James Webb Telescope : சுழலும் கேலக்ஸி.. பிரபஞ்சத்தை அடுத்தடுத்து வெளிச்சம் போட்டுக்காட்டும் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் !
ஜேம்ஸ் புகைப்படத்தை வெளியிடுவதற்கு முன்னதாக அந்த வேலையை ஹப்பிள் செய்து வந்தது. ஹப்பிள் ஒன்றும் அவ்வளவு சலைத்ததெல்லாம் கிடையாது
ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் :
உலகின் மிக சக்தி வாய்ந்த மற்றும் மிக பெரிய ஸ்பேஸ் டெலஸ்கோப் ஜேம்ஸ் வெப் . சமீபத்தில் இந்த தொலைநோக்கி 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பு ஏற்பட்ட சமயத்தில் உண்டான கேலக்ஸி , நட்சத்திரம் உள்ளிட்டவற்றை துல்லியமாக புகைப்படம் எடுத்திருந்தது. அது ஒரு மண் துகள் அளவில் இருந்த பகுதியில் மட்டுமே எடுக்கப்பட்ட புகைப்படம். அதற்குள்ளாகவே இத்தனை கேலக்ஸியா என உலகமே பிரமித்து போனது.
View this post on Instagram
சுழல் விண்மீன் திரள் :
தற்போது ஜேம்ஸ் பல ஆச்சர்யமூட்டும் புகைப்படங்களை எடுத்து நாசாவிற்கு அனுப்பி வருகிறது. அந்த வகையில் நம்மை மூச்சடைக்க செய்யும் சுழல் விண்மீன் திரள் ( Spiral Galaxies) ஐ படம்பிடித்து அனுப்பியுள்ளது. விண்மீன் திரள்கள், NGC 628 மற்றும் NGC 7496, இரண்டும் பால்வெளி விண்மீன் மண்டலத்திற்கு அருகில் அமைந்துள்ளன மற்றும் அருகிலுள்ள விண்மீன்களில் (PHANGS) உயர் கோணத் தீர்மானத்தில் இயற்பியலின் ஒரு பகுதியாக ஆய்வு செய்யப்படுகின்றன.
இது 32 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது, இந்த புகைப்படம் ஆய்வுக்கு மிகுந்த உதவியாக இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர் NGC 628 இல் குறைந்தது மூன்று சூப்பர்நோவாக்களைக் கண்டறிந்துள்ளனர்.விண்மீன் வட்டில் உள்ள சீரற்ற அடர்த்தியின் காரணமாக இப்படியான ஒரு அடர்த்தி உருவாகியிருக்கலாமாம் அதிக அடர்த்தி கொண்ட பகுதி நட்சத்திரத்தை அதை நோக்கி இழுக்கிறது, அது பார்களை உருவாக்குகிறது. இதை புகைப்படங்கள் விளக்குகின்றன. NGC 7496 ஆனது 24 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.
ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் ,ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் என்ன வித்தியாசம் :
ஜேம்ஸ் புகைப்படத்தை வெளியிடுவதற்கு முன்னதாக அந்த வேலையை ஹப்பிள் செய்து வந்தது. ஹப்பிள் ஒன்றும் அவ்வளவு சலைத்ததெல்லாம் கிடையாது. இரண்டையும் ஒப்பிடும் பொழுது ஹப்பில் ஒளியியல் மற்றும் புற ஊதா கருவியாக இருக்கிறது. ஆனால் ஜேம்ஸ் அகச்சிவப்பு ஒளியில் இயங்குகிறது மற்றும் ஒளியியல் அலைநீளத்தில் வாயு மற்றும் தூசிக்கு பின்னால் ஒளியைக் கண்டறியும் திறனைக் கொண்டுள்ளது. இதனால் ஹப்பிள் நுழைய முடியாத அதாவது துல்லியமாக நுழைய முடியாத இடத்தில் ஜேம்ஸ் ஸ்பேஸ் டெலஸ்கோப் நுழைகிறது. இதுதான் வித்தியாசம் .