Watch Video: "செவ்வாய் கிரகத்தில் ஏலியன்கள் இருக்கிறதா?" நாசா விஞ்ஞானிகள் விளக்கம்தரும் வாவ் தொடர்
இந்த வீடியோவில் 'செவ்வாய் கிரகம் வாழக்கூடியதா?,' 'ஏலியன்கள் இருக்கிறார்களா?', 'பிற உலகங்களில் கடல்கள் உள்ளதா?' போன்ற கேள்விகளுக்கு விளக்க வீடியோக்கள் பதில் அளிக்க முயற்சி செய்கின்றனர்.
மனித விஞ்ஞானத்தின் தேடலுக்கு முடிவே இல்லை. அது எப்போதும் முடிவிலியாகவே இருக்கிறது. விஞ்ஞானம் தேடிப்போகும் பாதை ஆச்சரியங்களை குவித்து வைத்துள்ளது. பூமியைப் போலவே பிற கோள்களிலும் உயிர்கள் இருக்க வாய்ப்புள்ளதா என்பதை செய்தியாக கேட்க நாம் எவ்வளவு ஆவலோடு இருக்கிறோம். ஆனால் விஞ்ஞானிகளோ அதே ஆவலுடன் அந்த கோள்களுக்கே சென்று தெரிந்துகொள்வோம் என வரிந்துகட்டி ஆராய்ச்சிகள் மேற்கொள்கிறனர். எப்போதுமே அவர்களின் முதல் சாய்ஸ் செவ்வாய் கிரகம்தான். ஏனென்றால் பூமிக்கு மிக நெருங்கிய இடத்தில் இருப்பது அதுதான்.
புதனும் சரி வெள்ளியும் சரி சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் சூரியனின் தாக்கம் பெருமளவு இருக்கும். ஆகவே அங்கே உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிக குறைவு. மூன்றாவதாக இருப்பது நாம் வாழும் பூமி. அதற்கு அடுத்த இடத்தில் செவ்வாய். செவ்வாயை தாண்டினால் சூரியனின் வெப்பம் அதிகம் இருக்காது. இதனால் அதிக குளிர்ந்த கோள்களாகவே வியாழன், சனி ஆகியவை இருக்க வாய்ப்பிருக்கிறது. இந்தக் காரணங்களால் தான் செவ்வாய் கோளின் மீது விஞ்ஞானிகளின் போக்கஸ் உள்ளது. அங்கே ஏலியன் போன்ற உயிர்கள் வாழ்கின்றனவா, அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பதை தேடி தேடி பார்க்கின்றனர்.
🤔 Is Mars habitable? Do aliens exist? Are there oceans on other worlds?
— NASA (@NASA) January 3, 2022
You've got questions. We've got answers. Our "We Asked a NASA Expert" video series tackles these questions and more. Watch: https://t.co/b3pJMcLVTo pic.twitter.com/iyxrk891db
அப்படி நாசா வெளியிட்டுள்ள இந்த வீடியோ தொடரில் அறிவியல் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு நாசா நிபுணர்கள் பதில் அளித்த வீடியோக்களைநாசா நிபுணர்கள் பதில் அளித்த வீடியோக்களை தொடராக நாசா வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தொடரில் மொத்தம் 20 வீடியோக்கள் உள்ளன. அதில் பல கேள்விகள் செவ்வாய் கிரகம் பற்றிய கேள்விகளாக உள்ளன. விஞ்ஞானிகள் இந்த வீடியோவில் 'செவ்வாய் கிரகம் வாழக்கூடியதா?,' 'ஏலியன்கள் இருக்கிறார்களா?', 'பிற உலகங்களில் கடல்கள் உள்ளதா?' போன்ற கேள்விகளுக்கு விளக்க வீடியோக்கள் பதில் அளிக்க முயற்சி செய்கின்றனர். மேலும் இந்த வீடியோ தொடரில், செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா, செவ்வாய் கிரகத்தில் பருவ நிலைகள் உள்ளனவா, அந்த கிரகத்தில் வானவில் தோன்றுமா, போன்ற கேள்விகள் முன்னிலை வகிக்கின்றன. அது போக பிற ஸ்வாரஸ்யமான அறிவியல் கேள்விகளுக்கும் பதில் சொல்லப்படுகிறது.