New Year Rasi Palan: விபரீத ராஜயோகம்! 2025 மிதுனத்துக்குத்தான் ஜாக்பாட்! யோகத்தை பாருங்க
தாறுமாறாக ஓடிய பேருந்து; தலைநசுங்கி இளைஞர் உயிரிழப்பு - திண்டுக்கல்லில் சோகம்
தாறுமாறாக ஓடிய பேருந்து; தலைநசுங்கி இளைஞர் உயிரிழப்பு - திண்டுக்கல்லில் சோகம்
Embed widget