Corona Whatsapp Chatbot | கொரோனாவுக்கான வாட்சப் ’சாட்பாட்’ பயன்படுத்துவது எப்படி?

மத்திய அரசு மற்றும் வாட்ஸ் அப் இணைந்து mygov charbot  என்ற  சேவையை கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்நிலையில்  தடுப்பூசி மையங்கள் குறித்து அறிந்து கொள்வதற்கான வசதியை இணைத்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது, இதற்கான தீர்வாக தடுப்பூசியை மருத்துவர்களும், அரசும் பரிந்துரைக்கின்றனர். இந்நிலையில் 18  வயது முதல் 44 வயது வரையிலானவர்களுக்கான கொரோனா தடுப்பூசி கிடைப்பதிலும் அதனை எங்கு பெறுவதிலும் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது.

   மத்திய அரசு மற்றும் வாட்ஸ் அப் இணைந்து mygov charbot  என்ற  சேவையை கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்நிலையில்  தடுப்பூசி மையங்கள் குறித்து அறிந்து கொள்வதற்கான வசதியை இணைத்துள்ளது.Corona Whatsapp Chatbot | கொரோனாவுக்கான வாட்சப் ’சாட்பாட்’  பயன்படுத்துவது எப்படி?

எப்படி பயன்படுத்துவது?முதலில் இதற்காக  கொடுக்கப்பட்டுள்ள  +919013151515 என்ற எண்ணினை மொபைலில் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் . பிறகு இந்த எண்ணிற்கு  hi, hello (namashte  என்றும் அனுப்பலாம்) என அனுப்பிய பிறகு சாட்பாட்  6 இலக்க மாவட்ட பின் கோடினை கேட்கும் , அதனை பதிவு செய்த பிறகு  பயனாளருக்கு அருகில் இருக்கக்கூடிய தடுப்பூசி மையங்களின் விபரங்களை நொடிப்பொழுதில் பெறலாம்.

அல்லது wa.me/919013151515 என்ற முகவரியை பயன்படுத்தி நேரடியாகவும் சாட்பாட் சேவையை பெறலாம். சாட்பாட் என்பது தானியங்கி சேவை மட்டுமே , இது ப்ரோக்ராம் செய்யப்பட்ட சேவையை மட்டும் வழங்குமே தவிர கொரோனா குறித்த சந்தேகங்களுக்கு பதில் அளிக்காது.Corona Whatsapp Chatbot | கொரோனாவுக்கான வாட்சப் ’சாட்பாட்’  பயன்படுத்துவது எப்படி?

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கொரோனா வாட்ஸ் அப் சேவையானது 30 மில்லியன் பயனாளர்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக பொதுமக்களிடத்தில் அச்ச உணர்வு எழுந்துள்ளது. அவ்வாறு ஏற்பட்டுள்ள அச்சத்தை தீர்க்கும் விதமாக தான் இது போன்ற சேவைகளை மத்திய அரசு, தனியாருடன் இணைந்து வழங்கி வருகிறது. இதன் மூலம் பலருக்கு பலன் கிடைக்கும் என்றும் மத்திய அரசு தரப்பில் நம்பப்படுகிறது. 

சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பல உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவியது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. இந்த தொற்றால் ஏராளாமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளுக்கு பொருளாதார பிரச்னை ஏற்பட்டது. கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் கொரோனா தொற்றால் 15 கோடியே 49 லட்சத்து 68 ஆயிரத்து 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 லட்சத்து 40 ஆயிரத்து 597 ஆக அதிகரித்துள்ளது. இது போன்ற அசாதாரண சூழலில் தான் இது போன்ற சேவைகள் பொதுமக்களுக்கு பயன்படும். 

Tags: Corona COVID Whatsapp Pandemic chatbot

தொடர்புடைய செய்திகள்

Samsung M 32 | 6000mAh பேட்டரி திறன் கொண்ட புதிய ஸ்மார்ட் போன் ; அசத்தும் சாம்சங் நிறுவனம்

Samsung M 32 | 6000mAh பேட்டரி திறன் கொண்ட புதிய ஸ்மார்ட் போன் ; அசத்தும் சாம்சங் நிறுவனம்

Facebook Smartwatch | 'இரண்டு கேமராவுடன் ஸ்மார்ட் வாட்ச்' - அடுத்தக்கட்டத்திற்கு நகரும் பேஸ்புக்!

Facebook Smartwatch |  'இரண்டு கேமராவுடன் ஸ்மார்ட் வாட்ச்' - அடுத்தக்கட்டத்திற்கு நகரும் பேஸ்புக்!

Apple ios 15 : வெளியானது ஐஓஎஸ்15 அப்டேட்! என்னென்ன வசதிகள் இருக்கு ?

Apple ios 15 : வெளியானது ஐஓஎஸ்15 அப்டேட்! என்னென்ன வசதிகள் இருக்கு ?

Surya Grahan 2021 Time: ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று; இந்தியாவில் தெரியுமா?

Surya Grahan 2021 Time: ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று; இந்தியாவில் தெரியுமா?

Twitter vs New IT Rules: சரணடைந்தது ட்விட்டர்; ஒரு வாரம் கெடு கேட்டு மத்திய அரசுக்கு கடிதம்!

Twitter vs New IT Rules: சரணடைந்தது ட்விட்டர்; ஒரு வாரம் கெடு கேட்டு மத்திய அரசுக்கு கடிதம்!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : கருப்பு பூஞ்சை நோய் மருந்துக்கான ஜி.எஸ்.டி. வரி ரத்து - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : கருப்பு பூஞ்சை நோய் மருந்துக்கான ஜி.எஸ்.டி. வரி ரத்து - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?