மேலும் அறிய
Advertisement
Work From Home : Jio-வின் பட்ஜெட் ப்ளான்ஸ் இதோ..
வீட்டில் இருந்து பணிபுரியும் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு குறைந்த விலையில் இணைய சேவைகளை வழங்கி வருகின்றன.
கொரோனா சூழல் காரணமாக வீட்டில் இருந்து பணிபுரிவதை பல நிறுவனங்கள் ஊக்குவித்து வருகின்றன. கணினிமயமாக்கப்பட்ட தொழில்களை சார்ந்த பணியாளர்கள் மட்டுமே வீட்டில் இருந்து பணிபுரிகின்றனர். அவர்களுக்கு இணைய சேவை என்பது இன்றியமையாத ஒன்றாக இருப்பதால் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு பயனாளர்களுக்கு குறைந்த விலையில் இணைய சேவைகளை வழங்கி வருகின்றன. ஆனால் இணைய சேவைகளை குறைந்த விலையில் நிறைவாக அளிப்பதில் ஜியோ நிறுவனமே முன்னோடியாக இருந்து வருகிறது. அந்த வகையில் 300 ரூபாய்க்கும் குறைவாக மாதாந்திர சேவைகளை ஜியோ நிறுவனம் வழங்கி வருகிறது. இதனை வொர்க் ஃபிரம் ஹோம் திட்டங்கள் என்ற பெயரில் வகைப்படுத்தியுள்ளது. அந்த திட்டங்களை கீழே காணலாம்.
திட்டம் ரூ101 :
இந்த சந்தா மூலமாக பயனாளர்கள் 12 ஜிபி அளவிலான கூடுதல் இணைய சேவைகளை பெறமுடியும். தினமும் வழங்கப்பட்டும் 2 ஜிபி வரையிலான டேட்டாவை பயன்படுத்திய பின்னர் இந்த சந்தாவில் உள்ள டேட்டா கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இது 30 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.
திட்டம் ரூ151 :
இந்த திட்டம் மூலம் 30 ஜிபி அளவிலான டேட்டா சேவைகள் பயனாளர்களுக்கு கிடைக்கும். தினசரி டேட்டா அளவு முடிந்தபிறகு இதில் உள்ள டேட்டாக்கள் கணக்கில் கொள்ளப்படும். 30 நாட்களுக்கான வேலிடிட்டியுடன் இது அறிமுகமாகியுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் 64 kbps அளவிலான வேகத்தில் இணைய சேவையை ஜியோ நிறுவனம் வழங்குகிறது.
திட்டம் ரூ201 :
இந்த திட்டத்தினை ரீசார்ஜ் செய்வதன் மூலம் 64 kbps வேகத்திலான இணைய சேவையை 30 நாட்களுக்கு பெறமுடியும். இதன் மூலம் 40 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கிறது. தினசரி டேட்டா பயன்பாட்டிற்கு பிறகான கூடுதல் டேட்டாவை இது வழங்குகிறது.
திட்டம் ரூ 251
இந்த திட்டம் பயனாளர்களுக்கு 50 ஜிபி அளவிலான இணைய சேவையை 30 நாட்களுக்கு வழங்குகிறது. முன்னதாக கிரிக்கெட் பேக் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சந்தாவில் 51 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது வீட்டில் இருந்து பணிபுரிபவர்களுக்கான பெஸ்ட் திட்டமாக பார்க்கப்படுகிறது. மேற்கண்ட அனைத்து திட்டங்களும் ஜியோவின் Data Add on பிரிவின் கீழ் கிடைக்கிறது. இதனை MyJio, Jio.com , Upi Apps மற்றும் ஜியோ ரீடெய்லர்கள் மூலமாக ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.
சமீபத்திய தொழில்நுட்ப செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் தொழில்நுட்பம் செய்திகளைத் (Tamil Technology News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தேர்தல் 2024
காஞ்சிபுரம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion