Ilayaraja : தனுஷுக்கு இப்படி ஒரு பாராட்டா? : ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடிய இளையராஜா.. களைகட்டிய ராஜா கேள்விகள்..
”ஒரு பாடல் உங்களை பாதிக்கிறதென்றால் அதுவே உயர்ந்த கலைப்படைப்பு, அந்த கலைப்படைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் அதுதான். உங்கள் இதயத்தை தொட்டதற்காக நான் தனுஷைப் பாராட்டுகிறேன்” - இளையராஜா
ட்விட்டரில் தனது ரசிகர்கள் தன்னைப் பற்றி பகிர்ந்த சுவாரஸ்யமான ட்வீட்கள் குறித்துப் பேசியும், கேள்விகளுக்கு பதிலளித்தும் இசையமைப்பாளர் இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி உள்ளது.
இந்தியாவின் இசை ஜாம்பவான்களுள் ஒருவரான இளையராஜா சமீபகாலமாக தனது ரசிகர்களுடன் சமூக வலைதளங்களின் வாயிலாக அதிகம் உரையாடி வருகிறார். அந்த வகையில் முன்னதாக ரசிகர்கள் அளித்த கேள்விகளுக்கும் அவர்களது பதிவுகளுக்கும் உற்சாகத்துடன் இளையராஜா பதில் அளித்து ரியாக்ட் செய்துள்ளார்.
2 நிமிடங்களில் கம்போஸ் செய்த ’கண்ணே கலைமானே’
அதில், ’கண்ணே கலைமானே’ பாடலை கண்களை மூடி கேட்குக்கொண்டிருந்தேன். ’காதல் கொண்டேன், கனவினை வளர்த்தேன்’ எனும் வரி வரும்போது தானாக என் கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கிவிட்டது. இளையராஜாவை ஏன் இசைக் கடவுள் என சொல்கிறார்கள் என்பதற்கு காரணம் உள்ளது” என இளையராஜாவை டேக் செய்து பகிர்ந்துள்ளார்.
இந்தப் பாடலை நான் வெறும் 2 முதல் மூன்று நிமிடங்களில் கம்போஸ் செய்து விட்டேன். உண்மை என்னவென்றால் இந்தப் பாடல் நேராக உங்கள் இதயத்தை சென்றடையக் கூடியது. அதனால் தான் மக்கள் இந்தப் பாடலைக் கேட்டு கரைந்து அழுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
’தனுஷை பாராட்டுகிறேன்’
Loved reading your #FanTweets 😊 pic.twitter.com/iLVdKpnvg2
— Ilaiyaraaja (@ilaiyaraaja) June 21, 2022
மேலும், ’ஆண் பாவம்’ தீம் இசை குறித்து தமிழ் சினிமாவின் சிறந்த தீம் இசைகளில் ஒன்று எனக் குறிப்பிடப்பட்டுள்ள ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள இளையராஜா, நான் இசை வழியாக என் உணர்வுகளை வெளிப்படுத்துகிறேன் அது படம் செல்லும் போக்கில் பொருந்துகிறது, அவ்வளவு தான்” என பதிலளித்துள்ளார்.
’ராக் வித் ராஜா’ இசை நிகழ்ச்சியில் தனுஷ் பாடிய பாடல் தனி பாடலாக ரிலீஸ் செய்யப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள இளையராஜா, ஒருவர் பாடல் கம்போஸ் செய்து அது உங்கள் மனதில் நிற்கிறதென்றால், அது உங்களின் மூளையின் திறன் அல்ல, அது உங்களை பாதிக்கிறதென்றால் அதுவே உயர்ந்த கலைப்படைப்பு, அந்த கலைப்படைப்புக்கு கிடைத்த அங்கீகாரம். உங்கள் இதயத்தை தொட்டதற்காக நான் தனுஷைப் பாராட்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் க்ராஸ் ஓவர்
அதேபோல் நெட்ஃப்ளிக்ஸின் பிரபல 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ தொடருக்கு இசை அமைப்பீர்கள் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என ரசிகர் ஒருவர் குறிப்பிட்டு எழுப்பியுள்ள கேள்விக்கு பதிலளித்துள்ள இளையராஜா, ஒவ்வொரு பாடலும் இப்படி எதிர்பார்க்காத ஒன்று தான், அப்படி இல்லாவிட்டால் அதில் சுவாரஸ்யம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்
மழை என்றால் சென்னை மக்களுக்கு ராஜா இசை
மழைனா சென்னை மக்கள் பக்கோடாவுடன் ராஜா சார் பாடல்களை கேட்கத் தொடங்கி விடுகிறார்கள் எனும் ட்வீட்டுக்கு ரியாக்ட் செய்துள்ள இளையராஜா, உங்கள் வாழ்க்கையில் ஏதாவது சம்பவம் நடைபெற்றால் என் பாடல் உங்களுக்கு நியாபகம் வரும், அல்லது என் பாடல்களில் ஏதாவதைக் கேட்டால் உங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவம் நியாபகம் வரும். உலகம் முழுவதுமுள்ள ரசிகப் பெருமக்களுக்கு இதைவிட்டால் வேறு வழியில்லை எனத் தெரிவித்துள்ளார்